Monday, January 24, 2011

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு. - கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு.

- கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

சிரிப்பு மனிதரின் இயற்கையான இசை.

மனம் விட்டு சிரி

யார் எங்கே தொலைத்தார்; தம் சிரிப்பை…?

யார் களவெடுத்தார் மனதரின் சிரிப்பை….?

யார் அடக்கினார் வரலாற்றில் மனிதரின் சிரிப்பை…?

சிரிப்பின் ஆரம்பம் மனிதக் குரங்குகளிலும் இருந்துள்ளது. இவை ஆறுதலாக இருக்கும் பொழுது சிரிக்கின்றன. குழந்தைகள் பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலையே சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதற்கு குழந்தைகளுடன் விளையாடுவதும் அவர்களுக்கு கிளிகிளுப்புட்டுவதும் மற்றும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்களும் காரணமாக இருக்கின்றன. ஆரம்ப கால மனிதர்கள், விளையாட்டாக நடைபெறும் சண்டை பிடிக்கின்ற சமூக நிகழ்வுகளில் பொதுவாக “ஆஹா…அஹா…அஹா…” என சிரிப்பதுண்டு என்கின்றனர். Dacher Keltner & George A. Bonanno என்பவர்கள் தங்களது சிரிப்பு தொடர்பான ஆய்வின் மூலம் பல விடயங்களைக் கூறுகின்றனர். இவ்வாறு மனிதர்கள் சிரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல. தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. தமது மேலாதிக்க தன்மையை வெளிப்படுத்துவதற்கு மனிதர்கள் சிரிப்பதாக டார்வின கூறுகின்றார். சிக்மன் பிரைடடோ> மனிதர்கள் தமது பதட்டமான உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்காக சிரிக்கின்றனர் என கூறுகின்றார். மனிதர்களது சிரிப்பு “ஹி…ஹி…ஹி…” என ஆரம்பித்து “ஹா…ஹா…ஹா” எனவும்> பின் “ஹோ…ஹோ…ஹோ” எனவும் தொடர்கின்றது. இதன்போது வாய் அகலமாக திறபட> முகத் தசைகள் தளர> இதயத் துடிப்பும் மூச்சும் அதிகரிக்க மனிதர்களது உடல் உள மன பகுதிகள் ஆறுதலடைகின்றன. மூளையின் சில பகுதிகளில் இதன்போது இயங்கி பல்வேறு விதமான றோமோன்களை வழங்குகின்றது. நேர்மறை உணர்வுகள் உணர்ச்சிகள் உருவாகின்றன. மனிதர்கள் ஆரோக்கியமான பார்வைகளையும் உறவுகளையும் கொண்டு ஆனந்தமாக வாழந்தனர். இன்றும் இவ்வாறு வாழலாம். ஆனால் மனிதர்களின் சிரிப்புக்கு என்ன நடந்தது?

மனித சிரிப்புக்கு வரலாற்றில் என்ன நடந்தது என்பதை அறிவதே ஒரு புதிய கட்டுரையைத் தரும். சுருக்கமாக பார்க்கும் பொழுது குறிப்பாக ஐரோப்பிய மையவாத சிந்தனைகளாலும் அது பரப்பிய மனித நாகரிகங்களாலும் மனதர்களது சிரிப்பு அடக்கப்பட்டு விட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே பொது இடங்களில் வாய்விட்டுச் சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இவர்கள் பலவகைகளிலும் சமூகத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார பலம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ஆண்களாக இருப்பார்கள். அதிகாரமில்லாத அல்லது அடக்கப்படும் ஆண்கள் மறைவாகவோ அல்லது தமது வீடுகளுக்குள் மட்டுமே சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இதற்குமாறாக அதிகாரத்தில் உள்ளவர்களின் முன் வாய் திறந்து சிரிப்பதானது அதிகாரத்தில்; உள்ளவர்கள் கேலி செய்வதாக அர்த்தப்படுத்தப்பட்டு சிரிப்பவர் தண்டைனைக்கும் உள்ளாகியுள்ளனர்;. மறுபுறம் பெண்ணிய பார்வையில்> பெண்கள் வீட்டிற்குள் கூட சிரிக்க முடியாத நிலையே இன்றும் பல சமூகங்களில் காணக்கிடைக்கின்றது என்பதைக் அறியலாம். இதனால்தான் தமிழ் சமூகங்களில் பொது இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் பெண்களை சமூகம் மதிக்காததுடன் அவர்களை கீழானவர்களாகவே கணிக்கின்றது. பொது இடங்களில் மேலும் புல சமூகங்களில் சிரிப்பவர்கள் பைத்தியக்காரர்களாகவும் கண்ட இடங்களில் சிரிப்பது அநாகரிகமாகவும் கணிக்கப்பட்டு சமூகங்களிலிருந்தும் பொது நிகழ்வுகளிலிருந்தும் ஓதுக்கி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக குடும்பங்களில் பாடசாலைகளில் மத நிறுவனங்களில் குழந்தைகள்; தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வாறு மனித வாழ்க்கை மட்டுமல்ல அவர்களிடம் இருந்து பிறந்த இயற்கையான இசையான சிரிப்புக்கு கூட வரலாற்றில் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அதிகார வர்க்கங்களால் படாதபாடு படுத்தப்பட்டுள்ளது. அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தனிக் கட்டுரையாக விரிவாக எழுதுகின்றேன். இக் கட்டுரையின் நோக்கம் சிரிப்பினால் ஏற்படுகின்ற உடல் உள மன மற்றும் ஆன்மாவிற்கான நன்மைகள் என்ன என்பதை அறிவதே.

சில சமூகங்களில் குறிப்பாக அமெரிக்க அலஸகாவின் வாழ்கின்ற பூர்வீக அல்லது செவ்விந்திய மனிதர்களின் சமூகங்களில் சிரிப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல பல நோய்களைக் குணமாக்குகின்றன மருந்து என்பது; அறிவதற்கு ஆச்சரியமான ஒன்று. இச் சமூகங்களில் சிரிப்பு என்பது யோக பயிற்சி செய்வதுபோல் அனைவருக்கும் குழந்தைகளிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஏனனில் சிரிப்பானது தமது உடல் உள்ளம் மனம் என்பவற்றை சுத்தம் செய்கின்றனர் எனக் கூறுகின்றனர் (Cueva, Melany , etl., 2006). இந்த விபரங்களை சிரிப்பு தொடர்பாக Albert Nerenberg உருவாக்கிய Laughology என்ற விவரண திரைப்படத்திலும்; காணலாம். தமிழில் மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும் என்று கூறப்படுவது நாம் அறிந்ததே. இதனால்தான் சிரிப்பை புற்றுநோய் மற்றும் உடல் நோ அதிகம் உள்ள நோயாளர்களுக்கும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தி அவர்களது நோவைக் குறைக்கப் பயன்படுத்துகின்றனர். மேலம் சிரிப்பானது சிரி;ப்பவருக்கும் மட்டுமல்ல அருகிலிருப்பவரையும் குணப்படுத்துகின்றது என்கின்றனர்.

மனிதருக்கு கிடைத்த இந்த இயற்கையான சிரிப்பின் மூலம் ஒருவரது உடல் உள மற்றும் ஆன்மாவிலுள்ள பல்வேறு நோய்களை உதாரணமாக மன அழுத்தம்> உடல் நோ> மனப்பாதிப்பு> எனப் பலவற்றைக் குணப்படுத்தலாம் என்க் கூறுவது ஓசோ மட்டுமல்ல மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் (Ruth Davidhizar and Margaret Bowen (1992). மறுபுறம் செயற்கையான சிரிப்பினால் பயனில்லை என மேற்குலகின் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டாலும் பலர் செயற்கையான சிரிப்புக் கூட இறுதியில் உண்மையான சிரிப்பாக மாறுவதற்கான ஆற்றலுடையது என்பது மட்டுமல்ல அருகில் உள்ளவர்களுக்கும் வைரஸைப் போல தொற்றி விரைவாகப் பரவக் கூடியது என்கின்றனர். இப்படி சில முரண்பாடுகள் இருந்தபோதும் அனைத்து ஆய்வாளர்களும் ஒன்றுபடும் புள்ளி சிரிப்பு மனித வளர்ச்சிக்கும் உடல் உள மன மற்றும் ஆன்ம நலத்திற்க்கும் பயனுள்ளது என்பதாகும். இதற்கான காரணம் சிரிப்பு மனித உடலில் சில ஹோமன்களை சுரப்பதற்கு உதவி செய்கின்றது. குறிப்பிட்ட ஹோமோன்கள் மனிதர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது குறைவாக காணப்படுகின்றது. ஆகவே மனிதர்கள் சிரிக்கும் பொழுது இந்த ஹோமோன்கள் சுரந்து மன அழுத்தத்தை குறைப்பது உதவிபுரிக்கின்றன.

இது மட்டுமல்ல மனிதர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியாக சிரிப்பார்களேயானால் அவர்களது உடலுக்கு அதிக சக்தியை அளித்து துடிப்பாகவும் இயங்கச் செய்கின்றது. மேலும் இது உடலில் குறிப்பாக முகத்தில் உள்ள இறுக்கமான தசைகளை இலகுபடுத்துவதன் மூலம் இயங்கச் செய்து மனிதர்களுக்கு அமைதியையும் உடலுக்குhன ஆறுதலையும் வழங்குகின்றது என்கின்றனர். (Davidhizar & Bowen, 1992, Martin, 2001). இன்னும் ஒரு படி மேல் சென்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் சிரிக்கின்ற சிரிக்காத மனிதர்களுக்கு இடையிலான ஒப்பிட்டு ஆய்வின் அடிப்படையில்; சிரிக்கின்ற மனிதர்களுக்கு மன அழுத்தம் மனச் சோர்வு என்பன வராமலே சிரிப்பானது தடுக்கின்றது என்கின்றனர். (Kuiper, and Martin, 1998). இதேபோல் சிரிப்பு புற்றுநோய் செல்களும்; அதன் வைரஸ{களும் பரவாமல் தடுக்கின்றதும் அவற்றைக்; கொல்கின்ற செல்களின் உருவாக்கத்தை சிரிப்பதன் மூலம் அதிகரிக்கச் செய்கின்றது. இதற்கு நோர்மன் கசின்ஸ் (Norman Cousins) என்பவரது அனுபவமும் அவரது புத்தகமும் ஆதாரமாக இருக்கின்றது. இவர் எழும்பி தன்னால் ஒன்றுமே செய்ய முடியாத வகையிலான ஒரு நோய்க்கு உள்ளாகியிருந்தார். இவரது செயற்பாடு எல்லாமே தள்ளு வண்டி மூலமே நடைபெற்றது. இவ்வாறு இருக்கின்ற ஒரு நிலையில் தான் சிரிக்கும் பொழுது தனது உடல் நோ குறைவதையும் ஆழமான நித்திதை கொள்வதையும் அவதானித்திருக்கின்றார். இறுதியாக சிரிப்பை ஒரு மருந்தாகப் பயன்படுத்தி எழும்பி சுயமாக நடக்கும் அளவிற்கு குணமானார். இவர் குணமானதற்கான காரணங்கள் தொடர்பாக பல வாதப்பிரதி வாதங்கள் இருந்தபோதும் மேற்குலகின் வைத்திய உலகிற்கு சிரிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்த இவரும் இவரது நூலும் காரணமாயின. இவரது கூற்றின் படி பத்து நிமிட வயிறு குலுங்கி சிரிக்கும் சிரிப்பானது உடல் நோவைக் குறைப்பது மட்டுமல்ல இரண்டு மணித்தியால ஆழமான நித்திரையையும் தருகின்றது என்கின்றார். மேலும் சிரிப்பானது மனிதர்களது கோவத்தையும் மனப் பயத்தையும் குறைக்கின்றதும் என்கின்றனர்.

முதலில் சிரிப்பானது உளவியல் அடிப்படையில் ஒரு மாற்றத்தை மனிதரில் ஏற்படுத்துகின்றது. அதாவது எதிர்மறைத் தன்மையிலிருந்து நேர்மறைத் தன்மைக்கு மனிதரது உணர்ச்சிகளை மாற்றிவிடுகின்றது. அல்லது அதிகாரத்துவ தன்மையிலிருந்து புரிந்துணர்வு தன்மைக்கு மாற்றிவிடுகின்றது. இதனால் மனிதர்களிடம் இருந்த மன சோர்வு மன அழுத்தம் குறைந்து ஒரு விதமான சுய பிரக்ஞை நிலைக்கு வருகின்றனர். இது நேர்மைற உணர்வுகளை மனிதரில் உருவாக்கின்றது. இவ்வாறான ஒரு உறவு சிரிப்புக்கும் மனித உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் மற்றும் மனித உள நிலைமைக்கும் இருக்கின்றன. அதிகமாக சிரிக்கின்ற மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட நேர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் சிரிக்காத மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட எதிர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் நடைபெற்றுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பானது ஒரு குழுவிற்கு மேலும் ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றது. இதனால் இருவர் தமக்கிடையிலான முரண்பாடுகளையும் ஆரோக்கியமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் தீர்ப்பதற்கு சிரிப்பு வழிசெய்கின்றது. ஆகவே குறிப்பாக காதலர்களுக்கிடையல் திருப்திகரமான உறவை சிரிப்பு ஏற்படுத்துகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களுக்கு அவர்களது உறவுகளின் இறப்பினால் ஏற்படும் துக்கத்தையும் அதனால் ஏற்படும் மனச் சோர்வு மன அழுத்தம் என்பவற்றையும் அவர்களது வாழ்வையும் நேர்மறைத் தன்மையானதாக சிரிப்பு மாற்றியுள்ளது என இது தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பின் முக்கியத்துவத்தை முதலில் ஆழமாக நான் அறிந்தது ஓசோவின் மூலம். இவர் சிரிப்பை மூன்று பகுதிகளாக அடிப்படையில் பிரிக்கின்றார். முதலாவது பிறரைப் பார்த்து சிரிப்பது. அதாவது அவர்களது தவறுகள் குறைகள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களை கிண்டல் அல்லது நையாண்டி செய்து சிரிப்பது. இந்த சிரிப்பை அவர் மதிப்பதுமில்லை உற்சாகப்படுத்துவதுமில்லை. இச் சிரிப்பை அவர் கீழ் நிலையிலையே வைத்தள்ளார். தமிழ் படங்களில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் வருகின்ற பெரும்பான்மையான வணீக ரீதியான திரைப்படங்களில் வருகின்ற சிரிப்புப் பகுதிகள் இந்த வகைகுள் அடங்கும். இதற்கு எதிர்மறைத் தன்மை இருந்தபோதும், மனிதர்களுக்கு சிரிப்பை உருவாக்கின்றமையினால் அதிலும் நேர் மறைத் தன்மையையும் பெருகின்றது. இரண்டாவது வகை இடைநிலையானது. அதாவது நமது தவறுகள் குறைகள் கோமாளித்தனங்களை நாமே பார்த்து சிரிப்பது. இது ஒரளவு பாரவாயில்லை எனக் கூறுவார். இவ்வாறு சிரிப்பது, குறித்த ஒரு பிரச்சனையை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு உதவும் என்கின்றார் ஐரோப்பாவைச் சேர்ந்த வைத்திய ஆய்வாளர் (Sutorius, D., 1995).

மூன்றாவது சிரிப்பு முக்கியமானதும் உயர்ந்ததுமாகும். இது சிரிப்பதற்கா மட்டும் சிரிப்பது. சிரிப்பதன் நோக்கமே சிரிப்பதுதான். சிரிப்பதன் நன்மைக்காகவே சிரிப்பது. சிரிக்கின்றோம் என்பதற்காகவே சிரிப்பது. இதில் நம்மை மட்டுமல்ல பிறரையும் அவமதிப்பதோ நையாண்டி செய்வதோ இல்லை. இவ்வாறான சிரிப்பு பயிற்சியில்; கவரப்பட்டு அவரால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்டிக் ரோஸ் (mystic rose) எனப்படும் சிரிக்கும் தியான பயிற்சியில் இந்தியாவிற்கு சென்று பங்குபற்றினேன். இப் பயிற்சி 21 நாட்கள் நடைபெறும். முதல் ஏழு நாட்களும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மூன்று மணித்தியாலங்கள் மிகவும் ஆழமான சிரிப்பு பயிற்சி. அதாவது வயிற்றைக ;குலுக்கி குலுக்கி சிரிக்க வேண்டும். சிரிப்பு ஆழமாக செல்ல அழுகை வரும். வந்தாலும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மற்ற நேரங்களிலும் சிரிப்பதுதான் நமது வேலை. சாப்பிடும் பொழுதும் சும்மாக இருக்கும் பொழுதும் சிரிப்பது ஒன்றே நமது செயற்பாடு. இரண்டாவது ஏழு நாட்களும் ஆழுவது மட்டுமே வேலை. இப்பொழுது சிரிப்பு வந்தாலும் அழுவதை மட்டுமே செய்ய வேண்டும். அழுவது மட்டுமே நமது ஓரே செயற்பாடாக இருக்கும். மூன்றாவது ஏழு நாட்களும் அமைதியாக கண்முடி உள்ளே நடப்பதை கவனிப்பது. தியானிப்பது. இது நம்மை மீண்டும் சுதந்திரமான மனிதராக்கும் என்பது அவரது அனுபவம். மற்றும் புரிதல்.

இவ்வாறு மூன்று பகுதிகளாக இப் பயிற்சிசை செய்வதற்கு இவர் கூறுகின்ற காரணம் முக்கியமானது. அதாவது நாம் வாழுகின்ற சமூகத்தின் பிற்போக்கான சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து நாம் அடக்கியவை எல்;;லாம் நமக்குள் ஒவ்வொரு தளங்களில் இருக்கின்றன என்கின்றார். சிரிப்பது முதல் தளத்திலையே தனது வேலையை செய்தபோதும் நம் உடல் மற்றும் உள்ளத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது என்கின்றார்.. அழுகை நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்கின்றார். இதன் போது நாம் நீண்ட காலமாக அடக்கிய பல உணர்வுகள் உணர்ச்சிகள் வெளிவருவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்கின்றார்.

சமூக கட்டுபாடுகள் அடக்குமறைகளை பிரக்ஞையாக உணர்ந்து புரிந்தபோதும் அவற்றை மீறவோ அதிலிருந்து விடுதலை பெறவோ முழுமையாக முடியவில்லை. ஏனனில் அந்தளவிற்கு இந்த சமூக அடக்குமுறைகள் ஆழமாக நமக்குள் வேருண்றி இருக்கின்றன. அதாவது சமூகம் நம் மீது திணித்த இயற்கைக்கு அப்பாற்பட்ட யதார்த்தமற்ற நாகரிக வாழ்வுக்குள் நாம் சிக்குண்டு போய்யுள்ளோம்.

இறுதியாக தங்களுக்கான புத்தாண்டு பரிசு. நாங்கள் மறந்துபோன எங்களது சிரிப்பே. எப்படி நம் சிரிப்பை கண்டுபிடிப்பது. இது தான் அதன் இரகசியம். முதலில் வாயை அகலத் திறவுங்கள். இப்பொழுது பின்வருகின்ற சொல்லை சத்தமாக உச்சரியுங்கள். “ஹி…ஹி…ஹி” …. “ஹா…ஹா…ஹா” … “ஹோ…ஹோ…ஹோ” இப்பொழுது நீங்கள் வாய் விட்டு சிரிக்கின்றீர்கள். இவ்வாறு சிரிக்கும் பொழுது உங்கள் வயிற்றைக் குலுக்குவதுடன் உடலையும பலவாறு அசையுங்கள். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சிரித்த பின்பு கண்களை மூடி மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமைதியாக இருப்பது உண்ட உணவை சமிக்க வைப்பதைப்போன்றது. இந்த நிலையின் போது நம்முள்ளே என்ன நடைபெற்றாலும் அதை எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாது கவனிப்பது மட்டும் செய்யவேண்டிய செயற்பாடு. இதை சிரிக்கும் தியானம் அல்லது சிரிக்கும் புத்தர் தியானம் எனவும் அழைக்கலாம். ஓவ்வொருவரும் இவ்வாறு செய்து புத்தாண்டை சிரிப்புடன் சிறப்புடன் வரவேற்போம்.

சிரிப்பு இயற்கையின் இசை. மனிதர்களோ அதை இசைக்கும் வாத்தியம். இந்த இசை மனிதர்களுக்கு இயற்கை தந்த பரிசு. இந்தப் பரிசை சரியாக நாம் பயன்படுத்தினால் அருகிலிருக்கின்ற சிரிக்காத மனிதரையும் சிரிக்க வைக்கலாம். இது ஒரு சிரிப்பு வைரஸாக பரவும். நம் வாழும் இடங்களிலிருந்தே இந்த சிரிப்பு வைரஸை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்புவோம். குறிப்பாக இது தமிழ் கட்டுரையாக இருப்பதால் உலகில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கும் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு மருந்தாக இது பயன்படட்டும்.

நம் மீது சுமத்தப்பட்ட செயற்கையான நாகரிகங்களுக்காகவும் மற்றும்; யாருக்காகவும் பயந்து நமது சிரிக்கின்ற உரிமையை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. இந்த புத்தாண்டு என்பதும் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட ஒரு விடயமே. உண்மையிலையே ஒவ்வொரு நாளும் புது நாளே. ஆனாலும் ஒவ்வொரு புத்தாண்டையும் நேர்மறையாக பயன்படுத்துவோம். ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் வாய்விட்டுச் சிரிப்போம். நம் நோய் விட்டுப் போகும் மட்டுமல்ல. அனைவருக்கும் ஆனந்தம் பிறக்கும் மட்டும். சிரிப்போம்! வாய் விட்டுச் சிரிப்போம்.

சிரிப்பதற்கு கஸ்டமா. ஆப்படி எனின் அழையுங்கள். உங்களுக்கு அல்லது உங்கள் குழுவிற்கு சிரிப்பை வரவழைப்பதற்கு.

மீராபாரதி

31.12.2010

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Kuiper, N. A. and Martin, R. A. (1998). Laughter and Stress in Daily Life: Relation to

Positive and Negative Affect. Motivation and Emotion, 22(2), 1998.

Martin, R.A., (2001). Humor, Laughter, and Physical Health: Methodological Issues and

Research Findings. Psychological Bulletin, 127(4), 504-519

Sutorius, D., (1995). The transforming force of laughter, with the focus on the laughing

meditation. Patient Education and Counseling, 26, 367 – 371.

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702

Cueva, Melany , Kuhnley, Regina , Lanier, Anne and Dignan, Mark(2006) ‘Healing Hearts: Laughter

and Learning’, Journal of Cancer Education, 21: 2, 104 — 107

Norman Cousins (1976) . “Anatomy of an Illness” . New England Journal of Medicine,

Albert Nerenberg, Laughology, http://www.albertnerenberg.com/AlbertNerenberg/Albert_Nerenberg.html

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

ஓசோவின் – சிரிக்கும் புத்தர் தியானம்

சிரிக்கும் புத்தர் தியானம்
ஓசோ அறிமுகப்படுத்திய
விசேடமான தியான முறைகளில் ஒன்று.
அவரது பார்வையில்….
இந்த உலகை உணர்ச்சிமிக்கதாகவும்
விளையாட்டு நிறைந்ததாகவும் உருவாக்குவதே
நம் விருப்பம்.
சிரிப்புத்தான் ஆன்மிகத்தின் அடிப்படைத் தன்மை என்பதை
இந்த உலகுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
ஏங்களால் சிரிக்க முடியவில்லை எனில்
எங்களது வாழ்வில் அநேக விடயங்களை
நாம் இழந்துவிடுவோம்.
சிரிப்பு எங்களை கள்ளம் கபடம் அற்ற
குழந்தையாக்குகின்றது.
ஏங்களது சிரிப்பு
இந்த இயற்கையுடன் இணைந்துவிடுகின்றது.
ஆர்ப்பரிக்கும் கடலோடும் நட்ச்சத்திரங்களோடும்
அவைகளின் அமைதியோடும் இணைந்துவிடுகின்றது.
நாங்கள் சிரிப்பதன்
மூலம் இந்த உலகின் அறிவுள்ள
ஒரு பகுதியை தனியாக அமைக்கின்றோம்.
ஏனென்றால் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிரிக்கமுடியும்.
ஆதனால் தான் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை.
அவைகளுக்கு அதிக அறிவு கிடையாது.
“எதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக் கொள்ளNவுண்டும்.
வுpளையாட்டாக (playfulness )எடுத்துக்கொள்ளக் கூடாது”
என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
ஏதையும் பெரிய விடயமாக (serious) எடுத்துக்கொள்வதால்
சமூகத்தில் மரியாதை கிடைக்கின்றது.
மரியாதைக்காக நாம் எதையும்
விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
ஏல்லாவற்றையும் பெரியவிடயமாக எடுப்பது
நம்மை நோயாளியாக்கிவிடும் என்பதை
கற்பிப்பவர்கள் மறந்துவிடுகின்றனர்.
நம்மிடம் சிரிக்கும் உணர்வு மங்கிப்போய்விட்டது.
மரணித்துவிட்டது.
இல்லை என்றால் எங்களைச் சுற்றிலும் உள்ள
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான வி;டயங்கள் நிறையவே உள்ளன.
ஏங்களிடம் சிரிக்கும் உணர்வு இருந்தால்
கவலைப்படுவதற்கு நேரம் இல்லாமல்
முழுநேரமும் சிரித்துக் கொண்டே இருக்குமளவுக்கு
பல விடயங்கள் உள்ளன என்பது தெரிந்தால்
நாம் ஆச்சரியப்படுவோம்.
ஏதாவது ஒன்று எங்கேயாவது
சிரிக்கும் படி நடந்துகொண்டே இருக்கும்.எனவே மனித வாழ்வில்
நாம் மறந்துவிட்ட சிரிப்பைக் கொண்டுவருவது தான்
நம் வேலை.
சிரிப்பை மற்ந்துவிட்டால்
நாம் பாடுவதை மறந்துவிடுவோம்
ஆடுவதை மறந்துவிடுவோம்.
அன்பை மறந்துவிடுவோம்.
சிரிப்பை மட்டும் நாம் மறக்கவில்லை
இதனுடன் சேர்ந்து வேறு பல வி;டயங்களையும் மறந்துவிட்டோம்.
சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிரிப்பது புனிதமானது.
மேலும் சிரிப்பைப் பற்றி ஓசோ கூறுகிறார்,
ஆன்மீக அனுபவங்களில்; மிகவும் முக்கியமானது சிரிப்பு,
ஒரு மனிதரால்
எதையும் அடி மனதில் அடக்கி வைக்காமல்
முழுமையாகவும் இதயபூர்வமாகவும் சிரிக்க முடியுமாயின்
அந்தக் கணத்தில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறலாம்
ஏனனில் முழுமையான சிரிப்பு
(ego) துன்முனைப்பற்றது
இது தான் உண்மையை
மேய்ஞானத்தை அறிவதற்கான ஓரே வழி;.
புpரங்க்ஞையாகவும் முழுமையாகவும் சிரியுங்கள்.
சுpரிக்கும் சந்தர்ப்பங்களை தவறவி;டாதீர்கள்.
சுpரிப்பு ஒரு வழிபாடு.

சுpரிப்பில் பலவகை உண்டு. வழமையாக மற்றவர்களின் குறைகளை, தவறுகளை,முட்டாள் தனங்களை பார்த்து எண்ணி சிரிப்Nபுhம்.
இது கீழ்த்தரமான சிரிப்பு. மற்றவர்களின் செலவில் சிரிப்பது சாதாரணமான சிரிப்பு மட்டுமல்ல அசிங்கமானதுமாகும். இது வன்முறையானதும் அத்துமீறியதுமாகும்.
இது மற்றவறை நோகப்பண்ணுவதாகும். நும் அடி மனதில் பழிவாங்கும் உணர்வை இந்த சிரிப்பு கொண்டிருக்கும்.

இரண்டாவது சிரிப்பு நம்மைப் பார்த்து நாமே சிரிப்பது. இது பெறுமதியானது.
இது பண்பானது. தன்னைப் பார்த்து சிரிக்கும் மனிதர் மதிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் முதலாவமவர்களைவிட மேலானவர்கள். இவர்கள் வன்முறை, வெறுப்பு, அத்துமீறல் என்பவற்றைக் கடந்தவர்கள்.

மூன்றாவது சிரிப்பு பிரபஞ்ச சிரிப்பு. ஒரு சம்பவத்தைப் பார்த்:து முழுமையாக சிரிப்பது. ஏதிர்கால பலன் எதனையும் எதிர்பாராது சிரிப்பது.
ஆரம்பமில்லாத ஆரம்பம் இந்த சிரிப்பு.
முழு பிரபஞ்சமுமம் எந்த ஒரு நோக்கமுமின்றி
எந்த ஒரு குறித்த புள்ளியையும் நோக்கியல்லாது
முடிவற்ற பிரதேசத்தில் பயணிப்பது.
இதைப் பார்த்து சிரிப்பது. இதிலிருந்து சிரிப்பு உருவாகும்.
இதை உருவாக்க ஆரம்பத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
இதை முடிக்கவும் இறுதியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அழகாக ஒழுங்காக பகுத்தறிNவுhடு பயணிக்கும் இந்த பிரபஞ்சம்.
இதைப் பார்ப்போமானால் சிரிப்பு தவிர்க்க முடியாதது.
இது ஆன்மிகச் சிரிப்பு.

இது மட்டுமின்றி சிரிப்பதனால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு மனதுக்கு ஆன்மாவுக்கு கிடைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
சுpறந்த உடல் இயங்கு சக்தி நடைபெறுகின்றது.
துசைகள் அமைதியடைகின்றன.
மன அழுத்தம் கோவம் குறைகின்றது.
ஊயிர் ஆற்றலும் ஆனந்தமும் அதிகரிக்கின்றது.

இயற்கையின் இசை சிரிப்பு.

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

கிழக்குலகம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமது சுய பரிசோதனை மூலம் பரிச்சித்து கண்டறிந்த முறை தியானம். இதை அவர்கள் பயன்படுத்தியது என்னவோ ஆன்மீக தேடலுக்கும் தமது சமயம் சார்ந்துமே. புத்தர் அதிலொரு புரட்சியை ஏற்படுத்தியபோதும் துரதிர்ஸ்டவசமாக மீண்டும் அது சமய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் சென்றுவிட்டது. ஆகவே தியானம் என்பது ஆன்மீக ரீதயான அதியுயர் நிலையை (ஞானமடைதல் அல்லது சமாதி நிலை) அடைவதற்கான ஒன்றாக ஒரு சமய வழிபாட்டு நெறியாகவும் குறிப்பாக வயது போனவர்களுக்கானதாகவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மறுபுறம் தியானம் என்பது மேற்குலகில் பொதுவாக வியாபரா மயப்படுத்தப்பட்டு வெறும் உடல்> மன ஆறுதலுக்காக மட்டுமே அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த இரு துருவ பயன்பாடுகளுக்கும் இடையில் தியானம் மனிதர்களுக்கு அதிகம் நன்மையளிக்கும்வகையில் பயன்படுத்தப்படக் கூடியது என்பதை அண்மைக்காலமாக தியானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விஞ்ஞான ஆய்வுகள் அறிவிக்கின்றன. குறிப்பாக தியானத்தின் பயன்பாடு சாதாரண மனிதர்களுக்கு பலவகையில் பயன்தரக்கூடியதாக உள்ளது. மனிதர்களின் பழக்கவழக்கங்களை இயந்திரமயமாக்கலிலிருந்து விடுவித்து உயிரோட்டமுள்ள ஒரு செய்பாடாக மாற்றுவதற்கும்> மனித மனத்தின் முரண்பாடுகளை> மதிப்பீடுகளை> நேர்மறை> எதிர்மறை எண்ணங்களை> அதன் குழப்ப நிலையை புரிந்துகொள்வதற்கும்> மனித உணர்ச்சிகளையும்> உணர்வுகளையும் புரிந்துகொள்வதற்கும்> மனித செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் படைப்பாற்றலுடனும் வெளிக் கொண்டுவருவதற்கும் என பல்வேறு தளங்களில் சாதாரண மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் தியானம் பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைவிட மனிதர்களிடம் காணப்படுகின்றன பல்வேறுவிதமான உடல் உள மன நோய்களை மாற்றுவதற்கும் குணப்படுத்துவதற்கும் தியானப் பயிற்சி இன்று பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இம் மனிதர்கள் தியானப்பயிற்சியைத் தொடர்வதால் அவர்களுக்கு ஏற்படுகின்றன நேர்மறை விளைவுகளை விஞ்ஞான பரிசோதனை ஆய்வுகள் நிறுபிக்கின்றன. இது தொடர்பாக பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்கள் 1994ம் ஆண்டே பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக ஆற்றிய “தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” என்ற உரையில் விரிவாக கூறியுள்ளார்.

துரதிர்ஸ்டவசமாக கீழக்குலகின் அறிவுகளை மேற்குலகின் அறிவுகள் ஏற்றுக்கொண்டு அந்த அறிவை அவர்கள் மீள கூறும்பொழுதே அதற்கான அங்கீகாரத்தை கீழக்குலக அறிஞர்களும் மனிதர்களும் வழங்குகின்றார்கள். அந்தளவிற்கு மேற்குலகின் அறிவின் மீது நம்பிக்கை மட்டுமல்ல அதன் மாயைக்குள்ளும் சிக்கியுள்ளோம். நம் அறிவை மனதை ஆக்கிரமித்திருக்கும் நவீன காலானியாதிக்கம் தொடர்பான நமது பிரக்ஞை எந்தளவு என்பது கேள்விக்குரியே. ஆனால் முரண் நகை என்னவெனில் இந்த காலனியாதிக்க அறிவின் அடிப்படையிலையே நாம் பிறந்த நாடுகளின் மீதான நவீன காலானியாதிக்கத்தை எதிர்க்கின்றோம். பெண்ணிலைவாதி ஒருவர் குறிப்பிடுவதுபோன்று அதிகாரத்த்திலுள்ளவர்களின் உபகரணங்களைக் கொண்டு அவர்களது வீட்டை உடைக்க பயன்படுத்தமுடியாது எனக் கூறுகின்றார். அதிகாரவர்க்கத்தை எதிர்ப்பவர்கள் இதை எப்பொழுது புர்pந்துகொள்கின்றோமோ அப்பொழுதுதான் அடக்கப்படுபவர்களின் விடுதலைக்கான சரியான உபகரணங்களைக் கண்டுபிடித்து செயற்படுவோம் என்பதைக் குறித்துக்கொண்டு இக் கட்டுரையின் விடயத்திற்கு செல்வோம். ஏனனில் இக் கட்டுரை மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பானதல்ல மாறாக தியானம் அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் தொடர்பாக மேலோட்டமாக ஆராய்கின்றது.

கடந்த சில பத்தாண்டுகளாக மேற்குலம் தியானம் தொடர்பான நீண்ட கால குறுகிய கால ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமது வாழ்வில் நீண்ட காலம் தியானம் செய்தவர்கள்> குறுகிய காலம் தியானம் செய்தவர்கள்> தியானம் செய்யாதவர்கள் என்பவர்களுக்கிடையே பல்வேறுவிதமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது. மேலும் பல்வேறுவகையான தியான முறைகளை பின்பற்றுவேர்களுக்கு இடையிலும் இவ்வாறான பரிசோதனைகளை செய்தும் மற்றும் ஓப்பிட்டும் தமது ஆய்வுகளை முன்னெடுகின்றனர். இதற்காக நவீன தொழிற்நூட்ப உபகரணங்களைப் (உதாரணமாக எம்ஆர்ஐ (fMRI)இ ஈசிஜி(ECG)) பயன்படுத்தியும் செய்துவருகின்றனர். தியானம் தொடர்பான இவ்வ்hறான ஆய்வுகளின் அடிப்படையில் மனிதர்களின் வளர்ச்சிக்கும் மேம்மாட்டிற்கும் ஆனந்தமான மகிழ்வான வாழ்விற்கும் மற்றும் உடல்> உள> மன> ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் மற்றும் இவற்றுடன் தொடர்புபட்ட நோய்களை தீர்ப்பதிலும் இதன் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் ஆதராங்களுடன் முன்வைக்கின்றனர். இந்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதை விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். புதிய வருடத்தில் இக் கட்டுரை உங்களுக்கு ஒரு புதிய பார்வையையும் தங்களது தனிப்பட்ட உடல்> உள> மன மற்றும் ஆன்மீக வளங்களையும் ஆற்றல்களையும் மேலும் அதிகரிப்பதற்கும் மற்றும் இவை தொடர்பான பிரச்சனைகள் பற்றியும் எவ்வாறான பார்வையை நாம் கொண்டிருக்கலாம் என்பதையும் முன்வைக்கின்றது.

இக் கட்டுரை பிரதானமாக கத்தியா ரூபியா (Katya Rubia) என்பரின் தியானம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையிலையே எழுதப்படுகின்றது. இவர் இங்கிலாந்திலுள்ள கிங்ஸ் கல்லுரியின் மன நல மருத்துவக் பிரிவின் குழந்தைகள் மற்றும் இளையவர்களுக்கான மன நலப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றனர். மேலும் சிலரின் அதரவான ஆய்வுக் கட்டுரைகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஐநாவின் உலக நல அமைப்பினதும் (WHO)

மற்றும் வேறு பல ஆய்வுகளின் (Mathers and Loncar, 2005)இ ஆதராங்களை முன்வைத்து இவர் கூறுகின்றார் 2020 ஆண்டளவில் உலகில் மன சோர்வு> மனநோய்> மன அழுத்தம்> மற்றும் இளையோரின் தற்கொலை வீதம் என பல்வேறு விதமான நோய்கள் அதிகளவில் அதிகரிக்க உள்ளதாக கூறுகின்றார். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது குணப்படுத்துவது என்பதற்காக தியானம் தொடர்பான தனது ஆய்வை மேற்கொள்கின்றார். ஏனனில் இவ்வாறான நோய்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆங்கில மருந்துகள் பல பக்க விளைவுகளை எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றார். மேலும் இந்த மருந்துகளின் விற்பனை நிறுவனங்கள் தமது ஆதிக்கம் மூலம் இலாபம் ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இந்த மருந்துகளை முக்கியத்துவப்படுத்தி அவற்றின் பாவனையை மனிதர்களுக்கு இன்றியமையாததாக்குகின்றனர். இதற்குமாறாக தியானம் என்பது பக்க மற்றும் எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லை. அதேவேளை இலவசமாக பயன்படுத்தக் கூடியதுமாகும் என்கின்றார். ஆகவே தியானம் தொடர்பாக நமது தேடலை ஆரம்பிப்போம். எதிர்காலத்தில் வரப்போகின்றன மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் வரவிடாமல் தடுப்பதற்கு இன்றே அதற்கான தடைகளை உருவாக்க முயற்சிப்போம். எதிர்காலத்தில் மட்டுமல்ல இன்று இலங்கையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னியில் கடந்த போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட> அல்லது உருவாக்கப்பட்ட உடல்> உள> மன பாதிப்புகளை> வடுக்களை> குறைகளைத் தீர்க்க> நீக்க நாம் சமயம் சாராத் தியானப் பயிற்சிகளைப் பயன்படுத்தலாம்;. இவ்வாறு பயன்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் முன்வைக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களையும் முடிவுகளையும் அதற்கான ஆதாரங்களையும் கவனிப்போம்.

மேற்குலகின் உளவியல்> பிரக்ஞை (state of consciousness) நிலையை மூன்று அடிப்படைகளாக பிரிக்கின்றது என்கின்றார் காதிய ரூபியா. ஒன்று நித்திரை நிலை: இரண்டாவது கனவு நிலை: மூன்றாவது விழித்திருக்கும் நிலை:. ஆனால் கீழக்கின் தத்துவயியல் அல்லது ஆன்மீக மெய்ஞானம் எனப்படுகின்ற விஞ்ஞானம் நான்கு நிலைகளாகப் பிரிக்கின்றது. இந்த நிலையானது மேற்குறிப்பிட்ட மூன்றுடன் “நான்காவது நிலை” அல்லது உயர்ந்த பிரக்ஞை நிலை என இன்னுமொன்றையும்; குறிப்பிடுகின்றனர் என்கின்றார். அதாவது மனதில் எண்ணங்கள் இல்லாத நிலை (No mind or no thoughts) எனவும் குறிப்பிடலாம் (Rubia, 2009). இந்த நிலை தொடர்பாக மேற்குலகில் ஆழமான புரிதல் இல்லாமையால் தியானத்தின் ஆழமான பகுதிகளை இவர்களால் நீண்டகாலமாக புரியவோ அறியோ முடியவில்லை. நீண்ட காலமாக தியானம் என்பது ஒன்றைக் குறித்து முழுமையாக கவனித்தல் என்பதாகவே புரிதல் இருந்தது. இந்த நிலை விழிப்பு நிலையில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. இதனால் தியானத்தின் நன்மைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் இந்த நிலைமைகள் இன்று மாறிக் கொண்டுவருகின்றன.

தியானம் என்பது பல வகைகள் உண்டு. மிகவும் பிரபல்லயமானது ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனிப்பது. அல்லது ரமண மகரிஸியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் கூறுவார்கள். மேற்குலகம் யோகாவையும் தியானத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றது. இவ்வாறான தியான முறைகள் எல்லாம் மேற்போக்கான அல்லது வியாபார ரீதியாக பிரபல்யமான தியானப் பயிற்சிகள். இதைத்தவிற தியானத்தில் அக்கறையுடனும் ஆழமாகவும் சென்று ஈடுபடுகின்றவர்கள் தமது மூச்சைக் மூக்கின் நுனியில் பிரக்ஞையுடன் கவனிப்பர். இது விப்பாசனா (vipassana) எனவும் குறிப்பர். மற்றது தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இது இரண்டும் முக்கியமாக பயிற்சிமுறைகள். முதலாவது புத்தரினால் பிரபால்யமாகி அன்றிலிருந்து ஆழந்த ஈடுபாடுடையவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. மற்றவகை ஐப்பான் நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் இன்னுமொரு முறையான சென் (Zen) முறையும் மேற்குலகில் பிரபல்யமானது. மற்றும் ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமான தியானப் பயிற்சி செய்வர்களிடையில் பிரபல்யமானவை. மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து முழுமனம் அல்லது நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR) என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn) என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள மன நோய்களை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த தியான பயிற்சி முறையானது குறிப்பாக புலமைக் கல்விசார் துறையில் பிரபல்யமானதுமட்டுமல்ல ஆய்வுக்காகாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதைத் தவிர ஓசோ என்பவரால் கிழக்கு மற்றும் மேற்குலகு ஆகிய இரு அறிவுகளையும் பயன்படுத்தி இக்காலத்திற்கு ஏற்றதாக புதிய தியான முறையை உருவாக்கி உள்ளார். இதை active meditation எனக் கூறுவார். இந்த தியான முறை புலமைசார் கல்வித்துறையில் அதிகளவு ஆய்வுக்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை. இந்த முறை இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நமது அடக்கப்பட்ட சகல உணர்வுகள் உணர்ச்சிகளை செயற்கையான செயற்பாட்டினுடாக வெளிப்படுத்துவது. இவ்வாறு முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின் இரண்டாவது பகுதி அமைதியாக இருந்து பிரக்ஞையுடன் நம்முள்ளே கவனிப்பது. இந்த முறையிலுள்ள நன்மை நம் அடக்கப்பட்ட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதனால் உள்ளமைதி என்பதும் அது தொடர்பான அனுபவமும் தானாக ஏற்படுகின்றது. கடந்தகால முறைகளுகும் இந்த முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் முதலாவதில் மனிதர்கள் மன அமைதியை ஒன்றைக் கவனிப்பதனுடுhக கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தமாக உருவாக்கவேண்டும். இது பலருக்க கஸ்டமானதாக இருக்கின்றது. ஏனனில் இவ்வாறு கவனிக்கும் போதுதான் மேலும் பல புதிய எண்ணங்கள் தோன்றி மனிதர்களின் கவனத்தைக் குழப்புகின்றன அல்லது திசைதிருப்புகின்றன. அதை என்ன செய்வது என தெரியாமல் தியானம் பலன் இல்லை அல்லது கஸ்டம் எனக் கூறி பலர் கைவிட்டுவிடுகின்றார்கள். ஆனால் ஓசோவின் முறையுடாக உடல் உள மன அமைதி தானாவே உருவாகின்றமை மட்டுமல்ல தியான நிலையை குறுகிய நேரத்தல் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது. இது மட்டுமின்றி குறிப்பாக இவரது முதாலாவது பகுதி பல உடல்> உள> மன பிரச்சனைகளை தீர்க்க அல்லது புர்pந்துகொள்ள வழி செய்கின்றது. இவ்வாறு உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மனக் கவலையைக் குறைத்து உடல் உள மற்றும் மன ஆறுதலை தருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் (Davidhizar and Bowen, 1992).

கத்தியாக ரூபியா (Katya Rubi) தியானத்தின் நன்மைகள் நான்கு வகையாக பிரிக்கின்றார். ஓன்று உடல் சார்ந்தது. இதில் உடலானது அமைதியாக ஓய்வாக எந்தவிதமான அழுத்தங்கள் இல்லாது இருக்கின்ற நிலை (physical level). இரண்டாவது மனம் எண்ணங்கள் சிந்தனை சார்ந்த நிலை. அதாவது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், சுய கட்டுப்பாடும் கண்காணிப்பும், மற்றும் உள் வெளி செயற்பாடுகளை ஆரோக்கியமான ஆற்றலுடன் எதிர்கொள்ளல் அல்லது முன்னெடுப்பது போன்றவை (cognitive level). மூன்றாவது உணர்ச்சிகள் சார்ந்த நிலை. இதில் எதிர் மறை உண்ச்சிகளை கடந்து நேர் மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உருவாக்கின்ற நிலை (emotional level). நான்காவது உளவியல் சார்ந்தது (psychological level). இது ஒரு மனிதரது தன்மையை (personality) நிர்ணையிக்கின்றது. அதாவது ஒருவரது உடல் உள மன சம நிலையைப் பேண உதவுகின்றது என பல ஆய்வாளர்களின் ஆய்வுகளை ஆதாரம் காண்பித்துக் கூறுகின்றனர் (Rubia, 2009).

தியானம் செய்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுவிதமான ஆய்வுகிளின்படி பல முடிவுகளுக்கு மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆய்வுகள் வெறும் தியானம் செய்பவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மூல தரவுகளிலிருந்து மட்டும் பெறப்பட்டதல்ல. மாறக அவர்களது நாளாந்த செயற்பாடுகள் பழக்கவழக்கங்களை நீண்ட காலம் கண்காணித்தும் மற்றும் இன்றைய நவீன உபகரணங்கள் (எம்ஆர்ஐ (fMRI)> ஈசிஜி(ECG)) மூலம் அவர்களது மூளை> உடல்> மூச்சு> மற்றும் இவற்றின் செயற்பாடுகள் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் அவை தரும் தரவுகளையும் கொண்டே திர்மானிக்கப்பட்டன. இந்த ஆய்வுகளினடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றது என்றும் ஆகவே மனக்குழப்பங்கள் இவர்களுக்கு குறைவாக இருப்பதனால் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றார்கள் எனவும் கூறுகின்றனர். (Rubia, 2009). இதை அறிவதற்கான மூளையில் செய்யப்பட்ட ஆய்வின்படி எண்ணங்கள் சிந்தனைகள் என்பவற்றின் செயற்பாடுகளை அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் குறைந்தளவிலான செயற்பாடுகள் தியான நிலையின் போது காணப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் தியானம் செய்பவர்களது மனம் அமைதியடைகின்றது என்கின்றனர். மேலும் ஒரு ஆய்வின்படி தியானம் செய்பவர்களின் மூளையின் இடது பகுதியின் செய்ற்பாடுகள் அதிகரித்தும் வலது பகுதி செயற்பாடுகள் குறைந்தும் காணப்படுகின்றன. ஆகவே நேர் மறையான உணர்வுகள் உணர்ச்சிகள் மற்றும் கற்பனைத் திறன்களும் படைப்பாற்றல்களும் தியானம் செய்பவர்களிடம் அல்லது மனம் ஒன்றித்தோ கடந்தோ செய்ற்படுகின்றவர்களிடம் அதிகமாக வெளிப்படுகின்றது. ஏனனில் முளையின் இடது பகுதி நேர்மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட எண்ணங்களுடனும் வலது பகுதி எதிர் மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கம் தொடர்பான எண்ணங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளதே காரணமாகும். இதேபோல் தியானம் செய்பவர்கள் குறிப்பிட்ட விடயத்தில் முழுமையான கவனம் செலுத்துவதற்கும் ஈடுபடுவதற்கும் குறிப்பாக கல்வி கற்பவர்கள் மற்றும் வேலையில் ஈடுபடுகின்றவர்களின் செயற்பாடுகள் ஆற்றலுடன் வெளிப்படுவதற்கும் நேர்மறை விளைவுகளைத் தருவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களே காரணம் எனக் கூறுகின்றனர். (Rubia, 2009).

மேலும்; தியானம் செய்பவர்கள் இளமையாக தோற்றம் தருவதற்கும் காரணம் தியானம் செய்வதால் மூளையில் சுரக்கின்ற சில ஹோமோன்கள் காரணமாக இருக்கின்றன எனவும்; கூறுகின்றனர். இத்துடன் மனச் சோர்வு மன அழுத்தம் போன்றன உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கான றோமோன்களும் சுரக்கின்ற காரணத்தினால் மனச் சோர்வு மன அழுத்தம் இன்றி மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் தியானம் செய்கின்றவர்கள் வாழ்கின்றனர் என்கிறார்கள்.

இறுதியாக நீண்ட காலம் தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களது வாழ்கை முறைகளும் அவர்களது தனி மனித தன்மைகளும் மாறுவதுடன் அதிக உடல் உள நலத்துடனும் வாழ்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறன ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஒரு விடயம்> நீண்ட கால தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர் என கூறுகின்றனர்.

சமூக மாற்றத்தில் அக்கறை இருப்பவர்கள் தமது நோக்கத்திற்காக தியானத்தையும் பயன்படுத்தலாம். ஏனனில் தியானம் தனிமனித மாற்றத்திற்கு வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும் நன்மையளிப்பதாகவும் உள்ளது. இன்றைய சமூகத்தின் பிரதான ஆதிக்க செயற்பாடுகளும் சிந்தனைகளும் ஆண் வழிப்பட்டவையும் மற்றும் தர்க்க அடிப்படையிலானவையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறன தர்க்க சிந்தனைக்கு மூளையின் வலப் பகுதியே காரணமாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்களின் வலப்பகுதியே அவர்களது சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக செயற்திறன் கொண்டு இயங்குகின்றது. ஆனால் தியானம் செய்கின்ற ஆண்களின் மூளையின் இரு அதாவது வலது மற்றும் இடது இரு பகுதிகள் துடிப்புடன் செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது (Shao & Skarlicki, 2009). இவ்வாறான மூளையின் செயற்பாடு ஆண்களை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டும் சிந்திக்கவும் செயற்படவும் வைப்பதுமட்டுமல்ல அவர்களது படைப்பாற்றலையும் வினைத்திறனையும் அதிகரிக்கின்றது. பெண்களைப் பொருத்தவரை பொதுவாக முளையின் இரு பகுதிகளும் செயற்திறன் கொண்டவையாக இயற்கையிலையே அமைந்துள்ளன. இருப்பினும் தியானப் பயிற்சி செய்கின்ற பெண்களின் படைப்பாற்றல் செயற்திறனாற்றல் என்பன தியானப் பயிற்சி செய்யாத பெண்களினதைவிட அதிகமானதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தியானப் பயிற்சியின் மூலம் நேர்மறையான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

சமூகமாற்றம் என்ற நோக்கத்திற்காக செயற்பட விரும்புகின்றவர்கள் தமது சுய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் மற்றும் தமது படைப்பாற்றல் செயற்திறன் என்பவற்றை ஆரோக்கியமான வழியிலும் நேர்மறைத் தன்மையுடனும் குறிப்பாக பிரக்ஞையுடன் வெளிக்கொண்டு வருவதற்கும் தியானப் பயிற்சி என்பது முக்கியமானது என்றால் மிகையல்ல. ஏனனில் எந்தளவிற்கு சமூக கட்டமைப்பு மற்றும் அதன் ஆதிக்க சிந்தனைகளிலும் நிறுவனங்களிலும் மாற்றங்கள் எற்படுத்துவது இன்றியமையாததோ அதேயளவு தனிமனித மாற்றமும் வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஆனால் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் முதலில் தம்மில் மாறுதலையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக செயற்படும் அதேவேளை போரினால் உடல் உள மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மனிதர்களின் உடல் உள மன பலத்தையும் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுவதற்காக செயற்படவேண்டியது அவசியமானதாகும். ஏனினில் ஒரு ஆரோக்கியமான சமூகமே> மனிதக் கூட்டமே> ஆரோக்கியமான புதிய சமுதாயத்தைக் கட்டிஎழுப்பக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் ஒவ்வொரு கணமும் நினைவில் இருந்தவேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு நம்மில் பிரக்ஞையை வளர்க்கும் தியானப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இறுதியாக இக் கட்டுரை தியானம் தொடர்பான மேற்குலகின் பார்வையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு அறிமுகம் மட்டுமே. தியானம் தொடர்பாக இனிவரும் அடுத்த தொடர் கட்டுரைகளில் தியானம் எவ்வாறு மனித உடல் உள மன ஆன்மீக ரீதியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பாக விரிவாக எழுதப்படும். குறிப்பாக தியானம் என்பது பிரக்ஞை> விழிப்புணர்வு> படைப்பாற்றல்> கற்பனை> மன அழுத்தம்> மனச் சோர்வு> உடல் நோக்கள்> புற்றுநோய்> உடல் உள மன ஆறுதல்கள்> மற்றும் மரணம்> என ஒவ்வொன்றின் மீது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி விளைவுகளை உருவாக்கின்றது எனப் பார்க்கப்படும். மேலும் சமூக மாற்றத்திற்கான பாதையில தியானத்தின் முக்கியத்தும் தியானமும் பெண்ணியமும் தியானமும் உளவியலும் தியானமும் மனமும் என பல்வேறு பகுதிகளாகவும் இனிவரும் கட்டுரைகளில் ஆராயப்படும். இம் முறை சிரிக்கும் தியானத்தின் நன்மைகள் என்ன அதனாhல் ஏற்படும் மாற்றங்கள் விளைவுகள் என்ன என்பது பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டு கட்டுரைகளுடன் சிரிக்கும் தியானமும் (வாசகர்களுக்கான) தங்களுக்கான எனது புத்தாண்டு பரிசு.

தியானம்! நம் ஒவ்வொருவரினதும் வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் காலம் விரைவில் வரவேண்டும்.

தியானம் தொடர்பான கேள்விகளுக்கும் வகுப்புகளுக்கும் பயிற்சிப் பட்டறைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

மீராபாரதி

31.12.2010

Rubia, K. (2009). The neurobiology of Meditation and its clinical effectiveness in psychiatric

disorders. Biological Psychology, 82(1)–11

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Osho (2010). The Psychology of the Esoteric, #4. http://www.osho.com/Main.cfm?Area=Magazine&Language=English

Somasundaram, Daya. (1994). தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” http://noolaham.net/project/26/2559/2559.pdf

Shao, R. & Skarlicki, D. P. (2009). The Role of Mindfulness in Predicting Individual

Performance. Canadian Journal of Behavioural Science , 41(4), 195–201

Smith, J.C. (2005). Relaxation, Meditation, & Mindfulness: A Mental Health Practitioner’s

Guide to New and Traditional.

Toneatto, T. & Nguyen, L. (2007). Does Mindfulness Meditation Improve Anxiety and Mood

Symptoms? A Review of the controlled research. Canadian Journal of Psychiatry; 52(4),

260.

Weiss, M., Nordlie, J.W., Siegel, E.P.(2005). Mindfulness-Based Stress Reduction as an

Adjunct to Outpatient Psychotherapy. Psychotherapy and Psychosomatics, 74(2). 108

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702