Thursday, July 28, 2011

தியானம்! நான் யார்? என்பதை அறிவதற்கு…

தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.
தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation)  அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.
தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.
நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச்  செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.
நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.
முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.
ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.
எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.
ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் 
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.
சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.
தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.
மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.
தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.
ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

Monday, May 16, 2011

ஓசோ தியானமுறைகள்: ஒரு ஆய்விற்கான முன்மொழிதல்

ஓசோ தியானமுறைகள்: ஒரு ஆய்விற்கான முன்மொழிதல்

 ஏதிர்வரும் பத்தாண்டுகளில் உலகத்தில் வாழும் மனிதர்கள் பலவிதமான உளவியல் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்படப்போவதாகவும், ஆகவே இது உலகத்தின் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதாகவும் ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன. ( கத்தியா ருபியா, 2009). ஏற்கனவே பல நாடுகளில் புலம் பெயர்க்கப்பட்டு வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற நாம் நமது நாளாந்த வாழ்வின் பலவிதமான கஸ்டங்களால் பல்வேறுவிதமான மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கின்றோம். இதைவிட இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் கடந்தகால போரினாலும் அதில் ஏற்பட்ட தோல்வியாலும் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அதிகமான உளவியல் மற்றும் மனநோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு மன வடுக்களையும் அழுத்தங்களையும் எதிர்நோக்குகின்றனர். மேலும் தமிழ் பேசுகின்ற இலங்கை வாழ் மலையக மனிதர்கள், தமிழக மனிதர்கள், அல்லது பிற நாடுகளில் வாழ்கின்றன தமிழ் பேசுகின்ற மனிதர்கள்;  மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மொழி பேசுகின்ற மனிதர்களும் பல்வேறு காரணங்களால் உளவியல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது எல்லா மட்டங்களிலும் சூழல்களிலும் வாழ்கின்ற மனிதர்களது நாளாந்த வாழ்வை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மட்டுமல்ல சாதாரணமாக வாழ்வதற்கு கூட தடையாக இருக்கின்றது. இவ்வாறான உளவியல் மற்றும் மன நோய்களைத் தீர்ப்பதற்கு ஜ.நாவின் மனித நலத்திற்கான பிரிவுகளும் மற்றும் பல நாடுகளிலுள்ள உடல் நல அமைச்சுகளும் சமூக நிறுவனங்களும் அமைப்புகளும் அக்கறையாக இருக்கின்றன. இதற்காக இவர்கள் ஆகக் குறைந்தது ஆறு வகையான மன அழுத்தத்தை குறைக்கின்ற இயற்கையான பக்கவளைவுகளற்ற ஆரோக்கியமான முறைகளை சிபார்சு செய்கின்றனர். இவற்றில் தியானமுறைகள், முச்சுப் பயிற்சிகள்  மற்றும் யோகாசனப் பயிற்சிகள் என்பன சிலவாகும் ( கில்லானி 2001).
மனிதர்களது ஆன்மா, மனம், உள்ளம், உடல் என்பவற்றை ஒன்றினைத்து அதன் முழுமையான செயற்திறனை அதிகரிக்கவும் மறுபுறம் மன அழுத்தத்தை குறைத்து ஆறுதலை ஏற்படுத்தவும் மிகவும் அதிகமாக ஊக்கிவிக்கப்படுகின்ற ஒருமுறை தியானம் ஆகும் (2001, 2009). தியான முறைகளில் பலவிதமான வேறுபாடுகள் உள்ளன. அதில் உடற் செயற்பாடுகளையும் மற்றும் உணர்வுகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற முறைகளையும் அல்லது அமைதியான முறைகளையும் அடிப்படையாகக் கொண்ட பல வழிமுறைகள் உள்ளன. இதில் அமைதியான தியான முறைகளான மனதை முழுமையாகக் கவனித்தல் (mindfullness) மற்றும் டிஎம் (TM) எனப்படுகின்ற தியான முறைகளே அதிகமாக அறியப்பட்டவையாக இருக்கின்றன. இம்முறைகளே புலமைசார் கல்வித் துறையிலும் அதிகமான பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டு விஞ்ஞர்ன ரீதியான நேர்மறை முடிவுகளை முன்வைத்துள்ளன. இவை தியானம் தொடர்பான முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் ஆதாரத்துடன் முன்வைத்துள்ளன. ஆனால் ஓசோவின் தியான முறையானது புலமைசார் தூறைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை. இது ஒரு முக்கியமான குறைபாடாகவே புலமைசார் துறையில் இருக்கின்றது. ஆகவே அமைதியாக இருந்து தியானம் செய்வதற்கு முதல் ஓசோவின் தியானமுறையின் படி உடல் அசைவுகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தல் மற்றும் மனதை சுத்தப்படுத்தல் என்பவை முக்கியமானதும் அவசியமானதுமான பகுதிகள் என்பதை ஆய்வினடிப்படையில் வலியுறுத்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். மேலும் ஓசோ தியானம் தொடர்பான புலமைசார் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்வதும் அவசியமானதும் பயனுள்ளது என்பதை வலியுறுத்துவதுடன் அதற்கான ஒரு முன்மொழிவையும் முன்வைக்கின்றது.
ஆண்மையில் யோர்க் பல்கலைக்கழகத்தின் இரு பேராசிரியார்கள் நடாத்திய பயிற்சிகள் இரண்டில் பங்குபற்றியிருந்தேன். இவர்கள் மனிதர்களின் உளவியலிலும் மனநிலையிலும் பிரக்ஞையிலும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான ஆய்வுகளை முன்னெடுப்பவர்கள். பேராசிரியர் லெஸ்லி கிரின் (L.Greenberg) அவர்கள் மனிதர்கள் தமது உணர்ச்சிகளை வெளியீடுவது அவர்களது உடல் உள மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது எனவும் ஆகவே உளவியல் சிகிச்சை முறைகளில் இது முக்கியமான ஒரு பகுதியாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். இது தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆய்வுகள் (Emotion focused therapy) உளவியல் உலகிற்கு புதிய வரவாக இருப்பதுடன்; மிகவும் பிரபல்யம் பெற்றுவருகின்ற ஒன்றுமாகும். மறுபுறம் போராசரியர் போல் ( Rivito Paul) அவர்கள் ஏற்கனவே மேற்குலகில் பிரபல்யமான சி.பி.டி (CBT) எனப்படும் பொக்னிட்டுவ் பிகேவியர் தேரப்பியல் (cognitive behavior therapy) தியானத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தனது ஆய்வுகளை பரிசோதனை ரீதியாக முன்னெடுத்து வருபவர். இந்த முறை உளவியல் தொடர்பான சிகிச்சையில் கடந்த சில பத்தாண்டுகளாக பிரபல்யமானது. ஆனால் இன்னும் யோகா பயிற்சிகள் போன்றளவிற்கு தியானம் என்பது பொது மனிதர்களிடம் பிரபல்யமாகவில்லை எனலாம். இவர்களது ஆய்வுகள் தொடர்பான விரிவான பார்வையை விரைவில் முன்வைக்கின்றேன்.  இங்கு இவர்களது முறைகளில் உள்ள குறைபாட்டை மட்டும் இப்பொழுது கவனத்தில ;கொள்கின்றேன். இருவரும் தங்களது முறைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமளவு மற்றவரது முறைக்கு முக்கியத்துவத்தை வழங்காது புறக்கணிக்கின்றனர் அல்லது கவனிக்காமல் விடுகின்றனர். இது இவர்களது ஆய்வுகளைப்; பொறுத்தவரை முக்கியமான ஒரு குறைபாடு என குறிப்பிடலாம்.
பேராசிரியர் கீரினது உணர்சிகளை வெளிப்படுத்துவது தொடர்பான ஆய்வு இன்றைய சுழலில் மிகவும் முக்கியமானது என்றால் மிகையல்ல. ஏனனில் நமது கலாசராத்தாலும் மற்றும் அதிகார மயப்பட்ட சூழலால் வெளிப்படுத்த முடியாது அடக்கிய அல்லது அடக்கப்பட்ட நமது உணர்ச்சிகளே, ஒருவரது மன அழுத்தம் அல்லது மனச் சோர்வுக்கு காரணமாக இருக்கின்றன. ஆகவே இவ்வாறன உணர்சிகளை வெளிப்படுத்தும் உளவியல் சிகிச்சை முறை, ஒருவர் தான் அடக்கிய அல்லது வெளிப்படுத்த முடியாது போன உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான சுழலை, சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்குகின்றது. ஆனால் ஒருவர் தனது உணர்ச்சிகளை இவ்வாறு வெளியேற்றிய பின் உருவாகின்ற மனநிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கு அவருக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. இந்த ஊன்று கோலானது இங்கு தியானம் எனக் கொள்ளலாம். ஆனால் பேராசிரியர் கீரின் தனது சிகித்சை முறையில் தியானத்தை கைவிட்டு விட்டார்.
மறுபுறம் தியானத்தை முக்கியத்துப்படுத்தும் பேராசிரியர் போல், ஒருவர் தியானம் செய்வதற்கு தடையாக இருக்கின்ற அதாவது அவர் சஞ்சலப்படுகின்ற உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காது விடுகின்றார். இது ஒருவர் அமைதியாக இருந்து தியானம் செய்வதற்கு தடையாக இருக்கின்றது. ஏனனில் இவ்வாறன உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நிலையானது ஒருவரை அமைதியாக இருக்கவிடாது. தியானம் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு அதற்கான மனநிலையை உருவாக்குவதும் முக்கியமானது. உண்மையிலையே இந்த இரண்டு ஆய்வுகளும் முக்கியமானவை. ஆனால் அவை பிரிந்து இருப்பதனால் அதன் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. இவை ஒன்றினையும் பொழுது முக்கியமான ஒரு திருப்புமுனையை அவர்களது ஆய்வில் ஏற்படுத்துவதுடன் மிகப் பெரும் பயனை அனைவருக்கும் தரக்கூடியது எனலாம். இவ்வாறன ஒரு இணைவையே ஓசோ பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி அதை பயன்பாட்டிலும் விட்டுள்ளார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அது புலமைசார் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
புலமைசார் துறையில் ஓசோவின் தியான முறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. ஒன்று அந்தோனி டி அந்திரேயாவின் (A. D’Andrea,  2007) ஓசோவின் புனே தியான இடம்  தொடர்பான சூழல்சார்;ந்த வரலாற்றுரீதியான ஆய்வுக் கட்டுரை. மற்றது அவனி வையாஸின் (A.Vyas,  2007) காலநிதிப் பட்டத்திற்காக செய்யப்பட்ட பரிசோதனை அடிப்படையிலான ;ஆய்வுக் கட்டுரை. இவர்களது கூற்றின்படி ரஜனிஸ் என அறியப்பட்ட இந்திய ஞானியான ஓசோ என்பவர் கீழக்கினதும் மேற்கினதும் தத்துவங்களையும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளையும் உள்ளடக்கி ஒன்றினைத்து புதிய தியான முறையை உருவாக்கியவர் என்கின்றனர். இவ்வாறு புதிய முறையை உருவாக்குவதற்கான் காரணம், வழமையான பராம்பரிய அமைதியான தியான முறைகள் இக் காலத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கு பெரியளவில் உதவுகின்றது இல்லை என்கின்றார் ஓசோ (2003, 2010). ஏனனில் இவ்வாறான பாரம்பரிய தியானமுறைகளை குறிப்பாக புதியவர்கள் பின்பற்றுவது மிகவும் கஸ்டமானது என்கின்றார். இருப்பினும் இவ்வாறான பாரம்பரிய தியான முறைகள் நீண்ட காலமாக பின்பற்றபட்டடும் வந்துள்ளதுடன் அந்தக் கால மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது என்கின்றார்.   இதன் காரணமாக இக் கால மக்களும் அதை அப்படியே பின்பற்றுவதால் பயனடைய முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.
குறிப்பாக புத்த்ரின் வருகைக்குப் பின்பு இந்த அமைதியான தியான முறைகள் உதாரணமாக விபாசனா போன்றவை பிரபல்யமாகியது என்கின்றார் ஓசோ. இதன் பின் கீழைத்தேய நாடுகளில் இது தொடர்ந்தும் பிரபல்யமாக இருந்ததுடன் பின்பற்றப்பட்டும் வந்துள்ளது என்கின்றார். ஆனால் மேற்கில் கடந்த சில பத்தாண்டு காலமாகவே இவ்வாறான தியான முறைகளுக்கு  முக்கியமான கவனம் வழங்கப்பட்டு வருவதுடன் புலமைசார் கல்வித்துறையிலும் இதன் உண்மையான பயன்களை அறிவதற்கான பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன என்பது மகிழ்வான விடயமே. இந்தப் பாரம்பரிய தியான முறைகளிலும் பல்வேறு வகைகள் இருந்தபோதும் அவை பொதுவாக மனிதர்களது மன அழுத்தத்தை குறைத்து அவர்களுக்கு ஆறுதலை வழங்குவதற்கும் மற்றும் நீண்ட கால குறுகிய கால நன்மைகளும் பெறக்கூடியதாகவும் உள்ளன (Weiss, Nordlie & Siegel, 2005).
இவ்வாறான பாரம்பரிய முறைகளில் குறிப்பாக விபாசனா, சென், முழுமனத் தியானம் மற்றும் டி.எம் ஆகிய முறைகளே இன்று மேற்கில் அதிகமானவர்களால் பின்பற்றப்பட்டு வருவதுடன் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுன்றன (Rubia, 2009; Smith, 2001; Shao, 2009). இவ்வாறன முறைகள் வழமையாக அமைதியாக இருந்து கண்களை மூடி தமது மூச்சையும் எண்ணங்களையும் எந்தவிதமான மதிப்பீடுகளுமில்லாது கவனிப்பதாகும். இந்த பாரம்பரிய முறையானது நமது மனச் சோர்வு மற்றும் மன அழுத்தங்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை அறிவதற்கு உதவி செய்கின்றது. மேலும் பிரக்ஞையுடன் ;மூச்சைக் கவனிப்பது என்பது நமது எண்ணங்களின் அதாவது மனதினதும் மற்றும் உணர்ச்சிகளினதும் நம் மீதான ஆதிக்கத்தை குறைக்கவும் உதவி செய்கின்றது என்கின்றனர் (Toneatto & Nguyen, 2007). இது தொடர்பான எனது விரிவான “தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…” கட்டுரையைப் பார்க்கவும்.
ஓசோ பாரம்பரிய முறைகள் மீது விமர்சனம் உள்ளவராக இருந்துள்ளார். ஏனனில் அவை மிகவும் சிராக ஒழுங்கமைகப்பட்டமையால் நம் மீதான கடந்தகால கட்டுப்பாடுகளையும் ஒழுங்கமைக்கப்பட்ட நமது மனதையும் குறிப்பிடத்தக்களவில் மாற்றாது என்கின்றார் ஓசோ.  மேலும் இக் கால மனிதர்கள் தமது உடலுடனும் செய்கைகளுடனும் எந்தவிதமான பிரக்ஞையோ தொடர்பு அற்றவர்களாக இருப்பதுடன் இயந்திரத்தனமான விரைவான வாழ்கையை வாழ்கின்றனர். மேலும் இவர்கள் தமது சமூக கலாசார ஆதிக்கத்தால் தமது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை தொடர்ச்சியாக அடக்கியே வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமின்றி இக் கால மனிதர்களின் மனம் தேவைக்கு அதிகமான அறிவையும் கொண்டுள்ளது. இவ்வாறன பிரச்சனைகளினால் மனிதர்கள் ஒரு விதமான உடல் உள மற்றும் மன பதட்டத்துடன் வாழ்வதால் அவர்களால் ஒரிடத்தில் அமைதியாகவும் ஆறுதலாகவும் இருந்து பிரக்ஞையுடன் தமது மூச்சையும் எண்ணங்களையும் கவனிப்பதற்கு கஸ்டமாக இருக்கின்றது என்கின்றார் ஓசோ (2003, 2010). இதுபோன்று சென் (Zen) மற்றும் காபாட் சின்னால் (Kabat- Zinn ) உருவாக்கி மேற்கில் பிரபல்யமான முழுமையான மனத் தியானமும் (Mindfulness-Based Stress Reduction (MBSR) தியானப் பயிறச்சிக்கு புதிதாக வருகின்றவர்களுக்கு புரிந்துகொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் கஸ்டமாகவே இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது (Smith, 2001). மேலும் தியானம் செய்வதற்காக ஒருவர் இருக்கின்ற பொழுது வழமையை விட அதிகமான எண்ணங்கள் அவர்கள் மனதில் வந்து குவிகின்றன. இது அவர்கள் அமைதியாக இருப்பதற்கான நிலையை குழப்புவதுடன் எண்ணங்கள் அற்ற ஒரு மனநிலையை; அடைய முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறான காரணங்;களே புதிய தியான முறைகளை ஓசோ உருவாக்குவதற்கு அடி;பபடையாக இருந்தன எனலாம்.
தியானம் என்பது எண்ணங்கள் அற்று அமைதியாக ஆறுதலாக இருப்பது மட்டுமல்ல.  ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுவதும் அதாவது உடல், மனம், ஆன்மா ஒன்றினைந்து ஈடுபடுவதும் தியானமாகும். இவ்வாறன ஒரு நிலையை வழமையான பராம்பரிய தியான முறைகள் மூலம் அடைவதற்கு நீண்ட கால தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த முறைகளில் இருக்கின்ற பற்றாக்குறை என்கின்றார் ஓசோ. ஏனனில் ஒருவர் அமைதியாக இருப்பதற்கு முதல் அவர் பதட்டமாக இருப்பதை குறைக்கவேண்டியது அவசியமானதாகவும் தேவையானதாகவும் உள்ளது. இந்தப் பதட்ட நிலையை குறைக்கும் பொழுது ஒருவரின் உடலும் மனமும் தானாகவே அமைதியையும் ஆறுதலையும் அடைவதுடன் இதன் விளைவாக அமைதி தொடர்பான அனுபவத்தை; nறுகின்றார் ( ஓசோ );. ஆகவேதான் தனது தியான முறைகளை ஓசோ இரண்டாகப் பிரிக்கின்றார்.
 இவரது தியானங்களில் முதலாவது பகுதி என்பது செயற்பாட்டுப் (Active) பகுதியாகவும் இரண்டாவது பகுதி அமைதியான (Passive) ஆறுதலான பகுதியாகவும் இருக்;கின்றன. முதலாவது பகுதியானது கத்துதல், அலம்புதல், கோவப்படுதல், ஆழமான விரைவான மூச்சு விடுதல், துள்ளுதல், ஆடுதல், அழுதல், சிரித்தல் என்பவற்றை பிரக்ஞையுடன் செய்கின்ற பயிற்சிகளைக் கொண்டதாகும். (D’Andrea, 2007; Vyas, 2007) . அதாவது இவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் தனது அடக்கப்பட்ட உணர்வுகள் உணர்ச்சிகள் என்பவற்றை வெளியேற்றி தனது மனதை சுத்தமாக்கி உடலையும் ஆறுதல்படுத்துகின்றார். இதன் மூலம் தனது மனம் உடல்; ஆகிய இரண்டுடனும்; மீண்டும் ஒன்றினைகின்றார்;. இதன் விளைவாக ஒருவருக்கு தியான நிலையானது இயற்கையாகவே ஏற்படுகின்றது. மேலும் இதன்பின் தனது மூச்சை தொடர்ச்சியாக ஒருவர் கவனிப்பதன் மூலம் தியானத்தின்; சிறிய அனுபவத்தை ஒருவர் விரைவாக பெறமுடிகிறது என்கின்றார். இதனால் தான் ஓசோ தனது தியான முறையில் இவ்வாறான முதல் பகுதியை உருவாக்கினார். இதன்பின்பே ஒசோ தியானத்தின் இரண்டாவது பகுதியான பிரக்ஞையுடன் கவனித்தல் அல்லது அமைதியாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கினார். ஏனனில் இவ்வாறன ஒரு மன அமைதியும் உடல் ஆறுதலாக இருக்கின்ற நிலையில்தான் பாரம்பரிய தியான முறையை பயிற்சி செய்வது இலகுவானதாக இருக்கின்றது.
போராசிரியர் லெஸ்லி கீரின்பேக்  (Leslie Greenberg, 2008) தனது உணர்ச்சிகளை மையப்படுத்தியும் அதை வெளிப்படுத்தும் உளவியல் சிகிச்சை தொடர்பான பரிசோதனை அடிப்படையிலான விஞ்ஞான ஆய்வின் மூலம் அதன் முக்கியத்துவத்தை நிறுபித்துள்ளார். இவரது ஆய்வின்படி ஒருவருக்கு தனது உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அவரது மனமும் உடலும் ஆறுதலடைகின்றது என்கின்றார். போராசிரியர் கீரின்பேக்கின் இவ்வறான ஆய்வின் முடிவுகள் ஓசோ முன்வைக்கின்ற தியானத்தின் முதலாவது பகுதியை விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் உறுதிப்படுத்துகின்றது எனக் கூறலாம். அதாவது கீரின் பேக்கின் ஆய்வின் முடிவின்படி ஒருவர் ஆரோக்கியமான உடலும் மனமும் இருக்கவேண்டுமாயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலும் பிரக்ஞையும் முக்கியமானது எனக் கூறுகின்றார். மறுபுறம் உணர்ச்சிகளின் வெளிப்பாடானது ஒருவரது மனச் சோர்வை மன அழுத்தத்;தை குறைப்பதற்கும் மற்றும் ஆறுதலையும் பிரக்ஞையையும் அதிகரிப்பதற்கும் முக்கியமானதாகும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் மன அழுத்தம் மனச் சோர்வு என்பன நாம் உணர்ச்சிகளை அடக்குவதாலையே உருவாகின்றன என்கின்றார். இந்தக் கூற்றுகளை புலமைசார்ந்த ஆய்வுகளும் வலிறுத்துகின்றன. அதாவது அழுகை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதானது ஒருவர் ஆறுதலடைய வழி செய்கின்றது. இவ்வாறு வெளிப்படுத்தாது விடுவாரேயானால் அவருக்கு உடல் மற்றும் உளவில் ரீதியான பாத்திப்புகளும் மற்றும் மனச் சோர்வு மன அழுத்தம் என்பன ஏற்படலாம் என்கின்றனர். இதனால் உணர்ச்சிகளை நேர்மறை எதிர்மறை என பாகுபடுத்துவது கஸ்டமானதாக உள்ளது எனனில் இரண்டுவகையான உணர்ச்சிகளின் வெளிப்பாடும் ஒரு மனிதரை குணப்படுத்த உதவுகின்றது என்கின்றார் கீரின்பேக்.
மறுபுறம் இந்த உணர்ச்சியானது மேலோட்டமானதா அல்லது இதுவே மன் அழுத்தத்திற்கும் பிற உளவியல் பிரச்சனைகளுக்கும் பிரதானமான அடிப்படை உணர்ச்சியா என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்கின்றார் கீரின்பேக். இந்த அறிதலே குறிப்பிட்ட மனிதரின் உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு உதவி புரியும். ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது அது இன்னுமொரு அடக்கப்பட்ட உணர்ச்சி வெளிவருவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது என்பதை ஓசோ மட்டும்ல்ல இவ்வாறன ஆய்வுகளில் ஈடுபட்ட அனைவரும் உடன்படுகின்றனர் (Pascual-leone & Greenberg, 2007). அதாவது ஒருவர் சிரிக்கும் பொழுது அழுகையும் அழும் பொழுது சிரிப்பும் மிக இயல்பாக வெளிப்படுகின்றன (osho). இவ்வாறு இரண்டாவதாக வெளிவருகின்ற உணர்ச்சியே ஒருவரது மன அழுத்தம் அல்லது மனச் சோர்விற்கான பிரதானமான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது  (Greenberg, 2007).  அதாவது ஒருவரது உளவியல் பிரச்சனைக்கான மூலமாக இருக்கின்றது. ஆகவே ஒருவர் ஒரு உணர்ச்சியை ;இது எந்தவகையான உணர்ச்சியாக இருந்தபோதும் அதை வெளிப்படுத்தும் பொழுது அதை பிரக்ஞையுடன் கவனிப்பது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் தமது அடக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளிவிட்டபின் அவர்களை நேர்மறையான ஆற்றலுக்கும் வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் நேர்மறையான சக்தி தேவைப்படுகின்றது. இந்த வேலையை சிரிப்பு செய்கின்றது.
 
சிரிப்பு தொடர்பான மேலதிக விரிவான விபரங்களை “சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு. – கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை” இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சிரிப்பு இரண்டுவிதமான செய்பாடுகளை மேற்கொள்கின்றது. முதலாவது சிரிப்பு மன அழுத்தத்தையும் மன்ச் சோர்வையும் குறைத்து எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையாகவும் மாற்றவும் செய்கின்றனது. மேலும் அதிகளவான செயற்திறனை அதிகரிக்கின்ற மனித சக்தியையும் உருவாக்கவும் உதவுகின்றது (ஓசோ 2003, 1995). ஆகவே சிரிப்பை ஒரு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் (Davidhizar and Bowen, 1992). இது மனிதர்களிடம் இருக்கின்ற இயற்கையான சக்தி என்பதுடன் பல உடல் உளவியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வழிசெய்கின்றது. ஒருவர் முழுமையாகவும் நன்றாகவும் சிரிப்பாரேயானால் அவருக்கு தியான நிலை தானாகவே உருவாகலாம் ( ஓசோ ). ஆகவே தான் உணர்ச்சிகளை வெளியேற்றிய பின்பும் மனதை சுத்தம் செய்த பின்பே தியானம் செய்வது இலகுவானதாக இருப்பதால் தியானம் அல்லது அமைதியாக கவனித்தல் என்பதை தனது முறையின் இரண்டாவது பகுதியாக ஓசோ இணைத்துள்ளார்.
தியான நிலை என்பது அமைதியாகவும் அதேநேரம் ஒன்றில் முழுமையாகவும் பிரக்ஞையாகவும் இருப்பதாகும். இது மனதிலிருந்து எண்ணங்களை நீக்குவதற்கும் மற்றும் மனம் உடல் என்பன ஆறுதலாக இருப்பதற்கும் உதவுவதுடன் தன்னிலையை அறிவதில்  முக்கிய பங்காற்றுகின்றது ( Rubia 2009).  அதேநேரம் எந்த ஒன்றையும் மதிப்பிடாமல் இருப்பதற்கும் இது வழிசெய்கின்றது (Sutorius , 1995). ஆகவே தியானமானது உடல் மன ஆறுதலை தருவதுடன் உடல் உள்ளம் மனம் உணர்ச்சிகள் என்பவற்றுக்கிடையில் சமநிலையைப் பேணுகின்றது. மேலும் ஆங்கில மருந்துகள் உருவாக்கும் பக்கவிளைவுகள் போல் தியானம் செய்வதால் ஏற்படுவதில்லை என்பதுடன் தியானத்தை நாம் இலவசமாகவே செய்யலாம் என்கின்றனர் (Rubia 2009). அதாவது தியானம் என்பது இயற்கையான மருந்து என்பதுடன் மனச் சோர்வு அழுத்தம் என்பவற்றைக் குறைப்பது மட்டுமல்ல பல உளவியல் பிரச்சனைகளை தீர்த்து நேர்மறையான பக்கவிளைவுகளைத் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தருகின்றது (Oman et al., 2008; Skevington & White, 1998). இது பல விஞ்ஞான அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுகள் மூலம் நிறுப்பிக்கப்பட்டுள்ளது (2008). மேலும் ஓசோவைப் பொறுத்தவரை தியானம் என்பது ஒருவரது பிரக்ஞையை மேன்மேலும் வளர்ப்பதற்கும் அதாவது மனிதரது பரிணாம வளர்ச்சிக்கும் இக் கணத்தில் முழுமையாக வாழ்வதற்கும் உதவி செய்கின்றது. பிரக்ஞை தொடர்பான விரிவான கட்டுரையைப்  “பிரக்ஞை: ஆரோக்கியமான படைபாற்றாலுக்கான மூலம்!” பார்க்கவும்
 
முடிவாக சிரிப்பு, அழுகை, கோவம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடானது ஒருவரில் ஆறுதலை ஏற்படுத்தவும் மனச் சோர்வை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதை நிறுபிப்பதற்காக ஓசோவின் தியான முறைகளை பரிசோதனை அடிப்படையிலான ஆய்வுகள் செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். பல வகையான ஓசோ தியான முறைகள் உள்ளன. இவை அணைத்திலும் முதல் பகுதி பல வகையான உடல் அசைவுகளை இயக்கங்களைக் கொண்டதும் இரண்டாவது பகுதி அமைதியானதும் ஆறுதலானதும் பிரக்ஞையுடன் கவனிப்பதுமாகும். இதை ஒசோவின் அமைதியான தியான முறையான விப்பாசனாவுடன் அதாவது முழுநேரமும் மூச்சைக் கவனிக்கும் முறையுடன் ஒப்பிட்டு இந்தப் பரிசோதனையை நிகழ்த்தலாம்.
உதாரணமாக ஓசோவின் பின்வரும் தியான முறைகள் விஞ்ஞான ரீதியான பரிசோதனை ஆய்விற்காக பயன்படுத்தலாம். இவரது தியான முறைகளிலையே மிகவும் பிரபல்யாமானதும் முக்கியமானதுமான தியான முறை ஓசோ டைனமக் தியானம் ஆகும். இது முதலில் விரைவான மூச்சை வெளிவிடுதலுடன் ஆரம்பித்து பின்பு நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தலுடன் (கோவம் சிரிப்பு அழுகை) தொடர்ந்து துள்ளுவதன் ;மூலம் நமது சக்தியை தட்டி எழுப்புவதுடன் முதல் பகுதி நிறைவடைகின்றது. பின் இந்த செயற்பாடுகளினால் ஏற்பட்ட் மாற்றங்களை பிரக்ஞையுடன் அவதானித்தல் நாம் தியான நிலையை உணர்வதற்கான பகுதியாக இருக்கின்றது. இறுதியாக நாம் புதிதாக உணர்ந்ததை அனுபவித்ததை ஆனாந்தமாக கொண்டாடி மகிழ்கின்றமை இறுதிப்பகுதியாகும். இவ்வாறு ஓசோ டைனமிக் தியானம் ஜந்து பகுதிகளை கொண்டுள்ளது.
இதேபோல நமது உடம்;பை முழுமையாகக் குழுக்குவதன் மூலம் நமது மூட்டுக்களில் உறைந்து கிடக்கும் நமது சக்திகளை எழுப்புதல் எனப்படும் குண்டலினி தியானம் இவ்வாறான ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியது ஆகும். மேற்குறிப்பிட்டவாறு உடலைக் குழுக்குவதன் மூலம் உயிர்ந்தெழுந்த நமது சக்திகைள் ஆடல் மூலம் நேர்மறையாகப் பயன்படுத்துவதுடன்; இறுதியாக அதுவரை நடைபெற்ற மாற்றத்தை அமைதியாக இருந்து பிரக்ஞையுடன் கவனித்தல் என்பதுடன் நிறைவு பெறுகின்றது..
இறுதியாக சிரிப்பு தியானம். காரணங்கள் எதுவுமில்லாது சிரித்தல். புpன் அமைதியாக இருந்து மாற்றத்தை கவனித்தல். இதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
இவ்வாறன தியானமுறைகள் போரினாலும் மற்றும் வன்முறைகளாலும் பாலியல் துன்புறுத்தல்களாலும் மற்றும் இயற்கை அனர்ந்தங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மனிதர்களுக்கு பலவிதங்களில் உதவி செய்யக் கூடியது. ஏனனில் இந்த மனிதர்கள் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளால் பல வகைகளிலும் உளவியல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவ்வாறன பயிற்சிகள்; மூலம் அந்த மனிதர்;களை மீளவும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கலாம். இந்தப் பயிற்சிகள் இவ்வாறான நேர்மறை விளைவுகளைத் வழங்குமா என்பது தொடர்பாக விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து நிறுபிக்க்லாம். இதன் மூலம் மனிதர்களி;ன் குறிப்பாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உகந்தது என சிபார்சு செய்யலாம்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மனிதர்களுக்கு உதவ விரும்புகின்றவர்களும் இவ்வாறன விடயங்களில் அக்கறையும் ஆர்வம் உள்ளவர்களும் இது தொடர்பாக சிந்திக்கலாம். ஆதற்கான ஒரு ஆரம்பமே இந்தக் கட்டுரை. ஏனனில் ஆரோக்கியமான ஒரு சமூகமே தனது உரிமைகளுக்காவும் விடுதலைக்காகவும் போராடுவதற்காக ஆரோக்கிமான ஒரு பாதையை தேர்தெடுத்து செயற்பட முடியும்.
மீராபாரதி
படங்கள்: osho.com
இணைப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்ப்பதற்கு
http://awakeningawareness.org/
 http://praknjai.blogspot.com/
http://meerabharathy.wordpress.com/category/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
 உசாத்துணைகள்

  • Cueva, M., Kuhnley, R., Lanier, A., & Dignan, M. (2006). Healing hearts: Laughter and learning. Journal of Cancer Education, 21(2), 104-107.
  • Canadian Mental Health Association, (2011). Coping with Stress. Mental Health Week. Retrieved, 05, 2011, from http://www.cmha.ca/bins/content_page.asp?cid=2-28-30&lang=1.
  • D’Andrea, A. (2007). Osho international meditation resort (PUNE, 2000s): An anthropological analysis of sannyasin therapies and the Rajneesh legacy. Journal of Humanistic Psychology, 47(1), 91-116.
  • Davidhizar, R., & Bowen, M. (1992). The dynamics of laughter. Archives of Psychiatric Nursing, 6(2), 132-137.
  • Donnellan, M. B., Oswald, F. L., Baird, B. M. & Lucas, R. E. (2006). The Mini-IPIP Scales: Tiny-yet-effective measures of the Big Five Factors of Personality. Psychological Assessment, 18(2), 192-203.
    Gillani, N.B., & Smith, J.C.  (2001). Zen meditation and ABC relaxation theory: An exploration of relaxation states, beliefs, dispositions, and motivations. Journal of Clinical Psychology, 57(6), 839-846.
  • Greenberg, L. (2008). Emotion and cognition in psychotherapy: The transforming power of affect. Canadian Psychology, 49(1), 49–59.
  • Keltner, D., & Bonanno, G.A. (1997). A study of laughter and dissociation: Distinct correlates of laughter and smiling during bereavement. Journal of Personality and Social Psychology, (73)4, 687-702.
  • Kuiper, N. A., & Martin, R. A. (1998). Laughter and stress in daily life: Relation to positive and negative affect. Motivation and Emotion, 22(2), 133-153.
  • Martin, R.A. (2001). Humor, laughter, and physical health: Methodological issues and research findings. Psychological Bulletin, 127(4), 504-519.
  • National College Health Assessment Survey Results, (2010). Retrieved December, 13, 2010, from York University website: http://www.yorku.ca/scld/healthed/ncha_survey.html#stress.
  • Oman, D., Shapiro, S. L., Thoresen, C. E., Plante, T. G., & Flinders, T. (2008). Meditation lowers stress and supports forgiveness among college students: A randomized controlled trial. Journal of American College Health, 56(5), 569-578.
    • Osho. (2010). The Psychology of the Esoteric. Retrieved December, 4, 2010, from http://www.osho.com/Main.cfm?Area=Magazine&Language=English.
    • Osho. (2003). Meditation: The art of ecstasy. (5th ed.) Pune: Tao Publishing Pvt. Ltd,
    • Pascual-leone, A & Greenberg, L.S. (2007). Emotional processing in experiential therapy: Why “the Only Way Out Is Through”. Journal of Consulting and Clinical Psychology, 75(6), 875–887.
    • Rubia, K. (2009). The neurobiology of meditation and its clinical effectiveness in psychiatric disorders. Biological Psychology, 82, 1-11.
    • Shao, R., & Skarlicki, D. P. (2009). The role of mindfulness in predicting individual performance. Canadian Journal of Behavioural Science, 41(4), 195-201.
    • Skevington, S. M., & White, A. (1998). ‘Is laughter the best medicine?’ Psychology & Health, 13(1), 157-169.
    • Smith, J.C. (2005). Assessment Tools. In Relaxation, meditation, & mindfulness: A Mental health practitioner’s guide to new and traditional. (chap.17) Retrieved October, 22, 2010, from York University Library website: http://site.ebrary.com/lib/oculyork/Top?id=10265596.
    • Sutorius, D. (1995). The transforming force of laughter, with the focus on the laughing meditation. Patient Education and Counseling, 26, 367 – 371.
    • Toneatto, T. & Nguyen, L. (2007). Does mindfulness meditation improve anxiety and mood symptoms? A review of the controlled research. Canadian Journal of Psychiatry, 52(4), 260-266.
      • University Health Network, (2011). Mindful Cognitive-Behaviour Therapy Program. Retrieved, 05, 2011, from http://www.uhn.ca/About_UHN/programs/pain_management/docs/mindfulness.pdf.
      • http://www.uhn.ca/About_UHN/programs/pain_management/patientinfo/mindfulness.asp
      • Vyas, A. (2007). Effects of Seven-Day Osho Dynamic Study: A Pilot Study. Psychological Science: Research, Theory and Future Directions. Ed. by Kostas Andrea Fanti. ATINER.
      • Weiss, M.,  Nordlie, J.W. & Siegel, E.P.(2005). Mindfulness-Based Stress Reduction as an adjunct to outpatient psychotherapy. Psychotherapy and Psychosomatics, 74(2), 108-112. http://site.ebrary.com/lib/oculyork/Top?id=10265596.
      • Zayfert, C & Becker, C.B. (2007). Cognitive-Behavioural Therapy for PTSD. A case formation Approach. The Guilford Press. New York.

Sunday, May 15, 2011

நமக்காகவே மனம்!

Saturday, May 14, 2011

பெண்; விடுதலை! ஒரு புதிய பார்வை…பாதை…

பெண் விடுதலை சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு இன்றைய உலகில் அதிகரித்துவருவது முன்னேற்றமான விடயம். குறிப்பாக ஆண்களும் கடந்தகால ஆண்மைத் தன்மையின் இயல்புகளின் தவறுகளையும் அதன் பெண்ணீய எதிர்ப்புணர்வையும் புரிந்து கொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் முயற்சிக்கும் முக்கியமான காலகட்டம் இது. ஆகவே சமூக அரசியல் தளங்களில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும்; பெண்கள் பெண்ணீயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. காரணம் கடந்தகாலங்களில் சமய நிறுவனங்கள் பெண்ணை பெண்மையை அடக்கி ஒடுக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது வெளிப்படையான உண்மை.
சமய நிறுவனங்களிலிருந்து ஆன்மிக செயற்பாட்டை பிரித்து எடுத்து தனித்து நிறுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஏனனில் ஆன்மீகம் தனிநபர் சுதந்திரம் விடுதலை தனித்தன்மை சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பாதை இது. ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

உண்மையில் பெண்ணீய பிரச்சனை என்பது தவறான ஒரு ஆரம்பம்.
பிரச்சனை ஆண்களினதே. அவர்களது மன உளவியல் சார்ந்த தாழ்வுச்சிக்கலில் உருவானதே பெண் அடிமைத்தனம். ஆகவே அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்கள் குணமடையும் பொழுது பெண்களைப் புரிந்துகொள்வார்கள். மதிப்பார்கள். பெண்கள் தம் இயல்பை பெண்மையை பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் விதைத்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தம் ஆழ் மனங்களிலிருந்து வேரோடு வெட்டி எறியவேண்டும்.

பெண்மையின் சக்தி கண்டு பயந்த ஆரம்ப கால மனிதர் பெண்மையின் இயல்புகளை பண்புகளை குற்றம் கூறி குறை கண்டனர். அதனை வெளிப்படுத்தாதவாறு வரைமுறைகளை அமைத்து அடக்கினர். மீறி வெளிப்படுத்தியவர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டித்தனர், தண்டித்தனர். கீழ்தரமாகவும் தாழ்நிலையிலும் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட
னர். இது பெண்களின் இரத்தத்திலும் எலும்புகளிலும் நன்றாக ஊடுருவியுள்ளது. ஆண்களின் குறிப்பாக ஆண்தன்மையின் இயல்புகளும் பண்புகளும் பெண்களினதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் முடியும் என்பது ஆண்களிடம் தாம் அவர்களைவிட குறைந்தவர்கள் என்ற தாழ்வுச் சிக்கலையும் இயலாமை உணர்வையும் உருவாக்கிவிட்டது. குறிப்பாக பெண்கள் குழந்தைகளைப் பெறுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காம இன்ப (orgasm) உணர்வை அடுத்தடுத்து இயல்பாகப் பெறுவதும் ஆண்களால் முடியாத ஒன்று. இதுவும் ஆண்களிடம் தாழ்வுச்சிக்கலை உருவாக்கியது. தாம் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கு பெண்களை தம் உடலற்பலம் கொண்டு அடக்குவதையும் அவர்களது பண்புகளையும் இயல்புகளையும் சட்டங்கள் இயற்றிக் கண்டித்தனர். இவ்வாறு மிகப் பலமாக இருந்த பெண்ணை பெண்மையை பல்லாயிரம் ஆண்டுகளாக “பெண் பலகீனமானவள்”எனக் கூறி பெண்ணினது அடி மன ஆழத்தில் இக் கருத்தியலைப் புதைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல ஆயிரம் பெண்கள் பேரின்பத்தின் ஒரு பகுதியான சிற்றின்பம் (orgasm) என்ன என்பது தெரியாமலே தாமும் அதற்கு தகுதியானவர்கள் அனுபவிக்கக் கூடியவர்கள் என்பதை அறியாமல் வாழ்ந்து இறந்திருக்கின்றனர். ஆண்களால் தொடர்ச்சியாக இன்பத்தை வழங்க முடியாததாலும், பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) என்னவென்று தெரியுமாயின் ஆணால் ஒரு முறைகூட பெண்ணை திருப்தி செய்யமுடியாது என்பதை பெண் கண்டு பிடித்துவிடுவாள் என்பதாலும் பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) கிடைக்காதவாறு அது என்னவென்று அறிய முடியாதவாறு பெண்களை அடக்கி ஒடுக்கினர். தடைகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினர் ஆண்கள்.

இந்த நூற்றாண்டிலையே காம புணர்வில் இருக்கும் பொழுது உருவாகும் குறிப்பான இன்பம் (orgasm) அடையாளங் காணப்பட்டது. இந்த இன்பம் தொடர்பாக கிழக்கிலோ மேற்கிலோ எந்தவிதமான பாலியல் நூல்களிலும் அதுவரை குறிப்பிடவில்லை. இது மிகவும் முரண்பாடானது.

ஆண்களுக்கு பெண்கள் என்றும் கவர்ச்சியாக இருக்கின்றனர். அழகாகவும் இருக்கின்றனர். ஆகவே பெண்களிடம் காதலில் விழுகின்றனர். பெண் ஆணிண் போதையாகின்றாள். இங்கு மேலும்; பிரச்சனை ஆரம்பிக்கின்றது. பெண்களிடம் தாம் தங்கியிருக்கின்றோம் என்பது ஆணால் சகிக்கமுடியாததாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மனதைத் துன்புறுத்துகின்றது. ஆண்களின் இந்த உணர்வானது பெண்களை மேலும் அடிமைப் படுத்துவதற்கு வழிகோலியது. மேலும் பெண் அழகாக இருப்பது ஆணுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது. காரணம் ஒரு ஆணுக்கு மட்டும் பெண் அழகாக இருக்கமுடியாது அவளைப் பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் அவள் அழகாக இருப்பாள். இது அவளுடன் தொடர்பு கொள்ளவும் உறவை ஏற்படுத்தவும் வழியமைக்கின்றது. ஆணாதிக்க மனதில் அவனது தன்முனைப்புக்கு இது பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான போக்கு அடக்குமுறை நாடுகளுக்கு தேசங்களுக்கு பண்பாடுகளுக்கு கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் பொதுவானதாக இருந்திருக்கின்றது. ஏனனில் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் மனோபாவம் தான் பெரியவன் பலசாலி புத்திசாலி திறமைசாலி என தன் தாழ்வுச்சிக்கலால் நிறுபிக்க வேண்டிய உறுதி செய்யவேண்டிய மனப்பான்மை இருக்கின்றது. நாம் ஒன்றை நிறுபிக்க முற்படுகின்றோமாயின் நாம் அவ்வாறு இல்லை என்பதானால் தான். உண்மையிலையே உயர்ந்தவருக்கு தன்னை நிறுபிக்கவேண்டிய தேவையில்லை. சாட்சிகளோ காரணங்களோ தேவையில்லை. ஒருவர் எல்லாவற்றிலும் உயர்ந்தவரர் எனின் குறைந்த புத்தியுள்ளவரால் கூட அடையாளம் காணமுடியும். ஏனனில் அவரிடம் அந்த காந்த சக்தி இருக்கும். பெண்ணை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்காக பெண்ணை ஒரு உப மனித இனமாகவே ஆண் அடையாளப்படுத்தினான். தனக்கு சரிசமமானவள் எனக் கருதியதில்லை.

இயற்கை மிகவும் சக்திவாய்ந்தது. புத்திக் கூர்மையானது.(intelligent) இதனால் தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வௌ;வேறு பண்புகளையும் இயல்புகளையும் படைத்துள்ளது. ஓவ்வொரு பண்புக்கும் இயல்புகளுக்கும் ஒவ்வொருவிதமான பொறுப்புக்கள் வாழ்க்கையில் உண்டு. எந்த ஒரு இயல்போ பண்போ ஒன்றைவிட ஒன்று குறைந்ததுமல்ல கூடியதுமல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. இதைப் புரிந்துகொண்டு நம் பணிகளையும் பொறுப்புக்களையும் முழுமையுடன் செய்யும் பொழுது வாழ்வு மட்டுமல்ல ஒவ்வொரு கணமும் நிறைவு பெற்று ஆனந்த மயமாக இருக்கின்றது. ஆணுக்கு நிகராய் பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பங்குபெற வேண்டும். ஆண்கள் (ஆண் தன்மை போக்கு) மட்டும் பங்கு பெறுவதனாலையே யுத்தங்களும் ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாத பூச்சாண்டிகளும் ஆயுத உற்பத்திகளும் நடைபெறுகின்றன. வாழ்க்கiயில் அழகியல் என்பது பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகிவிட்டது.

பெண் விடுதலை முன்னணி உருவாக்கப்பட வேண்டும் ஆனால் அது எதிர்ப்புணர்வின் அடிப்படையிலோ கோவத்திலோ வெறுப்பிலோ உருவானதாக இருக்கக்கூடாது. மாறாக புரிந்துணர்வின் அடிப்படையிலும் அன்பு காதல் என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.இன்றைய பெண்விடுதலைப் போராட்டம் பிரங்க்ஞையற்ற ஆண்களுக்கு எதிரானதாக எதிர்விளைவாகவே இருக்கின்றது. இது மாறவேண்டும். கடந்த காலங்களிலிருந்து அடக்கியாளும் ஆண்கள் தாம் என்ன செய்கின்றோம் என்ற சுய பிரங்க்ஞை இன்றியே பெண்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களது மனதில் வேருண்டப்பட்ட கருத்துக்களில் இருந்தே செயற்பட்டனர். நாம் புரட்சி செய்ய வேண்டியது கடந்த காலத்திற்கு,! கடந்தகால ஆதிக்கத்திற்கு எதிராகவே! ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராகவே! போராட்டம் நடைபெறவேண்டும்.

ஆண்கள் களைத்து தோற்றுப்போனார்கள்!
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஐயாயிரம் யுத்தங்களை நடாத்தியிருக்கின்றார்கள். இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான காலமே அமைதியான சமாதான நாட்கள். உண்மையாக இவை அடுத்த யுத்தத்திற்கான தயாரிப்பு நாட்களே. ஆண்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் போதும்.

இனிவரும் காலம் பெண்களின் காலம் என்பதே என் பார்வை. இது பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்யையையம் ஒளியும் வழியும் தரும் என ஓசோ கூறுகின்றார்.


ஓசோவின் பெண் விடுதலை! புதிய பார்வை என்ற புத்தகம் மேலும் பல விரிவான விளக்கங்களைத் தருகின்றது

புதிய குழந்தை!

உறவு! வானத்தில் சுதந்திரமாய் பறக்க…..

காதல்: மானுடத்தின் வளர்ச்சிக்கு…

காமம்! பேரின்பத்தின் ஆரம்ப அனுபவம்

சக்தி

மூச்சு

Monday, January 24, 2011

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு. - கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு.

- கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

சிரிப்பு மனிதரின் இயற்கையான இசை.

மனம் விட்டு சிரி

யார் எங்கே தொலைத்தார்; தம் சிரிப்பை…?

யார் களவெடுத்தார் மனதரின் சிரிப்பை….?

யார் அடக்கினார் வரலாற்றில் மனிதரின் சிரிப்பை…?

சிரிப்பின் ஆரம்பம் மனிதக் குரங்குகளிலும் இருந்துள்ளது. இவை ஆறுதலாக இருக்கும் பொழுது சிரிக்கின்றன. குழந்தைகள் பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலையே சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதற்கு குழந்தைகளுடன் விளையாடுவதும் அவர்களுக்கு கிளிகிளுப்புட்டுவதும் மற்றும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்களும் காரணமாக இருக்கின்றன. ஆரம்ப கால மனிதர்கள், விளையாட்டாக நடைபெறும் சண்டை பிடிக்கின்ற சமூக நிகழ்வுகளில் பொதுவாக “ஆஹா…அஹா…அஹா…” என சிரிப்பதுண்டு என்கின்றனர். Dacher Keltner & George A. Bonanno என்பவர்கள் தங்களது சிரிப்பு தொடர்பான ஆய்வின் மூலம் பல விடயங்களைக் கூறுகின்றனர். இவ்வாறு மனிதர்கள் சிரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல. தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. தமது மேலாதிக்க தன்மையை வெளிப்படுத்துவதற்கு மனிதர்கள் சிரிப்பதாக டார்வின கூறுகின்றார். சிக்மன் பிரைடடோ> மனிதர்கள் தமது பதட்டமான உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்காக சிரிக்கின்றனர் என கூறுகின்றார். மனிதர்களது சிரிப்பு “ஹி…ஹி…ஹி…” என ஆரம்பித்து “ஹா…ஹா…ஹா” எனவும்> பின் “ஹோ…ஹோ…ஹோ” எனவும் தொடர்கின்றது. இதன்போது வாய் அகலமாக திறபட> முகத் தசைகள் தளர> இதயத் துடிப்பும் மூச்சும் அதிகரிக்க மனிதர்களது உடல் உள மன பகுதிகள் ஆறுதலடைகின்றன. மூளையின் சில பகுதிகளில் இதன்போது இயங்கி பல்வேறு விதமான றோமோன்களை வழங்குகின்றது. நேர்மறை உணர்வுகள் உணர்ச்சிகள் உருவாகின்றன. மனிதர்கள் ஆரோக்கியமான பார்வைகளையும் உறவுகளையும் கொண்டு ஆனந்தமாக வாழந்தனர். இன்றும் இவ்வாறு வாழலாம். ஆனால் மனிதர்களின் சிரிப்புக்கு என்ன நடந்தது?

மனித சிரிப்புக்கு வரலாற்றில் என்ன நடந்தது என்பதை அறிவதே ஒரு புதிய கட்டுரையைத் தரும். சுருக்கமாக பார்க்கும் பொழுது குறிப்பாக ஐரோப்பிய மையவாத சிந்தனைகளாலும் அது பரப்பிய மனித நாகரிகங்களாலும் மனதர்களது சிரிப்பு அடக்கப்பட்டு விட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே பொது இடங்களில் வாய்விட்டுச் சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இவர்கள் பலவகைகளிலும் சமூகத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார பலம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ஆண்களாக இருப்பார்கள். அதிகாரமில்லாத அல்லது அடக்கப்படும் ஆண்கள் மறைவாகவோ அல்லது தமது வீடுகளுக்குள் மட்டுமே சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இதற்குமாறாக அதிகாரத்தில் உள்ளவர்களின் முன் வாய் திறந்து சிரிப்பதானது அதிகாரத்தில்; உள்ளவர்கள் கேலி செய்வதாக அர்த்தப்படுத்தப்பட்டு சிரிப்பவர் தண்டைனைக்கும் உள்ளாகியுள்ளனர்;. மறுபுறம் பெண்ணிய பார்வையில்> பெண்கள் வீட்டிற்குள் கூட சிரிக்க முடியாத நிலையே இன்றும் பல சமூகங்களில் காணக்கிடைக்கின்றது என்பதைக் அறியலாம். இதனால்தான் தமிழ் சமூகங்களில் பொது இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் பெண்களை சமூகம் மதிக்காததுடன் அவர்களை கீழானவர்களாகவே கணிக்கின்றது. பொது இடங்களில் மேலும் புல சமூகங்களில் சிரிப்பவர்கள் பைத்தியக்காரர்களாகவும் கண்ட இடங்களில் சிரிப்பது அநாகரிகமாகவும் கணிக்கப்பட்டு சமூகங்களிலிருந்தும் பொது நிகழ்வுகளிலிருந்தும் ஓதுக்கி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக குடும்பங்களில் பாடசாலைகளில் மத நிறுவனங்களில் குழந்தைகள்; தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வாறு மனித வாழ்க்கை மட்டுமல்ல அவர்களிடம் இருந்து பிறந்த இயற்கையான இசையான சிரிப்புக்கு கூட வரலாற்றில் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அதிகார வர்க்கங்களால் படாதபாடு படுத்தப்பட்டுள்ளது. அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தனிக் கட்டுரையாக விரிவாக எழுதுகின்றேன். இக் கட்டுரையின் நோக்கம் சிரிப்பினால் ஏற்படுகின்ற உடல் உள மன மற்றும் ஆன்மாவிற்கான நன்மைகள் என்ன என்பதை அறிவதே.

சில சமூகங்களில் குறிப்பாக அமெரிக்க அலஸகாவின் வாழ்கின்ற பூர்வீக அல்லது செவ்விந்திய மனிதர்களின் சமூகங்களில் சிரிப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல பல நோய்களைக் குணமாக்குகின்றன மருந்து என்பது; அறிவதற்கு ஆச்சரியமான ஒன்று. இச் சமூகங்களில் சிரிப்பு என்பது யோக பயிற்சி செய்வதுபோல் அனைவருக்கும் குழந்தைகளிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஏனனில் சிரிப்பானது தமது உடல் உள்ளம் மனம் என்பவற்றை சுத்தம் செய்கின்றனர் எனக் கூறுகின்றனர் (Cueva, Melany , etl., 2006). இந்த விபரங்களை சிரிப்பு தொடர்பாக Albert Nerenberg உருவாக்கிய Laughology என்ற விவரண திரைப்படத்திலும்; காணலாம். தமிழில் மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும் என்று கூறப்படுவது நாம் அறிந்ததே. இதனால்தான் சிரிப்பை புற்றுநோய் மற்றும் உடல் நோ அதிகம் உள்ள நோயாளர்களுக்கும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தி அவர்களது நோவைக் குறைக்கப் பயன்படுத்துகின்றனர். மேலம் சிரிப்பானது சிரி;ப்பவருக்கும் மட்டுமல்ல அருகிலிருப்பவரையும் குணப்படுத்துகின்றது என்கின்றனர்.

மனிதருக்கு கிடைத்த இந்த இயற்கையான சிரிப்பின் மூலம் ஒருவரது உடல் உள மற்றும் ஆன்மாவிலுள்ள பல்வேறு நோய்களை உதாரணமாக மன அழுத்தம்> உடல் நோ> மனப்பாதிப்பு> எனப் பலவற்றைக் குணப்படுத்தலாம் என்க் கூறுவது ஓசோ மட்டுமல்ல மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் (Ruth Davidhizar and Margaret Bowen (1992). மறுபுறம் செயற்கையான சிரிப்பினால் பயனில்லை என மேற்குலகின் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டாலும் பலர் செயற்கையான சிரிப்புக் கூட இறுதியில் உண்மையான சிரிப்பாக மாறுவதற்கான ஆற்றலுடையது என்பது மட்டுமல்ல அருகில் உள்ளவர்களுக்கும் வைரஸைப் போல தொற்றி விரைவாகப் பரவக் கூடியது என்கின்றனர். இப்படி சில முரண்பாடுகள் இருந்தபோதும் அனைத்து ஆய்வாளர்களும் ஒன்றுபடும் புள்ளி சிரிப்பு மனித வளர்ச்சிக்கும் உடல் உள மன மற்றும் ஆன்ம நலத்திற்க்கும் பயனுள்ளது என்பதாகும். இதற்கான காரணம் சிரிப்பு மனித உடலில் சில ஹோமன்களை சுரப்பதற்கு உதவி செய்கின்றது. குறிப்பிட்ட ஹோமோன்கள் மனிதர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது குறைவாக காணப்படுகின்றது. ஆகவே மனிதர்கள் சிரிக்கும் பொழுது இந்த ஹோமோன்கள் சுரந்து மன அழுத்தத்தை குறைப்பது உதவிபுரிக்கின்றன.

இது மட்டுமல்ல மனிதர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியாக சிரிப்பார்களேயானால் அவர்களது உடலுக்கு அதிக சக்தியை அளித்து துடிப்பாகவும் இயங்கச் செய்கின்றது. மேலும் இது உடலில் குறிப்பாக முகத்தில் உள்ள இறுக்கமான தசைகளை இலகுபடுத்துவதன் மூலம் இயங்கச் செய்து மனிதர்களுக்கு அமைதியையும் உடலுக்குhன ஆறுதலையும் வழங்குகின்றது என்கின்றனர். (Davidhizar & Bowen, 1992, Martin, 2001). இன்னும் ஒரு படி மேல் சென்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் சிரிக்கின்ற சிரிக்காத மனிதர்களுக்கு இடையிலான ஒப்பிட்டு ஆய்வின் அடிப்படையில்; சிரிக்கின்ற மனிதர்களுக்கு மன அழுத்தம் மனச் சோர்வு என்பன வராமலே சிரிப்பானது தடுக்கின்றது என்கின்றனர். (Kuiper, and Martin, 1998). இதேபோல் சிரிப்பு புற்றுநோய் செல்களும்; அதன் வைரஸ{களும் பரவாமல் தடுக்கின்றதும் அவற்றைக்; கொல்கின்ற செல்களின் உருவாக்கத்தை சிரிப்பதன் மூலம் அதிகரிக்கச் செய்கின்றது. இதற்கு நோர்மன் கசின்ஸ் (Norman Cousins) என்பவரது அனுபவமும் அவரது புத்தகமும் ஆதாரமாக இருக்கின்றது. இவர் எழும்பி தன்னால் ஒன்றுமே செய்ய முடியாத வகையிலான ஒரு நோய்க்கு உள்ளாகியிருந்தார். இவரது செயற்பாடு எல்லாமே தள்ளு வண்டி மூலமே நடைபெற்றது. இவ்வாறு இருக்கின்ற ஒரு நிலையில் தான் சிரிக்கும் பொழுது தனது உடல் நோ குறைவதையும் ஆழமான நித்திதை கொள்வதையும் அவதானித்திருக்கின்றார். இறுதியாக சிரிப்பை ஒரு மருந்தாகப் பயன்படுத்தி எழும்பி சுயமாக நடக்கும் அளவிற்கு குணமானார். இவர் குணமானதற்கான காரணங்கள் தொடர்பாக பல வாதப்பிரதி வாதங்கள் இருந்தபோதும் மேற்குலகின் வைத்திய உலகிற்கு சிரிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்த இவரும் இவரது நூலும் காரணமாயின. இவரது கூற்றின் படி பத்து நிமிட வயிறு குலுங்கி சிரிக்கும் சிரிப்பானது உடல் நோவைக் குறைப்பது மட்டுமல்ல இரண்டு மணித்தியால ஆழமான நித்திரையையும் தருகின்றது என்கின்றார். மேலும் சிரிப்பானது மனிதர்களது கோவத்தையும் மனப் பயத்தையும் குறைக்கின்றதும் என்கின்றனர்.

முதலில் சிரிப்பானது உளவியல் அடிப்படையில் ஒரு மாற்றத்தை மனிதரில் ஏற்படுத்துகின்றது. அதாவது எதிர்மறைத் தன்மையிலிருந்து நேர்மறைத் தன்மைக்கு மனிதரது உணர்ச்சிகளை மாற்றிவிடுகின்றது. அல்லது அதிகாரத்துவ தன்மையிலிருந்து புரிந்துணர்வு தன்மைக்கு மாற்றிவிடுகின்றது. இதனால் மனிதர்களிடம் இருந்த மன சோர்வு மன அழுத்தம் குறைந்து ஒரு விதமான சுய பிரக்ஞை நிலைக்கு வருகின்றனர். இது நேர்மைற உணர்வுகளை மனிதரில் உருவாக்கின்றது. இவ்வாறான ஒரு உறவு சிரிப்புக்கும் மனித உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் மற்றும் மனித உள நிலைமைக்கும் இருக்கின்றன. அதிகமாக சிரிக்கின்ற மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட நேர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் சிரிக்காத மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட எதிர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் நடைபெற்றுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பானது ஒரு குழுவிற்கு மேலும் ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றது. இதனால் இருவர் தமக்கிடையிலான முரண்பாடுகளையும் ஆரோக்கியமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் தீர்ப்பதற்கு சிரிப்பு வழிசெய்கின்றது. ஆகவே குறிப்பாக காதலர்களுக்கிடையல் திருப்திகரமான உறவை சிரிப்பு ஏற்படுத்துகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களுக்கு அவர்களது உறவுகளின் இறப்பினால் ஏற்படும் துக்கத்தையும் அதனால் ஏற்படும் மனச் சோர்வு மன அழுத்தம் என்பவற்றையும் அவர்களது வாழ்வையும் நேர்மறைத் தன்மையானதாக சிரிப்பு மாற்றியுள்ளது என இது தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பின் முக்கியத்துவத்தை முதலில் ஆழமாக நான் அறிந்தது ஓசோவின் மூலம். இவர் சிரிப்பை மூன்று பகுதிகளாக அடிப்படையில் பிரிக்கின்றார். முதலாவது பிறரைப் பார்த்து சிரிப்பது. அதாவது அவர்களது தவறுகள் குறைகள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களை கிண்டல் அல்லது நையாண்டி செய்து சிரிப்பது. இந்த சிரிப்பை அவர் மதிப்பதுமில்லை உற்சாகப்படுத்துவதுமில்லை. இச் சிரிப்பை அவர் கீழ் நிலையிலையே வைத்தள்ளார். தமிழ் படங்களில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் வருகின்ற பெரும்பான்மையான வணீக ரீதியான திரைப்படங்களில் வருகின்ற சிரிப்புப் பகுதிகள் இந்த வகைகுள் அடங்கும். இதற்கு எதிர்மறைத் தன்மை இருந்தபோதும், மனிதர்களுக்கு சிரிப்பை உருவாக்கின்றமையினால் அதிலும் நேர் மறைத் தன்மையையும் பெருகின்றது. இரண்டாவது வகை இடைநிலையானது. அதாவது நமது தவறுகள் குறைகள் கோமாளித்தனங்களை நாமே பார்த்து சிரிப்பது. இது ஒரளவு பாரவாயில்லை எனக் கூறுவார். இவ்வாறு சிரிப்பது, குறித்த ஒரு பிரச்சனையை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு உதவும் என்கின்றார் ஐரோப்பாவைச் சேர்ந்த வைத்திய ஆய்வாளர் (Sutorius, D., 1995).

மூன்றாவது சிரிப்பு முக்கியமானதும் உயர்ந்ததுமாகும். இது சிரிப்பதற்கா மட்டும் சிரிப்பது. சிரிப்பதன் நோக்கமே சிரிப்பதுதான். சிரிப்பதன் நன்மைக்காகவே சிரிப்பது. சிரிக்கின்றோம் என்பதற்காகவே சிரிப்பது. இதில் நம்மை மட்டுமல்ல பிறரையும் அவமதிப்பதோ நையாண்டி செய்வதோ இல்லை. இவ்வாறான சிரிப்பு பயிற்சியில்; கவரப்பட்டு அவரால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்டிக் ரோஸ் (mystic rose) எனப்படும் சிரிக்கும் தியான பயிற்சியில் இந்தியாவிற்கு சென்று பங்குபற்றினேன். இப் பயிற்சி 21 நாட்கள் நடைபெறும். முதல் ஏழு நாட்களும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மூன்று மணித்தியாலங்கள் மிகவும் ஆழமான சிரிப்பு பயிற்சி. அதாவது வயிற்றைக ;குலுக்கி குலுக்கி சிரிக்க வேண்டும். சிரிப்பு ஆழமாக செல்ல அழுகை வரும். வந்தாலும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மற்ற நேரங்களிலும் சிரிப்பதுதான் நமது வேலை. சாப்பிடும் பொழுதும் சும்மாக இருக்கும் பொழுதும் சிரிப்பது ஒன்றே நமது செயற்பாடு. இரண்டாவது ஏழு நாட்களும் ஆழுவது மட்டுமே வேலை. இப்பொழுது சிரிப்பு வந்தாலும் அழுவதை மட்டுமே செய்ய வேண்டும். அழுவது மட்டுமே நமது ஓரே செயற்பாடாக இருக்கும். மூன்றாவது ஏழு நாட்களும் அமைதியாக கண்முடி உள்ளே நடப்பதை கவனிப்பது. தியானிப்பது. இது நம்மை மீண்டும் சுதந்திரமான மனிதராக்கும் என்பது அவரது அனுபவம். மற்றும் புரிதல்.

இவ்வாறு மூன்று பகுதிகளாக இப் பயிற்சிசை செய்வதற்கு இவர் கூறுகின்ற காரணம் முக்கியமானது. அதாவது நாம் வாழுகின்ற சமூகத்தின் பிற்போக்கான சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து நாம் அடக்கியவை எல்;;லாம் நமக்குள் ஒவ்வொரு தளங்களில் இருக்கின்றன என்கின்றார். சிரிப்பது முதல் தளத்திலையே தனது வேலையை செய்தபோதும் நம் உடல் மற்றும் உள்ளத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது என்கின்றார்.. அழுகை நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்கின்றார். இதன் போது நாம் நீண்ட காலமாக அடக்கிய பல உணர்வுகள் உணர்ச்சிகள் வெளிவருவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்கின்றார்.

சமூக கட்டுபாடுகள் அடக்குமறைகளை பிரக்ஞையாக உணர்ந்து புரிந்தபோதும் அவற்றை மீறவோ அதிலிருந்து விடுதலை பெறவோ முழுமையாக முடியவில்லை. ஏனனில் அந்தளவிற்கு இந்த சமூக அடக்குமுறைகள் ஆழமாக நமக்குள் வேருண்றி இருக்கின்றன. அதாவது சமூகம் நம் மீது திணித்த இயற்கைக்கு அப்பாற்பட்ட யதார்த்தமற்ற நாகரிக வாழ்வுக்குள் நாம் சிக்குண்டு போய்யுள்ளோம்.

இறுதியாக தங்களுக்கான புத்தாண்டு பரிசு. நாங்கள் மறந்துபோன எங்களது சிரிப்பே. எப்படி நம் சிரிப்பை கண்டுபிடிப்பது. இது தான் அதன் இரகசியம். முதலில் வாயை அகலத் திறவுங்கள். இப்பொழுது பின்வருகின்ற சொல்லை சத்தமாக உச்சரியுங்கள். “ஹி…ஹி…ஹி” …. “ஹா…ஹா…ஹா” … “ஹோ…ஹோ…ஹோ” இப்பொழுது நீங்கள் வாய் விட்டு சிரிக்கின்றீர்கள். இவ்வாறு சிரிக்கும் பொழுது உங்கள் வயிற்றைக் குலுக்குவதுடன் உடலையும பலவாறு அசையுங்கள். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சிரித்த பின்பு கண்களை மூடி மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமைதியாக இருப்பது உண்ட உணவை சமிக்க வைப்பதைப்போன்றது. இந்த நிலையின் போது நம்முள்ளே என்ன நடைபெற்றாலும் அதை எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாது கவனிப்பது மட்டும் செய்யவேண்டிய செயற்பாடு. இதை சிரிக்கும் தியானம் அல்லது சிரிக்கும் புத்தர் தியானம் எனவும் அழைக்கலாம். ஓவ்வொருவரும் இவ்வாறு செய்து புத்தாண்டை சிரிப்புடன் சிறப்புடன் வரவேற்போம்.

சிரிப்பு இயற்கையின் இசை. மனிதர்களோ அதை இசைக்கும் வாத்தியம். இந்த இசை மனிதர்களுக்கு இயற்கை தந்த பரிசு. இந்தப் பரிசை சரியாக நாம் பயன்படுத்தினால் அருகிலிருக்கின்ற சிரிக்காத மனிதரையும் சிரிக்க வைக்கலாம். இது ஒரு சிரிப்பு வைரஸாக பரவும். நம் வாழும் இடங்களிலிருந்தே இந்த சிரிப்பு வைரஸை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்புவோம். குறிப்பாக இது தமிழ் கட்டுரையாக இருப்பதால் உலகில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கும் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு மருந்தாக இது பயன்படட்டும்.

நம் மீது சுமத்தப்பட்ட செயற்கையான நாகரிகங்களுக்காகவும் மற்றும்; யாருக்காகவும் பயந்து நமது சிரிக்கின்ற உரிமையை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. இந்த புத்தாண்டு என்பதும் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட ஒரு விடயமே. உண்மையிலையே ஒவ்வொரு நாளும் புது நாளே. ஆனாலும் ஒவ்வொரு புத்தாண்டையும் நேர்மறையாக பயன்படுத்துவோம். ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் வாய்விட்டுச் சிரிப்போம். நம் நோய் விட்டுப் போகும் மட்டுமல்ல. அனைவருக்கும் ஆனந்தம் பிறக்கும் மட்டும். சிரிப்போம்! வாய் விட்டுச் சிரிப்போம்.

சிரிப்பதற்கு கஸ்டமா. ஆப்படி எனின் அழையுங்கள். உங்களுக்கு அல்லது உங்கள் குழுவிற்கு சிரிப்பை வரவழைப்பதற்கு.

மீராபாரதி

31.12.2010

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Kuiper, N. A. and Martin, R. A. (1998). Laughter and Stress in Daily Life: Relation to

Positive and Negative Affect. Motivation and Emotion, 22(2), 1998.

Martin, R.A., (2001). Humor, Laughter, and Physical Health: Methodological Issues and

Research Findings. Psychological Bulletin, 127(4), 504-519

Sutorius, D., (1995). The transforming force of laughter, with the focus on the laughing

meditation. Patient Education and Counseling, 26, 367 – 371.

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702

Cueva, Melany , Kuhnley, Regina , Lanier, Anne and Dignan, Mark(2006) ‘Healing Hearts: Laughter

and Learning’, Journal of Cancer Education, 21: 2, 104 — 107

Norman Cousins (1976) . “Anatomy of an Illness” . New England Journal of Medicine,

Albert Nerenberg, Laughology, http://www.albertnerenberg.com/AlbertNerenberg/Albert_Nerenberg.html

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

சிரிக்கும் புத்தர் தியானம்
ஓசோ அறிமுகப்படுத்திய
விசேடமான தியான முறைகளில் ஒன்று.
அவரது பார்வையில்….
இந்த உலகை உணர்ச்சிமிக்கதாகவும்
விளையாட்டு நிறைந்ததாகவும் உருவாக்குவதே
நம் விருப்பம்.
சிரிப்புத்தான் ஆன்மிகத்தின் அடிப்படைத் தன்மை என்பதை
இந்த உலகுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
ஏங்களால் சிரிக்க முடியவில்லை எனில்
எங்களது வாழ்வில் அநேக விடயங்களை
நாம் இழந்துவிடுவோம்.
சிரிப்பு எங்களை கள்ளம் கபடம் அற்ற
குழந்தையாக்குகின்றது.
ஏங்களது சிரிப்பு
இந்த இயற்கையுடன் இணைந்துவிடுகின்றது.
ஆர்ப்பரிக்கும் கடலோடும் நட்ச்சத்திரங்களோடும்
அவைகளின் அமைதியோடும் இணைந்துவிடுகின்றது.
நாங்கள் சிரிப்பதன்
மூலம் இந்த உலகின் அறிவுள்ள
ஒரு பகுதியை தனியாக அமைக்கின்றோம்.
ஏனென்றால் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிரிக்கமுடியும்.
ஆதனால் தான் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை.
அவைகளுக்கு அதிக அறிவு கிடையாது.
“எதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக் கொள்ளNவுண்டும்.
வுpளையாட்டாக (playfulness )எடுத்துக்கொள்ளக் கூடாது”
என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
ஏதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக்கொள்வதால்
சமூகத்தில் மரியாதை கிடைக்கின்றது.
மரியாதைக்காக நாம் எதையும்
விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
ஏல்லாவற்றையும் பெரியவிடயமாக எடுப்பது
நம்மை நோயாளியாக்கிவிடும் என்பதை
கற்பிப்பவர்கள் மறந்துவிடுகின்றனர்.
நம்மிடம் சிரிக்கும் உணர்வு மங்கிப்போய்விட்டது.
மரணித்துவிட்டது.
இல்லை என்றால் எங்களைச் சுற்றிலும் உள்ள
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான வி;டயங்கள் நிறையவே உள்ளன.
ஏங்களிடம் சிரிக்கும் உணர்வு இருந்தால்
கவலைப்படுவதற்கு நேரம் இல்லாமல்
முழுநேரமும் சிரித்துக் கொண்டே இருக்குமளவுக்கு
பல விடயங்கள் உள்ளன என்பது தெரிந்தால்
நாம் ஆச்சரியப்படுவோம்.
ஏதாவது ஒன்று எங்கேயாவது
சிரிக்கும் படி நடந்துகொண்டே இருக்கும்.எனவே மனித வாழ்வில்
நாம் மறந்துவிட்ட சிரிப்பைக் கொண்டுவருவது தான்
நம் வேலை.
சிரிப்பை மற்ந்துவிட்டால்
நாம் பாடுவதை மறந்துவிடுவோம்
ஆடுவதை மறந்துவிடுவோம்.
அன்பை மறந்துவிடுவோம்.
சிரிப்பை மட்டும் நாம் மறக்கவில்லை
இதனுடன் சேர்ந்து வேறு பல வி;டயங்களையும் மறந்துவிட்டோம்.
சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிரிப்பது புனிதமானது.
மேலும் சிரிப்பைப் பற்றி ஓசோ கூறுகிறார்,
ஆன்மீக அனுபவங்களில்; மிகவும் முக்கியமானது சிரிப்பு,
ஒரு மனிதரால்
எதையும் அடி மனதில் அடக்கி வைக்காமல்
முழுமையாகவும் இதயபூர்வமாகவும் சிரிக்க முடியுமாயின்
அந்தக் கணத்தில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறலாம்
ஏனனில் முழுமையான சிரிப்பு
(ego) துன்முனைப்பற்றது
இது தான் உண்மையை
மேய்ஞானத்தை அறிவதற்கான ஓரே வழி;.
புpரங்க்ஞையாகவும் முழுமையாகவும் சிரியுங்கள்.
சுpரிக்கும் சந்தர்ப்பங்களை தவறவி;டாதீர்கள்.
சுpரிப்பு ஒரு வழிபாடு.

சுpரிப்பில் பலவகை உண்டு. வழமையாக மற்றவர்களின் குறைகளை, தவறுகளை,முட்டாள் தனங்களை பார்த்து எண்ணி சிரிப்Nபுhம்.
இது கீழ்த்தரமான சிரிப்பு. மற்றவர்களின் செலவில் சிரிப்பது சாதாரணமான சிரிப்பு மட்டுமல்ல அசிங்கமானதுமாகும். இது வன்முறையானதும் அத்துமீறியதுமாகும்.
இது மற்றவறை நோகப்பண்ணுவதாகும். நும் அடி மனதில் பழிவாங்கும் உணர்வை இந்த சிரிப்பு கொண்டிருக்கும்.

இரண்டாவது சிரிப்பு நம்மைப் பார்த்து நாமே சிரிப்பது. இது பெறுமதியானது.
இது பண்பானது. தன்னைப் பார்த்து சிரிக்கும் மனிதர் மதிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் முதலாவமவர்களைவிட மேலானவர்கள். இவர்கள் வன்முறை, வெறுப்பு, அத்துமீறல் என்பவற்றைக் கடந்தவர்கள்.

மூன்றாவது சிரிப்பு பிரபஞ்ச சிரிப்பு. ஒரு சம்பவத்தைப் பார்த்:து முழுமையாக சிரிப்பது. ஏதிர்கால பலன் எதனையும் எதிர்பாராது சிரிப்பது.
ஆரம்பமில்லாத ஆரம்பம் இந்த சிரிப்பு.
முழு பிரபஞ்சமுமம் எந்த ஒரு நோக்கமுமின்றி
எந்த ஒரு குறித்த புள்ளியையும் நோக்கியல்லாது
முடிவற்ற பிரதேசத்தில் பயணிப்பது.
இதைப் பார்த்து சிரிப்பது. இதிலிருந்து சிரிப்பு உருவாகும்.
இதை உருவாக்க ஆரம்பத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இதை முடிக்கவும் இறுதியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அழகாக ஒழுங்காக பகுத்தறிNவுhடு பயணிக்கும் இந்த பிரபஞ்சம்.
இதைப் பார்ப்போமானால் சிரிப்பு தவிர்க்க முடியாதது.
இது ஆன்மிகச் சிரிப்பு.

இது மட்டுமின்றி சிரிப்பதனால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு மனதுக்கு ஆன்மாவுக்கு கிடைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
சுpறந்த உடல் இயங்கு சக்தி நடைபெறுகின்றது.
துசைகள் அமைதியடைகின்றன.
மன அழுத்தம் கோவம் குறைகின்றது.
ஊயிர் ஆற்றலும் ஆனந்தமும் அதிகரிக்கின்றது.

இயற்கையின் இசை சிரிப்பு.

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

கிழக்குலகம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமது சுய பரிசோதனை மூலம் பரிச்சித்து கண்டறிந்த முறை தியானம். இதை அவர்கள் பயன்படுத்தியது என்னவோ ஆன்மீக தேடலுக்கும் தமது சமயம் சார்ந்துமே. புத்தர் அதிலொரு புரட்சியை ஏற்படுத்தியபோதும் துரதிர்ஸ்டவசமாக மீண்டும் அது சமய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் சென்றுவிட்டது. ஆகவே தியானம் என்பது ஆன்மீக ரீதயான அதியுயர் நிலையை (ஞானமடைதல் அல்லது சமாதி நிலை) அடைவதற்கான ஒன்றாக ஒரு சமய வழிபாட்டு நெறியாகவும் குறிப்பாக வயது போனவர்களுக்கானதாகவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மறுபுறம் தியானம் என்பது மேற்குலகில் பொதுவாக வியாபரா மயப்படுத்தப்பட்டு வெறும் உடல்> மன ஆறுதலுக்காக மட்டுமே அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த இரு துருவ பயன்பாடுகளுக்கும் இடையில் தியானம் மனிதர்களுக்கு அதிகம் நன்மையளிக்கும்வகையில் பயன்படுத்தப்படக் கூடியது என்பதை அண்மைக்காலமாக தியானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விஞ்ஞான ஆய்வுகள் அறிவிக்கின்றன. குறிப்பாக தியானத்தின் பயன்பாடு சாதாரண மனிதர்களுக்கு பலவகையில் பயன்தரக்கூடியதாக உள்ளது. மனிதர்களின் பழக்கவழக்கங்களை இயந்திரமயமாக்கலிலிருந்து விடுவித்து உயிரோட்டமுள்ள ஒரு செய்பாடாக மாற்றுவதற்கும்> மனித மனத்தின் முரண்பாடுகளை> மதிப்பீடுகளை> நேர்மறை> எதிர்மறை எண்ணங்களை> அதன் குழப்ப நிலையை புரிந்துகொள்வதற்கும்> மனித உணர்ச்சிகளையும்> உணர்வுகளையும் புரிந்துகொள்வதற்கும்> மனித செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் படைப்பாற்றலுடனும் வெளிக் கொண்டுவருவதற்கும் என பல்வேறு தளங்களில் சாதாரண மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் தியானம் பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைவிட மனிதர்களிடம் காணப்படுகின்றன பல்வேறுவிதமான உடல் உள மன நோய்களை மாற்றுவதற்கும் குணப்படுத்துவதற்கும் தியானப் பயிற்சி இன்று பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இம் மனிதர்கள் தியானப்பயிற்சியைத் தொடர்வதால் அவர்களுக்கு ஏற்படுகின்றன நேர்மறை விளைவுகளை விஞ்ஞான பரிசோதனை ஆய்வுகள் நிறுபிக்கின்றன. இது தொடர்பாக பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்கள் 1994ம் ஆண்டே பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக ஆற்றிய “தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” என்ற உரையில் விரிவாக கூறியுள்ளார்.

துரதிர்ஸ்டவசமாக கீழக்குலகின் அறிவுகளை மேற்குலகின் அறிவுகள் ஏற்றுக்கொண்டு அந்த அறிவை அவர்கள் மீள கூறும்பொழுதே அதற்கான அங்கீகாரத்தை கீழக்குலக அறிஞர்களும் மனிதர்களும் வழங்குகின்றார்கள். அந்தளவிற்கு மேற்குலகின் அறிவின் மீது நம்பிக்கை மட்டுமல்ல அதன் மாயைக்குள்ளும் சிக்கியுள்ளோம். நம் அறிவை மனதை ஆக்கிரமித்திருக்கும் நவீன காலானியாதிக்கம் தொடர்பான நமது பிரக்ஞை எந்தளவு என்பது கேள்விக்குரியே. ஆனால் முரண் நகை என்னவெனில் இந்த காலனியாதிக்க அறிவின் அடிப்படையிலையே நாம் பிறந்த நாடுகளின் மீதான நவீன காலானியாதிக்கத்தை எதிர்க்கின்றோம். பெண்ணிலைவாதி ஒருவர் குறிப்பிடுவதுபோன்று அதிகாரத்த்திலுள்ளவர்களின் உபகரணங்களைக் கொண்டு அவர்களது வீட்டை உடைக்க பயன்படுத்தமுடியாது எனக் கூறுகின்றார். அதிகாரவர்க்கத்தை எதிர்ப்பவர்கள் இதை எப்பொழுது புர்pந்துகொள்கின்றோமோ அப்பொழுதுதான் அடக்கப்படுபவர்களின் விடுதலைக்கான சரியான உபகரணங்களைக் கண்டுபிடித்து செயற்படுவோம் என்பதைக் குறித்துக்கொண்டு இக் கட்டுரையின் விடயத்திற்கு செல்வோம். ஏனனில் இக் கட்டுரை மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பானதல்ல மாறாக தியானம் அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் தொடர்பாக மேலோட்டமாக ஆராய்கின்றது.

கடந்த சில பத்தாண்டுகளாக மேற்குலம் தியானம் தொடர்பான நீண்ட கால குறுகிய கால ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமது வாழ்வில் நீண்ட காலம் தியானம் செய்தவர்கள்> குறுகிய காலம் தியானம் செய்தவர்கள்> தியானம் செய்யாதவர்கள் என்பவர்களுக்கிடையே பல்வேறுவிதமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது. மேலும் பல்வேறுவகையான தியான முறைகளை பின்பற்றுவேர்களுக்கு இடையிலும் இவ்வாறான பரிசோதனைகளை செய்தும் மற்றும் ஓப்பிட்டும் தமது ஆய்வுகளை முன்னெடுகின்றனர். இதற்காக நவீன தொழிற்நூட்ப உபகரணங்களைப் (உதாரணமாக எம்ஆர்ஐ (fMRI)இ ஈசிஜி(ECG)) பயன்படுத்தியும் செய்துவருகின்றனர். தியானம் தொடர்பான இவ்வ்hறான ஆய்வுகளின் அடிப்படையில் மனிதர்களின் வளர்ச்சிக்கும் மேம்மாட்டிற்கும் ஆனந்தமான மகிழ்வான வாழ்விற்கும் மற்றும் உடல்> உள> மன> ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் மற்றும் இவற்றுடன் தொடர்புபட்ட நோய்களை தீர்ப்பதிலும் இதன் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் ஆதராங்களுடன் முன்வைக்கின்றனர். இந்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதை விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். புதிய வருடத்தில் இக் கட்டுரை உங்களுக்கு ஒரு புதிய பார்வையையும் தங்களது தனிப்பட்ட உடல்> உள> மன மற்றும் ஆன்மீக வளங்களையும் ஆற்றல்களையும் மேலும் அதிகரிப்பதற்கும் மற்றும் இவை தொடர்பான பிரச்சனைகள் பற்றியும் எவ்வாறான பார்வையை நாம் கொண்டிருக்கலாம் என்பதையும் முன்வைக்கின்றது.

இக் கட்டுரை பிரதானமாக கத்தியா ரூபியா (Katya Rubia) என்பரின் தியானம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையிலையே எழுதப்படுகின்றது. இவர் இங்கிலாந்திலுள்ள கிங்ஸ் கல்லுரியின் மன நல மருத்துவக் பிரிவின் குழந்தைகள் மற்றும் இளையவர்களுக்கான மன நலப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றனர். மேலும் சிலரின் அதரவான ஆய்வுக் கட்டுரைகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஐநாவின் உலக நல அமைப்பினதும் (WHO)

மற்றும் வேறு பல ஆய்வுகளின் (Mathers and Loncar, 2005)இ ஆதராங்களை முன்வைத்து இவர் கூறுகின்றார் 2020 ஆண்டளவில் உலகில் மன சோர்வு> மனநோய்> மன அழுத்தம்> மற்றும் இளையோரின் தற்கொலை வீதம் என பல்வேறு விதமான நோய்கள் அதிகளவில் அதிகரிக்க உள்ளதாக கூறுகின்றார். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது குணப்படுத்துவது என்பதற்காக தியானம் தொடர்பான தனது ஆய்வை மேற்கொள்கின்றார். ஏனனில் இவ்வாறான நோய்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆங்கில மருந்துகள் பல பக்க விளைவுகளை எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றார். மேலும் இந்த மருந்துகளின் விற்பனை நிறுவனங்கள் தமது ஆதிக்கம் மூலம் இலாபம் ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இந்த மருந்துகளை முக்கியத்துவப்படுத்தி அவற்றின் பாவனையை மனிதர்களுக்கு இன்றியமையாததாக்குகின்றனர். இதற்குமாறாக தியானம் என்பது பக்க மற்றும் எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லை. அதேவேளை இலவசமாக பயன்படுத்தக் கூடியதுமாகும் என்கின்றார். ஆகவே தியானம் தொடர்பாக நமது தேடலை ஆரம்பிப்போம். எதிர்காலத்தில் வரப்போகின்றன மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் வரவிடாமல் தடுப்பதற்கு இன்றே அதற்கான தடைகளை உருவாக்க முயற்சிப்போம். எதிர்காலத்தில் மட்டுமல்ல இன்று இலங்கையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னியில் கடந்த போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட> அல்லது உருவாக்கப்பட்ட உடல்> உள> மன பாதிப்புகளை> வடுக்களை> குறைகளைத் தீர்க்க> நீக்க நாம் சமயம் சாராத் தியானப் பயிற்சிகளைப் பயன்படுத்தலாம்;. இவ்வாறு பயன்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் முன்வைக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களையும் முடிவுகளையும் அதற்கான ஆதாரங்களையும் கவனிப்போம்.

மேற்குலகின் உளவியல்> பிரக்ஞை (state of consciousness) நிலையை மூன்று அடிப்படைகளாக பிரிக்கின்றது என்கின்றார் காதிய ரூபியா. ஒன்று நித்திரை நிலை: இரண்டாவது கனவு நிலை: மூன்றாவது விழித்திருக்கும் நிலை:. ஆனால் கீழக்கின் தத்துவயியல் அல்லது ஆன்மீக மெய்ஞானம் எனப்படுகின்ற விஞ்ஞானம் நான்கு நிலைகளாகப் பிரிக்கின்றது. இந்த நிலையானது மேற்குறிப்பிட்ட மூன்றுடன் “நான்காவது நிலை” அல்லது உயர்ந்த பிரக்ஞை நிலை என இன்னுமொன்றையும்; குறிப்பிடுகின்றனர் என்கின்றார். அதாவது மனதில் எண்ணங்கள் இல்லாத நிலை (No mind or no thoughts) எனவும் குறிப்பிடலாம் (Rubia, 2009). இந்த நிலை தொடர்பாக மேற்குலகில் ஆழமான புரிதல் இல்லாமையால் தியானத்தின் ஆழமான பகுதிகளை இவர்களால் நீண்டகாலமாக புரியவோ அறியோ முடியவில்லை. நீண்ட காலமாக தியானம் என்பது ஒன்றைக் குறித்து முழுமையாக கவனித்தல் என்பதாகவே புரிதல் இருந்தது. இந்த நிலை விழிப்பு நிலையில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. இதனால் தியானத்தின் நன்மைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் இந்த நிலைமைகள் இன்று மாறிக் கொண்டுவருகின்றன.

தியானம் என்பது பல வகைகள் உண்டு. மிகவும் பிரபல்லயமானது ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனிப்பது. அல்லது ரமண மகரிஸியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் கூறுவார்கள். மேற்குலகம் யோகாவையும் தியானத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றது. இவ்வாறான தியான முறைகள் எல்லாம் மேற்போக்கான அல்லது வியாபார ரீதியாக பிரபல்யமான தியானப் பயிற்சிகள். இதைத்தவிற தியானத்தில் அக்கறையுடனும் ஆழமாகவும் சென்று ஈடுபடுகின்றவர்கள் தமது மூச்சைக் மூக்கின் நுனியில் பிரக்ஞையுடன் கவனிப்பர். இது விப்பாசனா (vipassana) எனவும் குறிப்பர். மற்றது தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இது இரண்டும் முக்கியமாக பயிற்சிமுறைகள். முதலாவது புத்தரினால் பிரபால்யமாகி அன்றிலிருந்து ஆழந்த ஈடுபாடுடையவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. மற்றவகை ஐப்பான் நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் இன்னுமொரு முறையான சென் (Zen) முறையும் மேற்குலகில் பிரபல்யமானது. மற்றும் ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமான தியானப் பயிற்சி செய்வர்களிடையில் பிரபல்யமானவை. மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து முழுமனம் அல்லது நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR) என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn) என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள மன நோய்களை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த தியான பயிற்சி முறையானது குறிப்பாக புலமைக் கல்விசார் துறையில் பிரபல்யமானதுமட்டுமல்ல ஆய்வுக்காகாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதைத் தவிர ஓசோ என்பவரால் கிழக்கு மற்றும் மேற்குலகு ஆகிய இரு அறிவுகளையும் பயன்படுத்தி இக்காலத்திற்கு ஏற்றதாக புதிய தியான முறையை உருவாக்கி உள்ளார். இதை active meditation எனக் கூறுவார். இந்த தியான முறை புலமைசார் கல்வித்துறையில் அதிகளவு ஆய்வுக்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை. இந்த முறை இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நமது அடக்கப்பட்ட சகல உணர்வுகள் உணர்ச்சிகளை செயற்கையான செயற்பாட்டினுடாக வெளிப்படுத்துவது. இவ்வாறு முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின் இரண்டாவது பகுதி அமைதியாக இருந்து பிரக்ஞையுடன் நம்முள்ளே கவனிப்பது. இந்த முறையிலுள்ள நன்மை நம் அடக்கப்பட்ட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதனால் உள்ளமைதி என்பதும் அது தொடர்பான அனுபவமும் தானாக ஏற்படுகின்றது. கடந்தகால முறைகளுகும் இந்த முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் முதலாவதில் மனிதர்கள் மன அமைதியை ஒன்றைக் கவனிப்பதனுடுhக கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தமாக உருவாக்கவேண்டும். இது பலருக்க கஸ்டமானதாக இருக்கின்றது. ஏனனில் இவ்வாறு கவனிக்கும் போதுதான் மேலும் பல புதிய எண்ணங்கள் தோன்றி மனிதர்களின் கவனத்தைக் குழப்புகின்றன அல்லது திசைதிருப்புகின்றன. அதை என்ன செய்வது என தெரியாமல் தியானம் பலன் இல்லை அல்லது கஸ்டம் எனக் கூறி பலர் கைவிட்டுவிடுகின்றார்கள். ஆனால் ஓசோவின் முறையுடாக உடல் உள மன அமைதி தானாவே உருவாகின்றமை மட்டுமல்ல தியான நிலையை குறுகிய நேரத்தல் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது. இது மட்டுமின்றி குறிப்பாக இவரது முதாலாவது பகுதி பல உடல்> உள> மன பிரச்சனைகளை தீர்க்க அல்லது புர்pந்துகொள்ள வழி செய்கின்றது. இவ்வாறு உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மனக் கவலையைக் குறைத்து உடல் உள மற்றும் மன ஆறுதலை தருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் (Davidhizar and Bowen, 1992).

கத்தியாக ரூபியா (Katya Rubi) தியானத்தின் நன்மைகள் நான்கு வகையாக பிரிக்கின்றார். ஓன்று உடல் சார்ந்தது. இதில் உடலானது அமைதியாக ஓய்வாக எந்தவிதமான அழுத்தங்கள் இல்லாது இருக்கின்ற நிலை (physical level). இரண்டாவது மனம் எண்ணங்கள் சிந்தனை சார்ந்த நிலை. அதாவது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், சுய கட்டுப்பாடும் கண்காணிப்பும், மற்றும் உள் வெளி செயற்பாடுகளை ஆரோக்கியமான ஆற்றலுடன் எதிர்கொள்ளல் அல்லது முன்னெடுப்பது போன்றவை (cognitive level). மூன்றாவது உணர்ச்சிகள் சார்ந்த நிலை. இதில் எதிர் மறை உண்ச்சிகளை கடந்து நேர் மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உருவாக்கின்ற நிலை (emotional level). நான்காவது உளவியல் சார்ந்தது (psychological level). இது ஒரு மனிதரது தன்மையை (personality) நிர்ணையிக்கின்றது. அதாவது ஒருவரது உடல் உள மன சம நிலையைப் பேண உதவுகின்றது என பல ஆய்வாளர்களின் ஆய்வுகளை ஆதாரம் காண்பித்துக் கூறுகின்றனர் (Rubia, 2009).

தியானம் செய்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுவிதமான ஆய்வுகிளின்படி பல முடிவுகளுக்கு மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆய்வுகள் வெறும் தியானம் செய்பவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மூல தரவுகளிலிருந்து மட்டும் பெறப்பட்டதல்ல. மாறக அவர்களது நாளாந்த செயற்பாடுகள் பழக்கவழக்கங்களை நீண்ட காலம் கண்காணித்தும் மற்றும் இன்றைய நவீன உபகரணங்கள் (எம்ஆர்ஐ (fMRI)> ஈசிஜி(ECG)) மூலம் அவர்களது மூளை> உடல்> மூச்சு> மற்றும் இவற்றின் செயற்பாடுகள் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் அவை தரும் தரவுகளையும் கொண்டே திர்மானிக்கப்பட்டன. இந்த ஆய்வுகளினடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றது என்றும் ஆகவே மனக்குழப்பங்கள் இவர்களுக்கு குறைவாக இருப்பதனால் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றார்கள் எனவும் கூறுகின்றனர். (Rubia, 2009). இதை அறிவதற்கான மூளையில் செய்யப்பட்ட ஆய்வின்படி எண்ணங்கள் சிந்தனைகள் என்பவற்றின் செயற்பாடுகளை அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் குறைந்தளவிலான செயற்பாடுகள் தியான நிலையின் போது காணப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் தியானம் செய்பவர்களது மனம் அமைதியடைகின்றது என்கின்றனர். மேலும் ஒரு ஆய்வின்படி தியானம் செய்பவர்களின் மூளையின் இடது பகுதியின் செய்ற்பாடுகள் அதிகரித்தும் வலது பகுதி செயற்பாடுகள் குறைந்தும் காணப்படுகின்றன. ஆகவே நேர் மறையான உணர்வுகள் உணர்ச்சிகள் மற்றும் கற்பனைத் திறன்களும் படைப்பாற்றல்களும் தியானம் செய்பவர்களிடம் அல்லது மனம் ஒன்றித்தோ கடந்தோ செய்ற்படுகின்றவர்களிடம் அதிகமாக வெளிப்படுகின்றது. ஏனனில் முளையின் இடது பகுதி நேர்மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட எண்ணங்களுடனும் வலது பகுதி எதிர் மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கம் தொடர்பான எண்ணங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளதே காரணமாகும். இதேபோல் தியானம் செய்பவர்கள் குறிப்பிட்ட விடயத்தில் முழுமையான கவனம் செலுத்துவதற்கும் ஈடுபடுவதற்கும் குறிப்பாக கல்வி கற்பவர்கள் மற்றும் வேலையில் ஈடுபடுகின்றவர்களின் செயற்பாடுகள் ஆற்றலுடன் வெளிப்படுவதற்கும் நேர்மறை விளைவுகளைத் தருவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களே காரணம் எனக் கூறுகின்றனர். (Rubia, 2009).

மேலும்; தியானம் செய்பவர்கள் இளமையாக தோற்றம் தருவதற்கும் காரணம் தியானம் செய்வதால் மூளையில் சுரக்கின்ற சில ஹோமோன்கள் காரணமாக இருக்கின்றன எனவும்; கூறுகின்றனர். இத்துடன் மனச் சோர்வு மன அழுத்தம் போன்றன உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கான றோமோன்களும் சுரக்கின்ற காரணத்தினால் மனச் சோர்வு மன அழுத்தம் இன்றி மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் தியானம் செய்கின்றவர்கள் வாழ்கின்றனர் என்கிறார்கள்.

இறுதியாக நீண்ட காலம் தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களது வாழ்கை முறைகளும் அவர்களது தனி மனித தன்மைகளும் மாறுவதுடன் அதிக உடல் உள நலத்துடனும் வாழ்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறன ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஒரு விடயம்> நீண்ட கால தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர் என கூறுகின்றனர்.

சமூக மாற்றத்தில் அக்கறை இருப்பவர்கள் தமது நோக்கத்திற்காக தியானத்தையும் பயன்படுத்தலாம். ஏனனில் தியானம் தனிமனித மாற்றத்திற்கு வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும் நன்மையளிப்பதாகவும் உள்ளது. இன்றைய சமூகத்தின் பிரதான ஆதிக்க செயற்பாடுகளும் சிந்தனைகளும் ஆண் வழிப்பட்டவையும் மற்றும் தர்க்க அடிப்படையிலானவையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறன தர்க்க சிந்தனைக்கு மூளையின் வலப் பகுதியே காரணமாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்களின் வலப்பகுதியே அவர்களது சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக செயற்திறன் கொண்டு இயங்குகின்றது. ஆனால் தியானம் செய்கின்ற ஆண்களின் மூளையின் இரு அதாவது வலது மற்றும் இடது இரு பகுதிகள் துடிப்புடன் செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது (Shao & Skarlicki, 2009). இவ்வாறான மூளையின் செயற்பாடு ஆண்களை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டும் சிந்திக்கவும் செயற்படவும் வைப்பதுமட்டுமல்ல அவர்களது படைப்பாற்றலையும் வினைத்திறனையும் அதிகரிக்கின்றது. பெண்களைப் பொருத்தவரை பொதுவாக முளையின் இரு பகுதிகளும் செயற்திறன் கொண்டவையாக இயற்கையிலையே அமைந்துள்ளன. இருப்பினும் தியானப் பயிற்சி செய்கின்ற பெண்களின் படைப்பாற்றல் செயற்திறனாற்றல் என்பன தியானப் பயிற்சி செய்யாத பெண்களினதைவிட அதிகமானதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தியானப் பயிற்சியின் மூலம் நேர்மறையான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

சமூகமாற்றம் என்ற நோக்கத்திற்காக செயற்பட விரும்புகின்றவர்கள் தமது சுய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் மற்றும் தமது படைப்பாற்றல் செயற்திறன் என்பவற்றை ஆரோக்கியமான வழியிலும் நேர்மறைத் தன்மையுடனும் குறிப்பாக பிரக்ஞையுடன் வெளிக்கொண்டு வருவதற்கும் தியானப் பயிற்சி என்பது முக்கியமானது என்றால் மிகையல்ல. ஏனனில் எந்தளவிற்கு சமூக கட்டமைப்பு மற்றும் அதன் ஆதிக்க சிந்தனைகளிலும் நிறுவனங்களிலும் மாற்றங்கள் எற்படுத்துவது இன்றியமையாததோ அதேயளவு தனிமனித மாற்றமும் வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஆனால் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் முதலில் தம்மில் மாறுதலையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக செயற்படும் அதேவேளை போரினால் உடல் உள மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மனிதர்களின் உடல் உள மன பலத்தையும் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுவதற்காக செயற்படவேண்டியது அவசியமானதாகும். ஏனினில் ஒரு ஆரோக்கியமான சமூகமே> மனிதக் கூட்டமே> ஆரோக்கியமான புதிய சமுதாயத்தைக் கட்டிஎழுப்பக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் ஒவ்வொரு கணமும் நினைவில் இருந்தவேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு நம்மில் பிரக்ஞையை வளர்க்கும் தியானப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இறுதியாக இக் கட்டுரை தியானம் தொடர்பான மேற்குலகின் பார்வையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு அறிமுகம் மட்டுமே. தியானம் தொடர்பாக இனிவரும் அடுத்த தொடர் கட்டுரைகளில் தியானம் எவ்வாறு மனித உடல் உள மன ஆன்மீக ரீதியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பாக விரிவாக எழுதப்படும். குறிப்பாக தியானம் என்பது பிரக்ஞை> விழிப்புணர்வு> படைப்பாற்றல்> கற்பனை> மன அழுத்தம்> மனச் சோர்வு> உடல் நோக்கள்> புற்றுநோய்> உடல் உள மன ஆறுதல்கள்> மற்றும் மரணம்> என ஒவ்வொன்றின் மீது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி விளைவுகளை உருவாக்கின்றது எனப் பார்க்கப்படும். மேலும் சமூக மாற்றத்திற்கான பாதையில தியானத்தின் முக்கியத்தும் தியானமும் பெண்ணியமும் தியானமும் உளவியலும் தியானமும் மனமும் என பல்வேறு பகுதிகளாகவும் இனிவரும் கட்டுரைகளில் ஆராயப்படும். இம் முறை சிரிக்கும் தியானத்தின் நன்மைகள் என்ன அதனாhல் ஏற்படும் மாற்றங்கள் விளைவுகள் என்ன என்பது பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டு கட்டுரைகளுடன் சிரிக்கும் தியானமும் (வாசகர்களுக்கான) தங்களுக்கான எனது புத்தாண்டு பரிசு.

தியானம்! நம் ஒவ்வொருவரினதும் வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் காலம் விரைவில் வரவேண்டும்.

தியானம் தொடர்பான கேள்விகளுக்கும் வகுப்புகளுக்கும் பயிற்சிப் பட்டறைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

மீராபாரதி

31.12.2010

Rubia, K. (2009). The neurobiology of Meditation and its clinical effectiveness in psychiatric

disorders. Biological Psychology, 82(1)–11

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Osho (2010). The Psychology of the Esoteric, #4. http://www.osho.com/Main.cfm?Area=Magazine&Language=English

Somasundaram, Daya. (1994). தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” http://noolaham.net/project/26/2559/2559.pdf

Shao, R. & Skarlicki, D. P. (2009). The Role of Mindfulness in Predicting Individual

Performance. Canadian Journal of Behavioural Science , 41(4), 195–201

Smith, J.C. (2005). Relaxation, Meditation, & Mindfulness: A Mental Health Practitioner’s

Guide to New and Traditional.

Toneatto, T. & Nguyen, L. (2007). Does Mindfulness Meditation Improve Anxiety and Mood

Symptoms? A Review of the controlled research. Canadian Journal of Psychiatry; 52(4),

260.

Weiss, M., Nordlie, J.W., Siegel, E.P.(2005). Mindfulness-Based Stress Reduction as an

Adjunct to Outpatient Psychotherapy. Psychotherapy and Psychosomatics, 74(2). 108

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702

Sunday, September 5, 2010

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?



இலங்கை வாழ் மனிதர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும்(?) மனிதர்கள் முன் மிக முக்கியமான ஒரு கேள்வி ஒன்று இன்று எழுகின்றது என்றால் சந்தேகமில்லை. அல்லது அவ்வாறு எழ வேண்டும். இன்றைய நமது தேவை இராணுவ வெற்றியா? அல்லது அரசியல் தோல்வியா? ஏன்பதே அக் கேள்வி. இதற்கான பதில் என்ன?



புலிகள் இராணுவரீதியாக ;தோற்கடிக்கப்படவேண்டும்! என்பதில் மனித உரிமையாளர்களுக்கும் ஐனநாயகவாதிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரச ஆதரவாளர்களுக்கும் மனிதாபிமானிகளுக்கும் கருத்துவேறுபாடோ மனதில் சந்தேகமோ இல்லை. ஏனனில் புலிகளின் தலைமைத்துவத்தின் ஐனநாயகமின்மை, கருத்து சுதந்திரம் இன்மை, சிறுவர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, பல அமைப்பு கட்சி அரசியலுக்கு எதிராக இருப்பது, மாற்று அரசயலாளர்களை கொல்வது, மற்றும் தடை செய்வது, தன்னிச்சையாக பொது அரசியலில் ஈடுபடுவது, மற்றும் அரசியல் நோக்கமோ திட்டமோ இல்லாமை, நிலங்களையும் சுழலையும் மாசுபடுத்துவதும் வீணாக்குவதுமான செயல்களில் ஈடுபடுகின்றமை, என்பவை புலிகளின் தலைமை ஆகக் குறைந்தது இராணுவ ரீதியாகவாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்குப் இவை போதுமான காரணங்களாகும். இவ்வாறான ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடும் புலி;களினால் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதில் சந்தேகமே இல்லை. தப்பித் தவறி அரசியல் தீர்வு ஒன்று இவர்களினால் உருவாகுமேயானால் அது நிச்சயமான ஒரு சமூக மனித விடுதலைக்கு வழிவகுக்காது என்பது நிச்சயமான ஒன்று. மேலும் இவர்களது ஆயுத பலத்;தினால் ஆரோக்கியமான சுழல் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் இடங்களில் மட்டுமல்ல இலங்கையிலும் தென்இந்தியாவிலும் மற்றும் ஒரளவு புலம் பெயர் சுழலிலும் இருக்கப்போதில்லை. ஆகவே இவர்களது இராணுவப்பலம் அழிக்கப்படவேண்டும் என்பதை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. மேலும் இவர்களது இராணுவ அரசியல் வெற்றி எதிர்கால மனிதர்களுக்கு (குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் தொழிலாளர்கள் சதியால் அடக்கப்பட்டவர்கள்) எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத்தரப்போவதில்லை. ஆகவே இவர்களது இராணுவபலம் அழிக்கப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை யார் செய்வது என்பது முக்கியமானது? இலங்கை இராணுவமா???



இன்று இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு முன்னேறிச் செல்வது புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஏனனில் அந்தளவிற்கு புலிகளின் மிலேச்சத்தனமான செயல்களால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் ;பாதிப்பைக் காரணங்காட்டி இராணுவத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது அவர்களது வெற்றியில் மகிழ்வதோ சரியான நிலைப்பாடாக இருக்கமுடியாது என்பது புகுத்றிவாளர்களுக்கும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கும் புர்pயும் என்பதில் சந்தேகமில்லை. ஏனனில் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பிரதேசங்கிளில் புலிகள் உட்பட பல்வேறு ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்று காரணமானவர்களே இந்த இலங்கை இராணுவத்தை வழிநடாத்தும் சிறிலங்கா அரசே என்றால் மிகையல்ல. எந்தக் காரணங்களுக்காக மனிதர்கள் புலிகளை; எதிர்க்கின்றார்களோ அதே காரணங்களுக்காகவும் இலங்கை ;அரசையும் அதன் இராணுவத்தையும் அவர்கள் எதிர்க்கவேண்டும். மேலும் புலிகளைப் போல அல்லது அற்கும் மேலாக சிறிலங்கா அரசு தமிழ் பேசும் மனிதர்களின் வாழும் உரிமையையும் மற்றும் அடிப்படை ஐனநாயக உரிமைகளையும் மறுப்பவர்களாக இருக்கின்றனர். புலிகளுக்கு மாற்றாக இவர்களை ஆதரிப்பதும் இவர்களது வெற்றியில் மகிழ்வதும் புலி எதிர்ப்பாளர்களது முரண்பாடான சிந்தனையையும் இயலாமையையுமே வெளிப்படுத்துகின்றது என்பது வெளிப்டையான ஒரு உண்மை. மேலும்; புலி எதிர்ப்பாளர்கள் சிலர் அல்லது பலர் புலிகளிடமிருந்து எந்தவகையிலும வேறுபடவில்லை. அவர்களதும் தாம் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களிலும் புலிகளைப் போன்றே மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது நாளாந்தம் நிறுபிக்கப்படுகின்ற ஒரு உண்மை.



புலிகளை எதிர்ப்பது என்பது புலிகளின் தலைமையை எதிர்ப்பது என்பதாகவே இருக்கவேண்டும். மாறாக ;புலிகளின் அமைப்புக்குள் புரிந்தோ புர்pயாமலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ அல்லது உணர்சியினாலோ அல்லது சுழ்லையினாலோ இணைந்திருக்கும் அங்கத்தவர்கள் குறிப்பாக சிறுவர் சுறுமியர் மற்றும் பெண்கள் மற்றும் சக மனிதர்களை; எதிர்ப்பதாக, அவர்களளை அநியாயமாக அழிப்பதாக இருக்கக் கூடாது. புலிகளின் தலைமை மேற்கொள்ளும் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பல்ல. மேலும் சுழ்நிலைக் கைதிகளாக புலிகளில் இணைந்திருக்கும் சிறுவர் சிறுமியரையும் ஆண்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் பேசும் மனிதர்களையும் கொன்று அழிப்பதாகவே இராணுவத்தின் புலி அழிப்பு நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது புலிகளுக்கு ;ஆதரவளிப்பதைபோன்ற ஒரு ஆரோக்கியமற்ற செயற்பாடே. ஏனனில் இராணுவத்திற்கும் இலங்கை அரசுக்கும் வழங்கப்படும் ஆதரவு என்பது எந்தவகையிலும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை விளைவாகத் தரப்போவதில்லை. இதேபோன்று புலிகளுக்கு ஆதரவளிப்பது என்பதும் பிரச்சனைக்கு தீர்வு ஒன்றைத்தரப்போவதில்லை. அப்படி எனின் தீர்வுதான் என்ன?



புலிகளின் இதுகாலவரையான வன்முறை செயற்பாடுகள் எப்படி இன முரண்பாட்டிற்கான அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வை தருவதற்கு பெறுவதற்கு உதவவில்லை. ஆகக் குறைந்தது பரந்துபட்ட உலக மக்களனின் ஆதரவைக் கூட பெற முடியாது உள்ளது. இதற்கு காரணம் இவர்களது அரசியலற்ற வெற்று இராணுவ மற்றும் மனிதாபிமானமற்ற வன்முறை நடவடிக்கைகளே என்றால் மிகையல்ல. இதன் மறுதலையாக போன்றது தான் இலங்கை இராணுவத்தின் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளுக்காக குரலையும் நசுக்கி குழிதோண்டிப் புதைப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.; அவ்வாறு நடைபெறாது எனக் கூறுவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதன் அர்த்தம் புலிகள் இல்லாது பிரச்சனை தீர்க்கமுடியாது என்பதல்ல. மாறாக இலங்கை அரசுக்கு இன ;முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதில் அக்கறை இல்லாது இருப்பது மட்டுமல்;ல தெளிவும் இல்லாது இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகக்குறைந்தது பொதுப்புத்தி கருத்தியல் கூட இம் முரண்பாடு தொடர்பாக இதுவரையும் இல்லாதிருப்பது கவலைக்கிடமானதே.



புலிகளின் அரசியலும் ஆயுத செயற்பாடுகளும் முரண்பாடனவைகள்hக இருக்கின்றன. பூநகரியை இராணுவம் பிடித்தவுடன் பிரபாகரன் இது தந்திரோபாய பின்வாங்களே என்றும் மேலும் மூன்று மாத காலத்தில் மீண்டும் தாக்குவோம் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இச் செய்தி வெளிருவவதற்கு சில நாட்களுக்கு முன்பு அரசியல பொறுப்பாளர் நடேசன் அவர்கள பேச்சுவார்ததைக்கு தாம் தயார் எனக ;கூறியிருப்பதாக செய்திகள் தெரிவித்திருந்தன. புலிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. அல்லது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கதைத்து மனிதர்களை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களை தொடர்ந்தும மந்தைகளாக ஏமாற்றியே வருகின்றனர். ஆக தொடர்ந்தும் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் சக மனிதர்களையும் அவர்களது உயிரையும் உழைப்பையும் பலி கொடுப்பதே அவர்களது கொள்கையாக இருக்கப்போகின்றது. தமிழீழம் என்பது யதார்த்தமற்றதாயினும் அத தமிழ் பேசும் மனிதர்களினது கனவாகவும் அந் நிலம் அவர்களது உடல்களின் புதை நிலங்களாகவும் புலிகளின் அதிகாரத்திற்கான அரசியல் ஆயதமாகவும் மட்டுமே இனிவரும் காலங்களில் இருக்கப்போகின்றது. இன்று புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பது தமது இயலாமையின் வெளிப்பாடே. ஆல்லது மீண்டும் தம்மை பலப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய செயற்பாடே என்பது வெளிப்படையான ஒரு விடயம்.



ஆகவே பிரபாகரன ;அவர்களே! மூன்று மாத காலத்தின் பின் தங்களது தன்முனைப்புக்கு தீணிபோடும் மேலும் இளம் மனிதர்களை பகடைக்காயாக்கி பலிகொடுக்கும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்காது பிரச்சனையை தீர்ப்பதற்கான காத்திரமான ஆரோக்கியமான வன்முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுங்கள் என பாதிக்கப்படும் மனிதர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.



மேலும் புலிகள் இராணுவ பலம் கொண்டிருந்த காலங்களில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருந்தால் அது ;வரவேற்க்க கூடிய ஆரோக்கியமான விடயமான கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இருப்பினும் இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தி பேச்சுhவார்த்தைக்கு முன்வருவது தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை மகிழ்வான விடயமே. ஏனனில் அமைதியான ஒரு சுழலிலையே சமாதானம தொடர்பாக உரையாடலாம்.



இந்த இடத்தில் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் அமைப்பு சாரா பொது மனிதர்களினதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மனிதர்களினதும் பங்களிப்பு முக்கியத்துவப்படுகின்றது. இவர்கள் எந்தப் பக்கமும் சாராது சகல மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றாக குரல் கொடுக்கவேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு குரலின் இன்மை, அதற்கான ஒரு இடைவெளி நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இன்று அக் குரல் கேட்கப்படுவதற்கான, அந்த இடைவெளி நிறப்பப்படுவதற்கான காலம் உருவாகிவருகின்றது அல்லது புதிய மூன்றாம் தரப்பு ஒன்று வெளிவரவேண்டியதற்கான ;காலம் நம்முன் வந்துகொண்டிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இது தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களால் கவனத்தில் எடுக்கப்படாமல் இன்னும் இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமே. ஏனனில் குறிப்பாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றையை செயற்பாடுகள் அவ்வாறனவையாக இருக்கின்றன.



புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள், இரு ;தரப்பும் போரை நிறுத்துக்கள்! பிரச்சனைக்கு தீர்வை முன்வையுங்கள்! போன்ற கோரிக்கைகளை முன்வைக்காது புலிகளுக்கு :ஆதரவாகவும் அவர்களாலும் இராணுவத்திhலும் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு உதவுவது என்றடிப்படையில் நிதி சேகரிப்பதும் பொருட்கள் சேகரிப்பதுமான வழங்காமான போர்க்கால செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். இது எந்தவகையிலு; இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் மேலும் குறிப்பாக புலிகளிடமும் இராணுவத்திடமும் மற்றும் ஆயுதக் குழுக்களிடமும் அகப்பட்டு சிறையுண்டு வாழும் மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. மாறாக இவ்வாறான செயற்பாடுகளை; முன்னெடுக்கும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தனிநபர்களின் குறிப்பிட் நாட்டிலான தமது அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான சமூக அந்தஸ்தையுமே பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகளே. இதேபோன்று புலி எதிர்ப்பாளர்களது அரசாங்க ஆதரவு செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைத் தவிர யாருக்கும் நன்மை அளிக்கப்போவதில்லை. இது அவர்களது இயலாமையிலிருந்து உருவாகின்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகள். ஆடிப்படையில் இருவரும் அழிவுக்கும் வன்முறைக்குமே ஆதரவளிக்கின்றனர். அப்படி எனின் என்னதான் செய்யவேண்டும்?



இலங்கை வாழ் மனிதர்களினதும் மற்றும் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களினதும் நாளாந்த வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிக்கும் சுழலை உருவாக்குவதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை மனிதர்கள் ஒன்றாக செயற்படவேண்டிய தருணம் இது. மேலும் ஒவ்வொரு மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் செயற்பாடுகளை அணைத்து தரப்பினரும் முன்னெடுக்க நிர்ப்பந்திக்குமு; செயற்பாடுகளையும் குறிப்பாக யுத்தத்தையும் வன்முறை செயற்பாடுகளையும் நிறுத்தி அனைவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதை வலியுறுத்தவேண்டும். இதுவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் முன் உள்ள பொறுப்பான செயற்பாடு என்றால் மிகையல்ல.



இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இதைவிட மோசமாக உலகின் பல பாகங்களில் ஆயுதக ;குழுக்களாலும் அடக்குமுறை அரசுகளாலும் மனிதர்கள் படும் இன்னல்கள பல பல. சொற்களில் எழுதமுடியாதவை. ஐPரணிக்க முடியாத வாழ்வை இம் மனிதர்கள் வாழ்கின்றனர்கள். இம் மனிதர்களின் விடிவுக்கு வழி சகலவிதமான ஆயுத செயற்பாடுகளுக்கும் முற்றுப்முள்ளி வைப்பதற்று உலகளாவிய ரீதியில் செயற்படுவதே. ஏனனில் இன்று உலகின் முக்கியமான இலாபகரமான வியாபாரம் என்றால் அது ஆயுத விற்பனையே. இந்த ஆயுதங்களே மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்கும பயன்படுத்தப்படுன்றது. இந்த ஆயுதங்களை வாங்குவதற்கும் மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்குமே புலம் பெயர் நாடுகளில் வாழும் பல மனிதர்கள் தம் உழைப்பைக் கொடுத்து பணம் வழங்குகின்றனர். இது கொள்கைரீதியான பங்களிப்பு என்பதை விட புலம் பெயர்ந்து சுகமாக பாதுகாப்பாக வாழும் மனிதர்களின் குற்ற உணர்வின் நிமித்தம் ஏற்படும் ஒரு கடமை உணர்வே இது. அதாவது குற்றஉணர்வினால் முன்னெடுக்கப்படும் ஒரு பொறுப்பற்ற செயல்.



ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் தம் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்புடன் செய்யவேண்டியது காலம் இது. ஆவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சுகல தரப்புகளையும் யுத்தததையும் வன்முறை செயற்பாடுகைளயும் நிறுத்தி பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு நிர்ப்பந்திப்பது.
இடைக்கால தீர்வு ஒன்றை உருவாக்கி முழுமையான தீர்வுக்காக தொடர்ந்தும் செயற்படக் கோருவது.
சுகல மனிதர்களதும் அடிப்படை வாழும் உரிமைகளை மதிக்கக் கோருவது.
குறிப்பாக எழுத்து பேச்சு சுதந்திரங்களை மதிக்க கோருவது.
சிறுவர் சிறுமியரை ஆயுதக் காலாசாரத்தில் இருந்து விடுவித்து சிறந்த கல்வியையும் வாழ்வையும் வழங்க நிர்ப்பந்திப்பது.
புல கருத்துள்ளவர்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கும் ஐனநாயக வழியில் செயற்படுவதற்குமான சூழலை உருவாக்க கோருவது.
மனிதர்களின் புதைகுழிகளில் கொலைக் களங்களிலும் உருவாகும் தமிழீழம் யாருக்கும் தேவையில்லை! அதானல் பயனுமில்லை.
தீர்வை முன்வைக்காத இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை எந்தப் பயனுமற்ற ஆரோக்கியமற்ற காத்திரமற்ற ஒரு செயற்பாடு.
மனிதர்களிடம் வன்மத்தையும் வன்முறையையும் பகைமையையும் உருவாக்கும் இராணுவ வெற்றிகள் அல்லது தோல்விகள் யாருக்கும் வேண்டாம். இது பயனற்றது.
அனைவருக்கும் நன்மையளிக்கும் அரசியல் வெற்றியே அனைவரும் விரும்புவது. இதுவே ஆரோக்கியமானதும் மனித வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பங்களிப்பதாகும்.




புலம் பெயர்ந்த மனிதர்களின் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு செயற்பாடே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலும் அமைதியான சமாதானமான ஒரு சூழலை வாழ்வை தோற்றுவிக்கும். மேலும் பிற உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்.

உலகத்திலிருந்து ஆயுதக் காலாசாரத்தையும் வன்முறையையும் இல்லாது ஒழிக்கும் வரை மனி வாழ்வு என்பது இருண்டதாகவும் நிச்சயமற்றதாகவுமே இருக்கும்.



இதற்கு தனி மனிதர்களின் பிரக்ஞையான வாழ்வும் பொறுப்பான செயற்பாடுகளுமே வழிவகுக்கும். ஓவ்வொரு தனிமனிதரிலும் ஏற்படும் மாற்றமே அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஒவ்வொருவரது தனித்துவங்கைளயும் உரிமைகளையும் மதிக்கும் சமூக மாற்றத்திற்கான முதற்படி. ஆல்லது சமூக மாற்றம் என்பது மனித வாழ்வின் ஒரு கற்பனையாகவே என்றும் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

-மீராபாரதி-

பிரக்ஞை: துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

பிரக்ஞை: துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மனிதர்களும் குறிப்பாக புலம் பெயர் விடுதலைப் புலிகளின் தலைமைகளும் மற்றும் பிற இயக்கத் தலைமைகளும் கூட இவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் தமது உயிரைக் கொடுத்து வேலை செய்கின்றளவிற்கு அறிக்கைகள் மட்டும் விடுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரும் எரிகிற வீட்டில் கூரையைப் பிடுங்குவதுபோல் தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கஸ்டங்கள் முரண்பாடுகளில் குளிர்காய்வதுடன் தமது கட்சிகள்; அல்லது அமைப்புகள் இயக்கங்கள் என்பவற்றையே உறுதியாக நிலைநிறுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமே முயற்சிக்கின்றனர். இதன்மூலம் தமது அதிகாரங்களை பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் மட்டுமல்ல மேலும் மேலும் அவர்களிடம் பணம் கறப்பதற்கும் அதைப் பெருக்குவதையுமே நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காகவே இதுகால வரையான தமிழ் பேசும் மனிதர்களின் சமூக அரசியல் சுழல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் அவ்வாறே நடைபெற்று வருகின்றன. இதற்காக அண்மைக் காலங்கள்வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் போராட்டம், வீரம், துணிவு, வெற்றி மற்றும் துரோகி....என்பன போன்று பல. இன்று துரோகி என்பது பரவலாகவும் மற்றும் சரணாகதி, சரணடைதல், சமாதானம் போன்ற சொற்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே துரோக அரசியல், சரணாகதி அரசியல், சரணடையும் அரசியல், சமாதான அரசியல் என்பவற்றின் பண்புகள் மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் நாம் அவற்றை விளங்கிக்கொண்டு முன்நோக்கி செயற்பட முடியும். மேலும்; இதுகாலவரை நாம் எவ்வாறன அரசியலை முன்னெடுத்தோம் என்றும் இனி எவ்வாறன அரசியலை முன்னெடுக்காலாம் எனவும் ஆராயவும் சிந்திக்கவும் முடியும்.

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன்; தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. ஆகவே இவ்வாறு இவர்கள் தமக்குள் பதவி அதிகாரம் மற்றும் முக்கியமாக பணத்திற்காக இழுபறிப்படுவதும் சண்டைபிடித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. ஏனனில் இவர்களின் அடிப்படை அரசியல் தமிழ் பேசும் மனிதர்களின் தேசிய விடுதலைக்கான அரசியலை பெயரளவிலும் பிரச்சாரளவிலும் முதன்மையானதான கொண்டிருந்தார்கள். இவ்வாறன அரசியலைப்; பயன்படுத்தி தமிழ் பேசும் மனிதர்களிடம் பெருமளவான பணத்தை வசூலித்து பின் அவர்கள் மீதே அதிகாரத்தை பிரயோகித்தும் அடக்கியும் வந்தமையே புலித்தலைமையின் கடந்தகால அரசியல் வரலாறு. இன்று இவ்வாறு தமக்குள் பிளவுபட்டிருக்கும் புலிகள் குறிப்பாக புலம் பெயர் புலித் தலைமைகள் ஒவ்வொரும் ஒவ்வொரு பாதைகளில் அதாவது எதிர்எதிர் பாதைகளில் தமது குறுகிய நலன்களுக்காகவும் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் செயற்படுகின்றனர். ஆகவே புலித் தலைமையின் கடந்தகால ;செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோடு நோக்குவதன் மூலம் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான செயற்பாடுகளிலிருந்து நாம் பாடங்கள் கற்பது பயனுள்ளதாகும். அதேவேளை புலம் பெயர் புலிகளின் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்;ச்சியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் முக்கியமானதாகும். ஏனனில் ஏற்கனவே பலவழிகளில் நசிந்துபோயிருக்கும் தமிழ் பேசும் மனிதர்களை தமது குறுகிய நலன்களுக்காக இவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தாமலிருப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான விமர்சனங்கள் உதவும். மேலும் கடந்தகால வரலாற்றை பக்கச் சார்பற்றவகையில்; கற்பதே, நாம் மேற்கொண்டு ஆரோக்கியமான சிந்தனைகள் செயற்பாடுகள் மூலம் முன்நோக்கிச் செல்வதற்கு உதவும்;.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய “துரோக அரசியல்” என்பது தொடர்பான நாம் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருக்கவேண்டும். ஆயுதப்போராட்டக் காலங்களில் குறிப்பாக புலிகளின் தனிச்சையான ஆதிக்கமிருந்தபோது இச் சொல்லும் அதனடிப்படையிலான செயற்பாடும் மிகப் பிரபல்யமாகவும் இருந்தது. இதற்கு முன்பு பாராளுமன்ற அரசியலிலும் இச் சொல் பயன்படுத்தப்பட்டபோதும் ஆயுதப்போராட்டத்தின்போதுதான் “துரோக அரசியல் செய்பவர்கள்” என்பவர்கள் கொலைசெய்யப்பட்டு அழிக்கப்படுமளவிற்கு வளர்ந்து ஒரு அரசியல் செயற்பாடாக கட்டமைக்கப்ட்டது. தனி நபர் நலன்களுக்காக, தமது பதவிகளைக் காப்பதற்காக, தனிப்பட்ட குரோதங்களுக்காக, கருத்துமுரண்பாடுகளுக்காக என பல உள்மனக்; காரணங்களுக்காக அரசியல் என்ற முகமுடி அணிந்து அரசியல் காரணங்கள் பல கூறி துரோகி என்ற பட்டமளித்து பல மனித உயிர்களை ஒவ்வொரும் இயக்கங்களும் கொலை செய்தன.. இதன் தாக்கத்தால் பயத்தால் பல மனிதர்கள் தாம் துரோகி பட்டம் பெறக்கூடாது என்பதற்காகவே ஆதரவாளராக செயற்பட்டனர் அல்லது நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்தனர். இவ்வாறுதான்; தமிழ் பேசும் சமூகத்தில் “துரோகி” என கட்டமைக்கப்பட்ட சொல்லினால் ஏற்பட்ட மிகமோசமான எதிர்விளைவுகள் ஆரம்பமாகின. அதாவது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு சார்பாகவோ ஆதரவாகவோ இல்லாது சிறிலங்காவின் சிங்கள கட்சிகள் சார்ந்து அல்லது இடதுசாரி கட்சிகள் சார்ந்து செயற்படுகின்றவர்களுக்கு இயக்கங்களால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின் போராட்டமானது புலிகளின் தலைமையால்;; ஏதேச்சதிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது புலிகளுக்கு எதிரானவர்கள் அதாவது புலிகளைப் போலவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடியதாக கூறிய பிற தமிழ் இயக்கங்கள்; உட்பட அனைவரும் “துரோகி” என முத்திரை குத்தப்பட்டு கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் எரிக்கப்பட்டும் குண்டுகள் வைத்தும் அழிக்கப்பட்டனர். அதாவது தமிழ் பேசும் மனிதர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது புரிந்துணர்வினடிப்படையில் பல்வேறு தளங்களில் வழிகளில் முனைப்புடன் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடன் செயற்பட்ட பலர் புலிகளின் அரசியலை ஏற்கவில்லை அல்லது உடன்படவில்லை என்ற ஒரு காரணத்திற்காகவே “துரோகி”யாக முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கே இந்த நிலைமை எனின் புலிகளை விமர்சித்தவர்களது நிலை தொடர்பாக நாம் புரிந்துகொள்ளலாம். இதன் விளைவாக, “துரோக அரசியல்” செய்பவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை என்பது தமிழ் பேசும் மனிதர்களின் சமூகத்திலிருந்த கொஞ்சநஞ்ச ஐனநாயக விழுமியங்களையும் இறுதியாக குழித்தோண்டி புதைத்தது. அதாவது புலிகளின் அரசியலுக்கு மாற்றான அனைத்து அரசியல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது அல்லது புலிகளின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிற ;இயக்கங்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக இந்திய இராணுவம் இருந்த காலத்தில் இவர்களது அதிகார அடாவடித்தனம்; புலிகளின் சதாரண அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மனிதர்களுக்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் நடாத்தப்பட்டது. இதனால் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக நடைபெறவேண்டிய ஆரோக்கியமான போராட்டத்தில், கனவு கண்ட புதிய சமுதாயத்தில் இருக்கவேண்டிய சகல ஐனநாயக விழுமியங்களும் பன்முகத் தன்மைகளும் அனைத்து இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என்பவற்றால் இல்லாது செய்யப்பட்டது. இதற்காக பொறுப்பு ஏற்கவேண்டியது சமூகப் பிரக்ஞை கொண்டு ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. ஏனனில் தன்னுயிரைக் காப்பாற்ற சரணடைய முயன்றுள்ளார். ஆல்லது சயனைட் அருந்தாது தப்பிக்க முனைந்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் புலிகளால் கட்டமைக்கப்பட்ட பிரகாரனின் விம்பம் இறுதிநேரத்தில் உடைபட்டது என்பது மட்டும் உண்மையானது என்பதை இன்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான “அரசியல் துரோகி” களுக்கு தண்டனை என்ன?


பொது மனிதர்களுக்கு எதிராகவும் ஐனநாயக மறுப்பு கொண்ட அரசியல் செயற்பாடுகளிலும் ஒருவர் ஈடுபடுவாரானால் அவருக்கான அதிகபட்ச தண்டனை என்பது நிச்சயமாக மரண தண்டனையாக இருக்கக் கூடாது.. மரண தண்டனை என்பது அகராதியிலிருந்தே எடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது உறுதியாக நிலைப்பாடு ஆகும். ஏனனில் எனது செயற்பாடு பேச்சு எழுத்து என்பவற்கு மாறான அல்லது எதிரான ஒரு மனிதரின் செயற்பாட்டுக்காக பேச்சுக்காக எழுத்திற்காக அவரது உயிரை எடுப்பது என்பது ஐனநாயக விரோதம் மட்டுமல்ல காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான செயற்பாடாகும். ஒருவருக்கான தண்டனை என்பது அவரை ஆரோக்கியமான வழிகளில் நேர்மறை மனிதப் பண்புகளுடன் மாற்றுவதற்கான வழிவகையாக இருக்கவேண்டுமேயொழிய அவரையே அழிப்பதாக இருக்கக்கூடாது. ஏனனில் காலோட்டத்தில் ஒருவர் மீது குத்தப்படும் எதிர்மறை முத்திரை என்பது நேர்மறை முத்திரையாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் வாழ்வில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமான மாற்றமா என்பது சிந்தனைக்கு உரியதாக இருக்கலாம். ஏனனில் ஒருவர் தனது எல்கை;குட்பட்ட அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பவே தான் எதிர்நோக்கும் சூழலைப் புரிந்துகொள்வதுடன் அதனடிப்படையில் செயற்;படுவார்.

உதாரணமாக இன்று தமிழ் தேசிய அரசியலில் இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் சிலர் அல்லது பலர் முன்பு பல்வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்தவர்கள். அந்த இயக்கங்கள் புலிகளினால் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டபேர்து இவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. காலமாற்றத்தின் பின் இவர்கள் புலிகளுடன், அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் மீது; நம்பிக்கை வைத்து, அல்லது வேறு வழி ஒன்றுமில்லை என அதில் இணைந்து, அல்லது அவர்களது அரசியலுக்குள் சரணாகதி அடைந்து, அல்லது மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் என பல காரணங்களுக்காக புலிகளின் அரசியலை பின்நாட்களில் முன்னெடுத்தனர் அல்லது முன்னெடுக்கின்றனர். இவ்வாறு புலிகளால்; துரோகி என முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் பிற்காலங்களில் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் என புலிகளின் தலைiமையால் அலங்கரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் நடைபெற்றதுண்டு. அதேவேளை மிகச் சிறந்த போரளிகள் என் புலிகளால் பொது மனிதர்களால் போற்றப்பட்ட பலர்; துரோகிகள் என குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆகவே காலம் ஒருவரை பலவாறு மாற்றுகின்றது. புலித்தலைமையை அன்று போற்றிய அரசியல்வாதிகள்; பலர், புலிகளின் ஆதிக்கம் இல்லாத இன்றைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிடம் மீண்டும் அரசியல் சரணாகதி அடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.

ஆகவே ஒருவரை துரோகி என்பது சர்வதிகாரமாகவும் சமூகத்திலிருக்கின்ற ஐனநாயக பண்புகளை வழிகளையும் முடுவதாகவுமே இருக்கும். ஒவ்வொருவருக்கும் மற்றவர்களது ஐனநாயக உரிமைகளை பறிக்காதவரை மறுக்காதவரை தான் விரும்பும் அரசியலை தனது வழிகளில் செய்வதற்கான தார்மீக உரிமை இருக்கின்றது. இதை ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும். இங்கு துரோகம் எனப்படுவது சார்பு நிலையானது மட்டுமே. இதில் யார் சரி பிழை என்பதை எதிர்கால வரலாறு மட்டுமே தீர்மானிக்கும். ஆகவே ஒருவரது அரசியலை துரோக அரசியல் என முத்திரை குத்துவதைக் கைவிட்டு அவரவர் பாதையில் அடக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் விடுதலைக்கான தமது பங்களிப்பு, பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். மேலும் மனித நலன்களுக்கா செயற்பட விரும்புகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் யார் அடக்கப்பட்ட மனிதார்களின் சார்பாக, அவர்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்கா உழைக்கின்றார்கள் என்பதே. இதைப் புரிந்துகொள்ளாதவரை, “துரோக, சரணகதி, சரணடைதல், சமாதான” அரசியல் என்ற பல முத்திரைகளை பிறர் மீது குத்தி குறுகிய பார்வையையும் செயற்பாட்டையுமே நாம் கொண்டிருக்க முடியும். ஒருவர் தனது சிந்தனை மற்றும் தான் செய்யும் செயற்பாடு என்பவை அடக்கப்பட்ட மனிதர்கள் அரசியல் சமூக அபிலாசைகளை உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற பிரக்ஞை இருக்கும் பொழுது மட்டுமே அவர் அம் மனிதர்கள் சார்ந்து தனது அரசியலை தான் விரும்பிய வழிகளில் முன்னெடுக்கின்றார் எனலாம். இவ்வாறன பிரக்ஞையில்லாதவர் தனது அற்ப சொற்க நல்ன்களுக்காக சரணாகதி அரசியலையே முன்னெடுப்பார். இருப்பினும் என்ன அரசியலை முன்னெடுப்பது என்பது ஒருவரது தெரிவு. ஆதைப் பற்றி நாம் நமது அரசியலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமை மட்டுமே நமக்குள்ளது.; நமக்கு எதிரான அரசியல் செய்கின்றார் என்பதற்காக அவர்களது உரிமைகளை மறுப்பதோ அடக்குவதோ அழிப்பதோ அல்லது மரண தண்டணை விதிப்பதோ நமத உரிமையல்ல. இது நாம் கனவு காணும் சமூகத்திற்கு எதிரான, ஐனநாயகத்திற்கு எதிரான, தனிமனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். ஆகவே “துரோக அரசியல்” என்ற சொல்லுக்கும் நாம் விடை கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சரணாகதி அரசியல் என்பது தமது சொந்தப் புத்தியிலும் பலத்தில் நிற்காது, தாம் அல்லது அடக்கப்பட்ட மனிதர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கும்; அவற்றுக்குத் தேவையான முடிவுகள் தீர்வுகள் என்பன தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் முழுமையாக விட்டுவிடுவதுடன் தம்மையும் அவர்களிடம் முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கூறுவதை எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாது ஏற்பதும் என்பதாகக் கூறலாம். உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அதனது தலைவர்களும் தமது அதிகாரங்களிலும் பதவிகளிலும் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். ஏனனில் இவர்களது அரசியல் செயற்பாடுகள் தமிழ் பேசும் மனிதர்களது அரசியல் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் உறுதியாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச அரசாங்கங்களிடம் முன்வைப்பதாகவோ அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பாதாகவோ தெரியவில்லை. ஏனனில் யார் ஆட்சியிலில் அல்லது அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களிடம் ஒவ்வொருமுறையும் அவர்கள் முன்வைக்கும் முடிவுகளுக்கும் தீர்வுகளுக்கும் அற்ப சலுகைகளுக்கும் தாம் சரணாகதி அடைவதுதான் இவர்களது பிரதான அரசியலாக என்றும் இருந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களது அரசியலை ஒவ்வொருமுறையும்; குழிதோண்டிப் புதைப்பதாகவே இவர்கள் வரலாறு இருக்கின்றது. இதில் இரண்டுவிதமான போக்குகள் உள்ளன. ஒன்று இலங்கையில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு, இந்திய ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதாரணமாக அன்றிலிருந்து இன்றுவரையான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இன்றைய தமிழ் தேசிய கூட்டணி வரையிலான கட்சிகளின் அரசியலும்;; அதன் தலைமைகளினதும் அரசியல் போக்கும் மரபும் இவ்வறானதாகவே உள்ளது. இரண்டாவது போக்கு இலங்கையில் ஆளும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைவது. உதராணமாக தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிரானவர்களது கட்சிகளின் கூட்டணி அரசியல் இந்த வகைக்குள் அடங்கும். இந்த வகைக்குள் முன்னாள் புலிகளின் தளபதிகள் இருப்பதுதான் இன்றைய முரண்நகை. இந்த முன்னால் புலிகளின் தளபதிகள், இன்று பேசும் அரசியலை கேட்டால் இவர்களா புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் என ஆச்சரியப்படவைக்கின்றது. அந்தளவிற்கு அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துள்ளார்கள். இவர்களது பழைய மொழியில் இதுதான் “துரோக அரசியல்”. இவ்வாறு இவர்களது அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் புலிகள் இயக்கத்தில் இருந்த அரசியல் இன்மையா அல்லது ஒவ்வொரு தனிபர்களிடம் இருந்த அவர்களது சொந்த அரசியல் அறிவின் பற்றாக்குறையும் சாதிய பிரதேச வர்க்க நிலைப்பாடுமா என்பது நம் சிந்தனைக்குரிய விடயம்.

ஆனால் இந்திய இலங்கை அரசாங்கங்கள் தமக்குள் முரண்பாடுகள் இருந்தபோதும் தமக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒரு ஆழமான உறவை;; வைத்துள்ளார்கள். இதனால்தான் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கும் நல்ன்களுக்கும் ஏற்ப பயன்படுத்தும் அரசியலாக தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முன்வு இருந்து இப்n;பாழுது வரை இருக்கின்றது. இது தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமானது. மறுபுறம் இவர்களது மொழியில் பார்த்தால், சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களின் அரசியலின் அடிப்படையில், அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலின் அடிப்படையில், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் என ஒவ்வொருவரும் முன்னெடுத்த முன்னெடுக்கின்ற அரசியல் என்பது அடக்கப்பட்ட பொது மனிதர்களுக்கு எதிரான “துரோக, சரணாகதி அரசியல்” என்றால் மிகையல்ல. இதற்காக இவர்களுக்கு துரோகி பட்டம் அளித்து மரண தண்டடை அளிப்பதல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலை முன்னெடுப்பவர்களின் பொறுப்பு. மாறாக இவர்களது பொறுப்பான பணியானது, அடக்கப்பட்ட மனிதர்களிடம் இவ்வாறான சுய நல பிழைப்பு அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அடக்கப்பட்ட பொதுமனிதர்கள் இவ்வாறான அரசியல்வாதிகளைக் புரிந்துகொண்டு புறக்கணிக்குமளவிற்கு பிரக்ஞை கொண்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் செயற்படவேண்டும்.

இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் சரணாகதி அடைந்ததைவிட யுத்த காலத்தில் அதாவது புலிகள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் புலிகளின் தலைமையிடம் சரணாகதி அடைந்தவர்கள் தான் மேற்குறிப்பிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல மனித உரிமை, ஐனநாயகம் கதைத்த மேலும் பலர் இவ்வாறு புலிகளிடம் சரணாகதியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இதற்கு காரணம் அன்று புலிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஐதீகங்கள் மயக்கம் மற்றும் பிம்பங்கள் என்பனவாகும். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட கருத்தாதிக்கத்தால் அல்லது அவர்களது வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அதில் மயக்கமடைந்து அவர்களது பிற்போக்கான அரசியல் செயற்பாடுகளையும் ஐனநாயக வீரோத போக்குகளையும் மறந்து அவர்களை ஏற்றுக்கொண்ட பலர் இன்றுவரை மீண்டும் விழித்து எழவில்லை என்பது கவலைக்கிடமானது. இதில் பல கலாநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களும் அடக்கம் என்பதும் இன்றுவரை இவ்வாறன புலம் பெயர் புலித்தலைமைகளுக்காக குரல் கொடுப்பதும் செயற்படுவதும் தமிழ் தேசிய அரசியலில் ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும். இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் தமது; அரசியல் உரிமைகளைப் வெறவேண்டுமாயின் இவ்வாறான சரணாகதி அரசியலுக்கு முதலில் முற்றுபுள்ளி வைக்கவேண்டியது அவசரமான அவசியமான செயற்படாகும். அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்கான, அவர்களின் நல்வாழ்வுக்கா, சமூக மாற்றத்திற்கான அரசியலை, தமக்கிருக்கும் ஜனநாயக வழிகளில் உறுதியுடனும் வெளிப்படையாகவும் முன்வைத்து பல்வேறு வழிகளில் செயற்படுவதனுடாக தமது நோக்கத்தை பிரக்ஞையுள்ள அரசியற் செயற்பாட்டாளர்கள் அடையலாம். இதுமட்டுமல்ல இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமது ஐனநாயக எல்லைகளை மேலும் பரந்தளவில் விரிவாக்கிக்; கொண்டு முன்னே செல்லலாம். இன்றைய சுழலில் இவ்வாறன செயற்பாடுகளை இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேசளவில் ஒருக்கிணைத்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதின் போக்கில் கட்டமைக்கப்பட்ட “துரோக மற்றும் சரணாகதி அரசியல்” தொடர்பான சொல்லாடலானது சரணடைதல் என்பது தொடர்பான எதிர்மறையான ஒரு கருத்தாதிக்கத்தை நமக்குள் விதைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் ஒரு மனிதராக எந்த ஒரு இராணுவத்திடமும் நான் சரணடைவது என்பது என்னாhல் சிந்திக்கவோ நினைத்துப் பார்க்கவோ முடியாத ஒரு விடயம். இதற்கு சரணடைவது வெட்ககேடானது என்பதல்ல முக்கியமான காரணம். மாறாக சரணடைதலின் பின் முகம் கொடுக்கவேண்டிய அல்லது அனுபவிக்கவேண்டிய சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை கற்பனை செய்யும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவே முடியாது என உணர்வதே முக்கிய காரணம். இருப்பினும் இறப்பதா சரணடைவதா என இரு தெரிவுகள் என் முன்னால் இருக்கும் பொழுது சரணடைவதையே தெரிவு செய்வேன். ஏனனில் நாம் போராடுவது எனது வாழ்வையோ பிற மனிதர்களது அதாவது புரட்சியாளர்கள் எதிரியாக கருதும் அரசாங்கத்திடம் அடியாளாக பணத்திற்காக வேலை செய்யும் இராணத்தினரின் வாழ்வை கூட அழிப்பதற்கல்ல. மாறக ஒவ்வொரு மனிதர்களதும் அவர்கள் வாழும் சமூகத்தினதும் வாழ்வை மேம்படுத்துவதற்கே நமது ஒவ்வொரு போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் மிகையல்ல. ஆகவே சரணடைவதன் மூலம் தொடர்ந்து வாழ்வதற்கான முடிவை எடுப்பதே சரியானது என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு சரணடையும் முடிவை எடுக்கும் பொழுது முன் திட்டமிடலுடன் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாதுகாப்பை பெற முடியுமாயின் அது நிச்சயமாக சாதகமான ஒரு விடயமே. ஏனனில் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது சித்திரவதையிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக இது இருக்கும். இரண்டாவது ஒரு அரசியல் கைதியாக போராட்டத்தை தொடர்வதற்கும் இது வழி செய்யலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்தும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதும் அவர் வாழ்வை பாதுகாப்பதும் மட்டுமல்ல போராட்டத்தையும் வேறு தளங்களில் முன்னெடுத்துச் செல்ல முனையலாம்;. ஆகவே சரணடைவது என்பது ஒன்றும் வெட்கப்படவேண்டிய விடயமல்ல. அது மிகவும் துணிகரமான முடிவே என்றால் மிகையல்ல. ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சரணடைதல் என்பது இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படாமை இறுதியாக புலிகளின் தலைமையே தன்னைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு கொண்டு வந்தவிட்டது மனிதாபிமானடிப்படையில் கவலைக்குரிய விடயமே.

விடுதலைப் புலிகளின் தலைமையானது தமது இராணுவரீதியான செயற்பாட்டுக்குள்தான் தமது அரசியலை உள்ளடக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனாhல்தான் போராட்டத்தில் இராணுவ ரீதியாக ஏற்படும் தோல்வி என்பதை தமது அரசியல் ரீதியான தோல்வியாகவும் கருதினர். ஆனால் நிச்சயமாக அப்படி சிந்திக்கவோ அல்லது இருந்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஏனனில் இரண்டும் முற்றிலிலும் இரு வேறு விடயங்கள் மட்டுமல்ல இராணு அல்லது ஆயுத வழி செயற்பாட்டின் தேவை என்பது பிரதான அரசியல் செயற்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய கால தேவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பகுதியான செயற்பாடு மட்டுமே. ஆனால் புலிகளின் தலைமை, ஒரு போராட்டத்தின் ;பகுதிச் செயற்பாடையே, போராட்டத்தின் பிரதான செயற்பாடாக கருதி மதித்து முன்னெடுத்தனர். இது தொடர்பாக கிளிநொச்சி பிடிபடுவதற்கு முன்பு, "இராணுவ தோல்வியா? அரசியல் தோல்வியா" என ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதை எனது வலையில் பார்க்கலாம். பல நேரங்களில் புலிகளின் தலைமை இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கத் தவறிவிட்டனர். புலிகளின் தலைமையானது தமதுஇறுதிக் கணங்களில் அரசியல் ரீதியாக சரணடைவது, இராணுவ ரீதியாக சரணடைவது, தமது நல்ன்களுக்காக சரணடைவது என மூன்றையும்; ஒன்றுடன் ஒன்று குழப்பியதன் விளைவே அவர்களுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவுக்கு காரணம் எனலாம். அதாவது இவர்கள் இராணுவ ரீதியாக சரணடைதல் என்பதை தமது அரசியலையே சரணடைய செய்யும் சரணாகதி அரசியலாகவும் நினைத்தமையே இன்றைய நிலைமை ஏற்ப்படக் காரணமாகவுள்ளது என்றால் மிகையல்ல.; கிளிநொச்சி பிடிபட்ட போது கூட சரணடைதல் என்பதை புலிகள் அரசியல் ரீதியான தோல்வியாக கருதாது தற்காலிக இராணுவ ரீதியான தோல்வியாகவும அதற்கான சரணடைதலாகவும் புரிந்து செயற்பட்டிருப்பார்களேயானால் இறுதிக ;காலங்களில்; குறிப்பாக பொது மனிதர்களுக்கும் கீழ் நிலை போராளிகளுக்கும் ஏற்பட்ட கொடுரமான நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஏனனில் குறிப்பிட்ட சுழ்நிலையைப் பொறுத்து, உதாரணமாக அதிகமான இழப்புகளை கொடுக்கப்போகின்றோம் எனக் கருதும் பட்சத்தில், அதாவது முதலில் பொது மனிதர்களது உயிரையும்; பின் நமது உயிரையும் பாதுகாக்;கும் நோக்கத்துடன் மற்றும் அடுத்த கட்டத்திற்கு தமது அரசியல் செயற்பாட்டைக் கொண்டு செல்வதற்குமான ஒரு தந்தர உபாயம் என இவ்வாறான இராணுவ சரணடைதலைக் கூறலாம்.; மாறாக இது ஒருவரது அல்லது இயக்கத்தினது அல்லது கட்சியினது அரசியலையோ அதன்; கொள்கைகளையோ சரணடையச் செய்வதாகவோ அல்லது நீர்த்துப்:போவச் செய்வதாகவோ அல்லது சரணாகதி அரசியலாகவோ இவ்வாறன சரணடைதல்கள் செயற்பாடுகள் ஏற்படுத்;தாது அல்லது கருதப்படமாட்டாது என்பதை அன்று புலிகளின் தலைமை புரிந்திருக்கவில்லை.

நாம் வாழும் காலத்தில் பல உதாரணங்கள் இருக்கின்றன. உதராணமாக அனைவரும் அறிந்த இரண்டு பிரபல்யமான தலைவர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் நெல்சன் மன்டேலா. மற்றவர் பிடல் காஸ்ரோ. இவர்கள் இருவரும் தம்;மை அடக்கிய இராணுவத்தால் பிடிப்பட்டவர்கள். இராணுவத்தில் பிடிபடுவதற்கு பதிலாக அவர்கள் அன்றே இறந்திருக்கலாம். அவ்வாறு அன்றே சண்டையிட்டு இறந்திருந்தால் என்ன பயன்? நிச்சயமாக அவர்களது உயிர் இருந்திருக்காது. போராட்டத்திற்கு என்ன நடந்திருக்கும் என எந்த விதமான எதிர்வும் கூறமுடியாது. ஆனால் அவர்கள் பிரச்சனைகளுடன் வாழ்ந்தார்கள். வாழ்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர்கொண்டு எவ்வாறு தமது போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லலாம் என சிந்தித்தவர்கள். செயற்பட்டவர்கள். நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தாவாரே போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர். பிடல் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற தனது பிரபல்யமான சொற்பொழிவை தனக்கு எதிரான அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் ஆற்றி அதை நாமும் கற்பதற்கு புத்தகமாக தந்தவர்.

இலங்கையிலும் இவ்வாறு பல உதாரணங்கள் இருந்தபோதும் தமிழ் தேசிய அரசியலில் தங்கத்துரை குட்டிமணி என்பவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் கைது செய்யப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் அவர்கள் நீதிமன்றத்தில் பேசியது அன்றைய சுழலில் முக்கியமான ஒரு போராட்ட அனுகுமுறையாக இருந்தது. அதாவது தம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தமது நோக்கத்தற்காக பயன்படுத்தினார்கள். இவ்வாறன ஒரு செயற்பாடே இவர்கள் வாழ்வானது. இது பொது மனிதர்களிடம் எழுச்சியை உருவாக்குதுடன் போராட்டம் தொடர்பான ஒரு விழிப்புணர்வையும் பரந்துபட்டளவில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களினுடான இலவசமான பிரச்சாரத்திற்கும் வழிவகுத்தது எனக் கூறலாம். சிலர் இதற்கு எதிரான கருத்தாக, “பிரபாகரன் பிடிபட்டிருந்தால் அல்லது சரணடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவைக் கொன்றது போல் கொன்று இருப்பார்கள்” என்று கூறலாம். இது உண்மையானது மட்டுமல்ல அவ்வாறுதான் இறுதியில் நடந்தது. இருப்பினும் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக இனி சண்டை பிடித்து வெல்லமுடியாது என உணர்ந்த நேரத்தில் சரணடையாது ஆகக் குறைந்நது மீண்டும் காட்டுக்குள்ளாவது சென்றிருந்தால் அனைவரும் அல்லது குறைந்த இழப்புகளுடன் தப்பித்திருக்கலாம். அனால் அதைக் கூட செய்யாது பல்லாயிரக்கணக்கான மனிதர்களும் இளம் போராளிகளும் அநியாயமாக இறப்பதற்கு அல்லவா புலிகளது தலைமையின் பிடிவாதமான அல்லது அவர்கள் எதையோ எதிர்பார்த்த அல்லது யாருக்காகவோ காத்திருந்த முடிவுகள் வித்திட்டது. இந்தத் தவறு எதனால் ஏற்பட்டது? இவ்வாறான தவறுகளுக்கு இன்று இருக்கின்ற புலிகளின் தலைமைகளில் யார் பொறுப்பாக பதில் கூறக் கூடியவர்கள்? கே.பி யா? நெடியவனா? உருத்திரகுமாரனா? ஆல்லது வேறு யாருமா? ஆல்லது இந்த பொறுப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துவிட்டு தொடர்ந்தும் பிழைப்புவாத, பணம் உழைக்கும், நாட்களைக் கடத்தும் அரசியலையா தொடரப்போகின்றார்கள்? தமிழ் பேசும் மனிதர்களே எப்பொழுது இவர்களை நோக்கி நாம் கேள்வி கேட்பது? இறுதி போரில் இறந்தவர்கள் தொடர்பாக இவர்களது பொறுப்பு என்ன?

புலிகளின் தலைமை பொது மனிதர்களுக்காகத் தான் போராடினார்கள் எனின் அவர்களைக் காப்பாற்றுவதற்காக அநியாய அழிவுகளை தடுப்பதற்காக கிளிநொச்சி பிடிபடப்போகும் தறுவாயில் அல்லது பிடிபட்ட பின்பு கூட தமது ஆயுதங்களை மௌனிக்க செய்திருக்கலாம். ஆந்த நேரம் சரணடையும் முடிவு எடுக்கப்பட்ருந்தால் அது ஆரோக்கியமான உறுதியான தொலைநோக்குள்ள ஒரு அரசியல் முடிவாகவும் பல மனித உயிர்களைப் பாதுகாத்ததற்குமான முடிவாக இருந்திருக்கும். ஆனால் இறுதிக் கணங்களில் முள்ளிவாய்க்காளில் வைத்து தமது ;ஆயுதங்களை மௌனிக்கச் செய்து சரணடைந்தது என்பது பொது மனிதர்கள் மற்றும் கீழ் நிலைப் போராளிகளின் உயிர்களை எந்தவiகியலும் மதியாத அதைப் பற்றிய அக்கறையில்லாத தம்;மை அதாவது புலிகளின் தலைமைகளின் உயிரை மட்டுமே காப்பாற்ற எடுத்த ஒரு கேவலமான சுயநல முடிவாகவே இருக்கின்றது என்பது வெளிப்படையான ஒரு உண்மை. இவ்வாறான ஒரு முடிவு பிழை என நான் கூறவில்லை. ஆனால் காலம் தாழ்த்திய ஒரு முடிவு மட்டுமல்ல சுயநலம் சார்ந்ததுமாகும். ஏனனில் அப்பொழுதுதான் அவர்களுக்கு தாம் இனி தப்பப் போவதில்லை என்பதை உணர்ந்ததுடன் தம் உயிரின் முக்கியத்துவமும் அதைப் பாதுகாக்கவேண்டிய தேவையையும் உணர்ந்தார்கள். ஆனால் அதுவரை பிற மனிதப் போராளிகள் தம்மைத்தாமே தற்கொலை செய்தும் சண்டையிட்டும் தம்மைப் பாதுகாக்கப் போராடி இற்ந்தபோது அவர்கைள மாவீரர்களாக போற்றிய தலைவர்களுக்கு அவர்களது உயிர் பெரிதாக தெரிவில்லை. மேலும் பல போராளிகளை சிறையிலிருந்தபோது கூட தற்கொலை செய்யத் துண்டினார்கள். அப்பொழுதெல்லாம் சரணடைதல் பற்றி சிந்திக்கவில்லை. சமாதானம் பேசவில்லை. ஏனனில் இறந்தது நானல்லவே...யாரோ ஒருவர். வேறு மனிதர். மேலும் பொது மனிதர்கள் இறப்பதைப் பற்றிக் கூட புலிகளின் தலைமைக்கு எப்பொழுதும் கவலை இருக்கவில்லை. குழந்தைகள் படும் வேதனை பற்றிய உணரவில்i;ல. ஏனனில் தம்மை அவர்களில் ஒருவராக உணரவில்லை. நாம் நமது தேசம் என உணர்ந்தது, “வாழும் மனிதர்களையல்ல” மாறாக அந்த மனிதர்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்னை சுற்றியிருந்த நீர் வளத்தையுமே. இல்லையெனில் உண்மையிலையே இந்த பொது மனிதர்கள்மீது அக்கறை இருந்திருக்குமாயின் கிளிநொச்சி பிடிபட்டபோதே தொடர்ந்தும் சண்டைபிடிக்காது போராளிகளையும் பொது மனிதர்களையும் அவர்களது உயிர்களையும் காப்பாற்றுவதற்கான முடிவை எடுத்திருப்பார்கள்.

புலிகளின் தலைமை இறுதிக்கணங்களான அந்த நேரம் சரணடைய எடுத்த முடிவு என்பது இராணுவ ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் எந்த வலுவுமில்லாததாக இருந்தது. யாரோ கூறியதுபோல் எல்லோரையும் கிண்டல் செய்யும் “ஒரு பகிடி”யான முடிவே அது என்றால் மிகையல்ல. இதன் அர்த்தம் அப்பொழுது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை இலங்கை ;அரசாங்கத்தின்; அனுசரணையுடன் அவர்களது இராணுவம் கொன்றதை நியாயப்படுத்துவதுமல்ல. அவர்கள் அவ்வாறு தமது உயிரைக் காப்பாற்ற எடுத்த முடிவை தவறு என கூறுவதுமல்ல. ஆனால் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியது. ஓன்று சரணடைதல் தொடர்பான முடிவு எடுக்கப்ட்ட நேரமும் அதற்கான சுழலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலை வலுவிலக்கச் செய்துள்ளதே இங்கு கவனத்திற்கு உரிய விடயமாகும். இரண்டாவது விடயமாக கவனிக்கப்படவேண்டியது. புலிகளின் தலைமைகள் தமது உயிர் பாதுகாப்பாக இருக்கும் வரை பல்லாயிரக்கனக்கான பொது மனிதர்கள் இளம் போராளிகள் தற்கொலை படையணிகள் இறப்பதை வியாபாரம் செய்து கொண்டாடிய போதும் மற்றும் துரோகி என பட்டமிழைக்கப்பட்ட வேறு அரசியல் கருத்துக்கள் கொண்ட மனிதர்கள் என்பவர்களையும் தாம் கொன்று தெருதெருவாக விசியபோதும் மனித உயிர் பற்றிய கரிசனை இல்லாமல் இருந்தது மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உரிய ஒரு விடயமாகும். திலிபன் குமரப்பா புலேந்திரன் உடன் இறந்த மற்ற ஒன்பது போராளிகளினதும் உயிர்களை மட்டுமல்ல இன்னும் பல்லாயிரக்கனக்கான போராளிகளினதும் பொது மனிதர்களினதும் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களது விடுதலைக்காக பல வழிகளில் புதிய ஆரோக்கியமான முறைகளில் போராடியிருக்கலாம். ஆனால் இறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப் பணிக்க அல்லது அவ்வாறு செய்யப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஏனனில் தலைமையின் உயிர் மட்டும் பாதுகாப்பாக இருந்நது. ஆந்த உயிர் இறக்கவில்லை. இறந்தது எல்லாம் யாரோ ஒருவரின் உயிர். எனது கேள்வி சந்ததேகம் என்னவெனில் பல போராளிகளது தேவையில்லா மரணங்களை பல சந்தர்ப்பங்களில் தவிர்த்திருக்கலாம் என்பதே. என்னைப்பொறுத்தவரை எல்லாவற்றையும் விட மனித உயிரே உயர்ந்தது. ஆனால் தமிழ் இயக்கங்கள் குறிப்பாக புலிகளின் தலைமை வழிநாடாத்திய அரசியலோ உயிர்களை மிகக் கேவலமாக அற்பமாக மதிக்கும் அரசியல் என்றால் மிகையல்ல. ஆகவே இறுதி நேரத்தில் தமது உயிரைப் காப்பதற்காக மட்டும் சரணடையும் முடிவை எடுத்தது அவர்களது பார்வையில் “துரோகச் செயல்” தான். ஆனாhல் இது துரோகமா இல்லை என யார் தீர்மானிக்கப்போகின்றார்கள். இவ்வாறு கட்டாயமாகத் தீர்மானிக்கவேண்டும் என்பதல்ல இக் கட்டுரையின் நோக்கம். நமது போராட்டத்தின் அதைத் முன்னெடுத்த தலைமையின் பண்பை புரிந்துகொள்வதே முக்கியமானது. துரதிர்ஸ்வசமாக நமது போராட்டமும் போராடிய இயக்கங்களும் அடக்கப்பட்ட மனிதர்களுக்காகப் போரடவில்லை. அவர்களின் பெயரால் தமது அதிகாரத்திற்காகவே போராடினார்கள் என்றால் மிகையல்ல.


இவ்வாறு புலிகளின் தலைமை தொடர்பான அவர்களது சிந்தனைகள் செய்ற்பாடுகள் தொடர்பான ஆரோக்கியமான ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தோமேயானால் நாம் நிறையவே கற்ற முடியும். மாறாக நமது தேசிய தலைவரின் பாதையில் தொடர்ந்தும் செய்ற்படுவதாக கூறும் புலம் பெயர் புலிகளின் அமைப்புகளான நாடு கடந்த அரசாங்கமும் மற்றும் ஒவ்வாரு நாட்டிற்கான புலம் பெயர் புலிகளின் போலி ஜனநாயக சபைகளும் இவற்றுக்கான பதில்களை முன்வைக்கவேண்டும். கடந்தகால தவறுகள் மற்றும் பொது மனிதர்களின் சந்தேகங்கள் கேள்விகள் ஒவ்வொன்று தொடர்பாகவும தமது நிலைப்பாடுகளை பதில்களை முன்வைக்கவேண்டும். இவர்கள் இவ்வாறு செய்யாது விட்டுவிட்டு தொடர்;ந்தும் செயற்படுவார்களாயின் தமிழ் பேசும் மனிதர்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் பயன்படுத்தும் செயற்பாடே இவர்களுடையதாகும். இந்த அமைப்புகளிலிருந்தும் அதன் சார்பாகவும் பொது மனிதர்களிடம் பங்களிப்புக்காக குறிப்பாக பணத்திற்காக அணுகும் நபர்களிடம் பொது மனிதர்கள் தமது கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கவேண்டியது கட்டாயமாகும். மேற்குறிப்பிட்ட சந்தேகங்கள் கேள்விகள்; போன்றவற்றை இந்த இயக்கங்களுக்குப் பங்களிப்பு செய்த மனிதர்களாவது அறியமுடியாமலிருப்பதற்கு;, தமிழ் பேசும் மனிதர்களது அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகளின் கட்சிகளின் அரசியலில் வெளிப்படையற்றதன்மையும் பொது மனிதர்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாட்டு உணர்வும் இல்லாமை முக்கியமான காரணங்கள் எனக் கூறலாம். இதானால் இத ;தலைமைகள் கூறுவது அனைத்தும் இறுதியானதும் வேதவாக்குமானது. பொது மனிதர்களும் இவற்றை வேதவாக்காக மதித்தார்களே ஒழிய அவற்றை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. விமர்சிக்கவுமில்லை. விளக்கம் கேட்கவுமில்லை. அதற்கான சந்தர்ப்பத்தையோ சுழலையோ புலிகளின் தலைமையோ பிற இயக்க அல்லது கட்சிகளின் தலைமைகளோ உருவாக்கவுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்ட அரசியல் காவு கொடுக்கப்பட்டதற்கு இவ்வாறான பண்புகளும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல..

நம் உயிர் அது கொண்ட உடல் இந்த பிரபஞ்சத்;தில் சுதந்தரமாகவும் சகல உரிமைகளுடன் ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் வாழ்வதற்கான போராட்டமே நமது அடிப்படை அரசியல் செயற்பாடுகளுக்கான காரணம் என்றால் மிகையல்ல். ஆகவே நமது உடலை பாதுகாக்கவேண்டியதே முதன்மையான நோக்கமாக இருந்திருக்கவேண்டும். மனிதர்கள் நடாத்தும ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொருவரும் விடுதலையடைந்து சுதந்திரமாக ஆனந்தமாக சம உரிமைகளுடன் வாழ்வதுதான். ஆகவே போராட்டம் என்பதே வாழ்வுடன் இணைந்ததுதான். மாறாக வாழ்வை செயற்கையாக கொலை செய்து இறப்பதன் மூலம் தொலைப்பதல்ல. இதனால் எந்தப் பயனும் யாருக்குமில்லை. ஆகவே சமாதான அரசியல் பேசலாம்.; சமாதான அரசியல் என்பது தமிழ் பேசும் மனிதர்களது அரசியலையே சரணடையச் செய்யுவிடும்; சரணாகதி அரசியல் அல்ல. ஆனால் இன்று பலராலும் பேசப்படுகின்ற சமாதான சக வாழ்வு அரசியல் என்பது தான் சரணாகதி அரசியலே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் இது காலவரை அவற்றுக்காக இழக்கப்பட்ட உயிர்களையும் இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அடகுவைத்துவிட்டு அவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். சிலநேரங்களில் இந்த அரசாங்களின் செயற்பாடுகளுக்குப் பயந்து பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றளவில் தான் இன்றைய தமிழ் பேசும் அரசியல் வாதிகள் இருக்கின்றனர். இதற்குமாறாக நமது உரிமைகள் அரசியல் அபிலாசைகளையும் அடிப்படை மனித கௌரவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டே சமாதான அரசியல் பேச வேண்டும். இவற்றை விட்டுக் கொடுத்து பேசப்படும் சமாதான அரசியல் என்பது “பூச்சியத் தீர்வே”. ஆனால் இவ்வாறான அரசியல் பேசுவதற்கு ஆகக் குறைந்தது தமிழ் தேசிய போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்குள் உறுதியான ஒற்றுமை அவசியமாகும். ஆகவே சில வேண்டுகோளை முன்மொழிவுகளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
முதலாவது இன்றுள்ள ஒவ்வொரு தமிழ் கட்சிகளதும் இயக்கங்களதும் கடந்தகால தலைமைகள் தவறு இழைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரது கைகளிலும் இரத்தக் கறைகள் உள்ளன. ஆகவே இவர்கள் அனைவரும் தங்கள் கட்சியையும் இயக்கங்களையும் கலைப்பதே அரோக்கியமானதும் பயனள்ளதுமாகும். இவ்வாறு கலைத்துவிட்டு ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நின்று செயற்படுவோமானால் நிச்சயம் வெற்றி கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை இலங்கை இந்தியா சிறிலங்கா வடக்கு கிழக்கு பிரதேசம் மற்றும் சர்வதேச அடிப்படையில் உருவாக்குவது சிறந்தது.

புலம் பெயர் தேசங்களில் தமிழ ;தேசிய அரசியலைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அரசியலில் ஈடுபடுகின்றனவர்களை ஒருங்கினைத்து ஒரு அரசியல் கட்சி சார்பாக பிரதிநித்துவப்படுத்துவது பலம் மிக்கதும் பயனள்ளதுமாகும். அல்லது இவ்வாறான அரசியல் கட்சி சார்ந்து பிரதிநிதிகளை தேர்தல்களில் நிறுத்துவதன் மூலம் சர்வதேச ரீதியாக நமது அரசியல் கோரிக்கைகளை ஐனநாயக ரீதியில் பலமாக முன்வைக்கலாம்.

சுpறிலங்காவில் சிங்களம் பேசுகின்ற மனிதர்களுடன் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களின் சகல உரிமைகளையும் குறிப்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்கின்ற முற்போக்காளர்களுடன் கூட்டுறவு அடிப்படையில் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும் தேசிய விடுதலை போராட்டம் வெல்வதற்கான சாத்தியத்தை கொடுக்கும். சிங்களம் தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஆழமான புரிந்துணர்வும் உறுதியான ஒன்றினைந்த செய்ற்பாடும் ஏற்படவில்லை எனின் வெற்றி என்பது கஸ்டமானதே.

நம்பிக்கையுடன்
நட்புடன்
மீராபாரதி