Tuesday, June 17, 2008

மனிதராய் இருத்தல்... ...மனிதராய் விளங்கல்....மீராபாரதி

மனிதராய் இருத்தல்... ...மனிதராய் விளங்கல்....மீராபாரதி

முதலில், இத் தலைப்பை தெரிவு செய்து எழுதுவதற்கு ஊந்து சக்;தியாக இருந்தது கனடிய மூன்றாவது தமிழீயல் மாநாட்டின் தலைப்பு. "மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்". ஆகவே இத் தலைப்பை தெரிவு செய்த இந் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். தலைப்பு அவர்களுடையது எனினும் இக் கட்டுரையில் வரும் கருத்துக்கள் நான் அறிந்தவற்றிலிருந்தும் என்னிலிருந்தும் எழுவதே... உலகெங்கும் வாழும் மனிதர்கள் இன்று மனிதர்களாக வாழவில்லை. மாறாக தாம் சார்ந்த குழுக்களின் பிரதிநிதிகளாகவே வாழ்கின்றனர். பிரதிநிதிகள் என்பதனைவிட குழுக்களின் அடையாளங்களைக் காவிச் செல்லும் ஜடங்களாக, மிருகங்களாக, பிரச்சார வாகனங்களாக இந்த பூமியில் உலாவருகின்றனர். ஏனனில், உதாரணமாக தம் மொழி சார்ந்து தமிழராகவோ, சிங்களவராகவோ, மலையாளிகளாகவோ.... மேலும் தம் மதம் சார்ந்து இந்துவாகவோ, பௌத்தராகவோ, முஸ்லிம்மாகவோ, கிரிஸ்தவராகவோ...தம்மை அடையாளப்படுத்தி உலாவருகின்றனர். இவ்வாறு தாம் சார்ந்த இன, மத, மொழி, சாதி குழுக்களின் அடையாளமாகவே மனித உடல்கள் விளங்குகின்றனர். இதைவிட கோட்பாடுகள் சித்தாந்தங்கள் அடிப்படையிலும் மனிதர்கள் முற்போக்குவாதிகளாக, மார்க்ஸிட்டாக, சோசலிசவாதியாக, கம்யூனிஸ்ட்டாக.....ஆஸ்திகர்..நாஸ்திகர்...பின்நவினத்துவ வாதிகளாக....இப்படி தமக்கென ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களை தம்மைச் சுற்றி காவிச் செல்கின்றனர். மனித அடையாளம் என்பது இங்கு மறுக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. நாம் சார்ந்த அடையாளங்களை பிரக்ஞையுடன் விமர்சனத்துக்கும் மீள்பார்வைக்கும் உட்படுத்துவதும், மேலும் இந்த அடையாளங்களை நாம் எவ்வாறு பெற்றோம் எனப் பார்ப்பதும், நமது இயற்கையான அடையாளத்தை, அதாவது மனித அடையாளத்தை மீளப்; பெறுவதை நோக்கிய பயணத்திற்கு உதவியானதாக இருக்கும். இதுவே ஒவ்வொரு மனிதரும் வன்முறையற்ற மனிதப் பண்புகள் நிறைந்ததும் இயற்கையானதும் சுய தெரிவிலமைந்ததுமான தனித்துவமானதுமான அடையாளத்துடனும், திறன்களுடனும் அதற்கான உரிமையுடனும் வாழ்வதற்கு வழிகோலும். மேலும் நமது திறன்களும் தகுதிகளும் உரிமைகளும் எந்த அடையாளமாக நாம் விளங்கப்போகின்றோம் என்பதை, நம் சுய தெரிவினுடாக தீர்மானித்து வாழ்வதற்கான வழியையும் வழங்கலாம். ஒரு பொருளை அல்லது கருத்தை, மனிதராகப் பார்ப்பதற்கும் அல்லது கேட்பதற்கும், அல்லது ஒரு தமிழராக, சிங்களவராக, இந்துவாக, பௌத்தராக, முஸ்லிமாக, கிரிஸ்தவராக அல்லது கோட்பாடுகளின் ஊடாகப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. காரணம் மனிதராக இருப்பவர் எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்கும் உட்பட்டவராக இருக்கமாட்டார். இவ்வாறானவர் ஒன்றை பார்க்கும் பொழுதோ கேட்கும் பொழுதோ அதுவாகவே பார்ப்பர் அல்லது கேட்பர். ஆனால் ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்துபவர் அதன் சிந்தனை அல்லது கருத்தாதிக்கத்திற்கு உட்பட்டு வடிகட்டி தனக்கு சார்பாகவே ஒன்றை பார்ப்பர் அல்லது கேட்பர். இவ்வாறான போக்கே, முரண்பாடுகளை மனிதர்களுக்கிடையில் குழுக்களுக்கிடையில் வளர்க்கின்றன. ஆகவே, இதிலிருந்துவிடுபட எவ்வாறு நம்மையும் நமது அடையாளங்களையும் புரிதல் மற்றும் "மனிதராய் இருத்தல்" என்றும் பார்ப்போம். முதலாவது அடையாளமிடல் நமது பிறப்பில் நடைபெறுகின்றது. நாம் இயற்கையான மனிதராய் இருப்பதும் வாழ்வதும் முதலில் மறுக்கப்படுவது நமது பிறப்பில். நாம் பிறந்த உடன் நமது உடலின் பால் உறுப்புக்களை கவனித்து நம்மை ஆணாகவோ பெண்ணாகவோ அடையாளமிடுகின்றனர். இதன் பின் நாம் இந்த அடையாளத்துடனையே விளங்கவேண்டும். ஆனால் மனிதர்கள் கருவாக தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதோ அல்லது பிறந்த பின்போ உடலினுள் நடைபெறும் இரசாயண மாற்றங்கள் மனிதரின் பால் தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இது ஒரு மனிதரின் உடல் உறுப்புகளிலும் அவர் தன்மைகளிலும் பல வகையான (சாதராண சமூகக் கண்ணோட்டத்தல் முரண்பட்ட) விளைவுகளை உருவாக்கின்றது. இது ஆண் பெண் என்ற இரு எதிர் முனைகளுக்கு இடைப்பட்ட பல்வேறு வகையான மனித உடல்களையும் தன்மைகளையும் உருவாக்குகின்றது. ஆனால் சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஆண் பெண் என இரு உடல்கள் மற்றும் அதன் இரு தன்மைகள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட இரு நிலைப்பாடுகளும் இரு கருத்தாதிக்கங்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது இரு உடல்களுக்கு மட்டுமே உறித்தான உறுப்புகளையும் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது. இதனால் ஆணும் பெண்ணும் ஒன்றுபட முடியாத எதிர் எதிர் நிலைகளில் இருப்பவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறுபட்டு, இந்த எதிர் நிலைகளுக்கு இடைபட்டு ஒரு உடலும் தன்மையும் ஒருவரில் காணப்படுமாயின் அவ்வாறான மனிதர்கள் கீழ் நிலையானவர்கள் அல்லது அசாதரண குறைபாடுடைய மனிதர்கள் என்ற கருத்தாதிக்கமே பொதுவாக நிலவுகின்றது. மேலும் இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்ல மனித இனமாகவே இவர்கள் கருதப்படுவதில்லை. இதனால் நமது உடல் குறிப்பிட்ட ஒரு உறுப்பை கொண்டிருந்தால் அதற்குரிய தன்மைகளையே நாம் வளர்ப்பதில் குறியாக இருக்கின்றோம். இதன் மூலம் நமது இயற்கையான இயல்பான தன்மையை அடக்குவதற்கு நமது சக்தியை விரயம் செய்கின்றோம். இன்றைய அல்லது எதிர்கால விஞ்ஞான உலகில் இவ்வாறான மாறுபட்ட தன்மைகள் உருவாகாமல் கருவிலையே அதற்கான சிகிச்சைகளை செய்யப்படலாம். ஆனால் ஒரு கேள்வி ஒன்று எப்பொழுதும் தொங்கு நிற்கும். அதாவது ஆண் உடல் ஆண் தன்மை பெண் உடல் பெண் தன்மை என்ற இரு வரையரைகள் மட்டுமா இயற்கையில் இருக்கின்றன? அப்படி இல்லையெனின் இந்த வரையரைகள் யாரால் தீர்மானிக்கப்பட்டன? கலப்பு உடல்களும் கலப்பு தன்மைகளும் கொண்ட மனிதர்கள், சாதாரண மனிதர்கள் இல்லையா? அல்லது ஆண் பெண் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு மனித உடல்கள் தன்மைகள் தொடர்பாக புதிய வரையரைகள் தேவையா? அல்லது இவ்வாறான வரையறைகள் இன்றி அல்லது இவற்றுக்கு அப்பாற்பட்டு வெறும் மனிதர்களாக நாம் இருக்க முடியாதா? வாழ முடியாதா? இரண்டாவது அடையாளமிடல் சாதி தொடர்பானது. ஏந்த சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பிறக்கின்றோமோ அச் சமூகத்திற்கு குடும்பத்திற்கு உரித்தான சாதிய அடையாளம் நம் மீது திணிக்கப்படுகின்றது. மனிதர்களுக்கு திணிக்கப்படும் இந்த சாதிய அடையாளம் உயர் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கும் சாதிகளுக்கு, அவர்கள் வாழ்க்கையில்; பெரும்பாலும் சாதகமாகவே அமைகின்றது. ஆனால் கீழ் சாதி என அழைக்கப்படுபவர்களுக்கு அல்லது அடக்கப்படும் சாதிகளுக்கு பாதகமானதாகவே இருக்கின்றது. கடந்த கால சாதிய வரலாற்று ஆய்வுகளை மீள நோக்கும் பொழுது அல்லது ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது மனிதர்கள் தாம் சார்ந்த தொழில் அடிப்படையிலையே பிரிக்கப்பட்டு இச் சாதிய அடையாளங்களை பெற்று விளங்குகின்றனர். இந்தப் பிரிவினைகள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பது ஆய்வு செய்ய விரும்புகின்றவர்கள் செய்ய்லாம். இன்றைய நமது புரிதல் இந்தப் பிரிவினைகள் நியாயமற்றவை. மனிதர்களில் ஒரு சாரார் தாம் நன்றாக வாழ்வதற்காக மனிதர்களின் ஒரு பிரிவினரை இச் சாதிய அடையாளத்தினுடாக பயன்படுத்தி உள்ளார்கள். இன்றும் பயன்படுத்துகின்றனர். இது மனிதர்களின் சுதந்திரத்தை மறுப்பதாகவும் அவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றது. அன்று மட்டுமல்ல இன்றும் ஒவ்வவொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள் சுதந்திரமானவர்கள் சுய அடையாளம் உள்ளவர்களாகவே இருக்கின்நனர். இவர்கள் எந்த வகையிலும் தாம் பிறந்த சமூகத்தின் அல்லது குடும்பத்தின் சாதிய அடையாளத்தை அல்லது தொழிலை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதுவாக விளங்க வேண்டியதும் இல்லை. ஆனால் சாதிய அடக்குமுறை அவர்களின் தனி மனித சுதந்திரத்தை உரிமைகளை மறுத்து அவர்கள் சார்ந்த சமூகத்தை அதன் அடையாளத்தை பின்பற்ற நிர்ப்பந்திக்கின்றது. சாதிய சங்கங்களோ சாதிய அரசியலோ இந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலையைப் பெற்றுத்தராது. மாறாக, இவை மேலும் இந்த அடையாளங்களை வலுப்படுத்தவே உதவி செய்யும். மற்றம் சிலருக்கு அரசியல் தொழில் செய்வதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் ஊன்று கோலாக இந்த அடையாளங்கள் இருக்கும். ஆகவே, இத் திணிக்கப்பட்ட சாதிய அடையாங்களில் இருந்து விடுபட்டு விடுதலை பெறுவதே அடக்கப்பட்ட மற்றும் அடக்கும் சாதிகளை சேர்ந்த மனிதர்களுக்கு விடுதலையையும் விமோசனத்தையும் தரும். அதாவது நமது இயற்கையான மனித அடையாளத்தை பெறுவதே "மனிதராய் இருத்தல்" என்பதற்கு வழி சமைக்கும். மூன்றாவது அடையாளமிடல் மதம் சார்ந்து நடைபெறுவதாகும். இது பிறப்பினாலும் மற்றும் மத மாற்றங்களினாலும் அடையாளமிடப்படுகின்றது. இங்கு மதம் என்பது மத நிறுனங்களாலையே நிறுவகிக்கப்படுகின்றது. அதாவது மத நிறுவனங்கள் தமக்கு அங்கத்துவ எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமது வரலாற்;ற தொன்மைகளை அல்லது சாதனைகளை அதிசயங்களை அல்லது மக்களின் வறுமையை பயன்படுத்தி உதவி செய்வதன் மூலம் அல்லது அரசியல் மயப்படுத்தல் என்பவற்றை பயன்படுத்துகின்றன. மேலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் எனக் கூறி மனிதர்கள் தம் மதங்களை தொடர்ந்தும் பின்பற்றுவதற்காக பயிற்சிகள் அளிக்கின்றனர். இது முளைச் சலவை போன்ற ஒரு செயற்பாடு. இதற்கு குடும்பமும் சமூகமும் பயிற்றுவிக்கும் தளங்களாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் செயற்படுகின்றன. இது மதங்களிலிருந்து மனிதர்கள் விலகுவதை தடுப்பதற்கான ஒரு ஊத்தியாகப் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. (மேலும் மனிதர்கள் எதாவது ஒரு மதத்துடன் தம்மை அடையாளப்படுத்துவதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. மதங்களைப் பின்பற்றாதவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. மதங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாஸ்திகராக அல்லது கம்யூனிஸ்ட்டாக இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் ஒன்றுடனும் தன்னை அடையாளப்படுத்தாதவரை ஏற்றுக்கொள்வதற்கு அனைவரும் தயங்குகின்றனர்). இவ்வாறான வியாபார நோக்கங் கொண்ட மதங்களிலிருந்து விலகுவதற்குப் பதிலாக தம் மத அடையாளங்களை உயர்த்திப் பிடித்து அதற்கா தமது வாழ்வை உயிரை முழுமையாக மனிதர்கள் அர்ப்பணிக்கின்றனர். ஏனனில், இதுவே இவர்களது அடையாளமாகின்றது. இம் மதங்கள், மனிதர்களை அவர்களது ஆன்மீகப் பாதையில் இருந்து திசை திருப்புகின்றன என்றால் மிகையானது அல்ல. ஏனனில் மனிதர்கள் தம் வாழ்வில் ஒவ்வவொரு கால கட்டத்திலும் தமக்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்டத் தேவையை பூர்த்தி செய்வதற்காக செல்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் இறுதிக் கட்டம் சுய கண்டுபிடிப்பு அல்லது தன்னை அறிதல் அல்லது உண்மையை அறிதல் என அர்த்தப்படுத்தலாம். ஆரம்ப கால மனிதர்கள், வேவ்வேறு பிரதேசத்தில் வாழுபவர்கள் தம்மை அல்லது உண்மையை அறிவதற்காக பல்வேறுவிதமான தேடல்களின் மூலம் பல வழிகளை முறைமைகளைப் பின்பற்றியிருக்கலாம். இவையே பிற்காலங்களில் நெறிப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன மதங்களாக குறிப்பிட்ட பிரதேசங்களில் மாற்றம் பெற்றிருக்கலாம். ஆனால் இன்று மதங்களின் நோக்கங்கள் மனித வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக பிற மதத்தினரை கொன்று தம் மதங்களை வளர்க்கவும் தம் மத அடையாளங்களை உயர்த்திப் பிடிக்கபவுமே பயன்படுகின்றது. ஆகவே, மனிதர்கள் மீண்டும் தம் மத அடையாளங்களை களைந்து தமது இயற்கையான இயல்புடன் தம்மை அறிவதற்கான, உண்மையை அறிவதற்கான தமது பாதைகளை சுயமாக தெரிவு செய்தோ கண்டறிந்தோ முன்செல்ல வேண்டியவர்களாகின்றனர்;. ஏனனில் ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். பலவகையான வேறுபட்ட திறன்களை கொண்டிருப்பவர்கள். ஆகவே ஒரு சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பிறந்ததினால் அவர்கள் பின்பற்றுவதையே பிறந்தவர்களும் பின்பற்றுவது அவருக்குள் முரண்பாடுகளை உருவாக்கலாம். இந்த முரண்பாடு அவசியமற்ற ஒன்று. தன்னை அறிதல் என்பது ஒவ்வவொருவரதும் அடிப்படை உரிமை மட்டுமல்ல வாழ்வின் பிறப்பின் நோக்கமும் ஆகும். இதற்கான பயணமும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். இது மத அடையாங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். மனிதர்களின் மீது சுமத்தப்படும் மொழி அடையாளம் என்பது சமூகங்களில் குடும்பங்களில் நடைபெறும் ஒரு வன்முறையான செயற்பாடாகும். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்த பல நாடுகளில் ஆங்கிலம் பேசுவது என்பது சமூகத்தில் உயர் அந்தஸ்து உயர் கலாசாரம் என்பதாக கருதப்படுகின்றது. ஆகவே மனிதர்கள் மீது அதன் குடும்பமும் அது சார்ந்த சமூகமும் தமது (தாய்) மொழியை விட ஆங்கில ;மொழியை கற்பதிலும் கற்பிப்பதிலும் பேசுவதிலுமே ;மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட சமூகத்தில் கற்பிக்கப்படும் பேசப்படும் பராம்பரிய(தாய்) மொழி பற்றிய பிரக்ஞை அக்கறை இவர்களுக்கு குறைவானதாகவே இருக்கின்றது. இன்று ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தம் தாய் மொழியை (தழிழ், ஹிந்தி போன்றன) கட்டாயப்படுத்தி திணிக்கின்றனர். காரணம் தமது பாரம்பரிய அடையாளம் அழியாமல் காப்பாற்றப்படவேண்டும் என்பதனாலாம். மொழியின் தேவை மறக்கப்பட்டு மனிதர்களுக்கான அடையாளமாக மட்டும் மொழி பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். ஒரு குழந்தை தனது எழு வயதிற்குள் குறைந்தது நான்கு மொழிகளிலாவது பாண்டித்தியம் பெறக்கூடிய திறன்களை கொண்டிருக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே ஒவ்வொரு மனிதரும் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெறுவது இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இன்று உலகம் சுருங்கிவிட்டது. உலகம் ஒரு கிரமாமாக மாறிவரும் சூழலில் பல நாட்டு மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உறவு கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாமல் வருகின்றன. மேலும் ஒவ்வொரு மொழியும் தன்னளவில் தனித்துவமானது தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.; ஒரு மொழியை மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு வேறுபாடுகளை காணலாம் ஆனால் உயர்வு தாழ்வை நீர்ணயிக்க முடியாதது. ஏனனில் எந்த ஒரு மொழியும் ஒன்றைவிட ஒன்று எந்தவகையிலும் குறைந்தது அல்ல. மேலும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் எல்லா மொழிகளுக்குமான மூலம் ஒன்று என்கின்றனர். இது எந்தளவிற்கு உண்மையானது என கூறமுடியாவிட்டாலும் மனிதர்கள் மொழியை தமது அடையாளமாக விளங்கி பிற மொழியை அடையாளமாக விளங்குபவர்களுடன் சண்டை போர் என்பவற்றில் ஈடுபடுவது பக்குவமற்ற பொறுப்பற்ற செயல் என்பது மட்டுமல்ல அதிகாரத்திலிருப்பவர்களால் இம் மனிதர்கள் மொழியின் பெயரால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றனர் எனக் கூறலாம். இதனால்தான் தம் மொழி அடையாளங்களை காப்பதற்காக தமது உயிரை மொழியை விட கீழானதாக மதித்தது மொழிக்காக தற்கொலை தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆல்லது ஈடுபட வைக்கப்படுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு செயற்பாடாகும். சிறு வயதிலிருந்தே இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பயின்று இயல்பாக பேசும் ஒரு மனிதரை எந்த மொழி அடையாளத்திற்குள் சேர்ப்பது. இவ்வாறன ஒரு மனிதரை ஒரு குறிப்பிட்ட மொழி அடையாளத்துடன் இணைப்பது குறுகிய மனப்போக்கல்லவா? வன்முறையான செயற்பாடாகாதா? இவற்றுடன் நாம் கற்றவற்றிலிருந்தும் நமக்கான அடையாளங்களை நமது முகமுடிகளா அணிந்து திரிகின்றோம். இது பிரக்ஞையற்ற நாம் கற்ற கருத்துக்களின் மீதான காதலினால் உருவாவது. இதுவும் மனிதர்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் வன்முறை செயற்பாடுகளையும் உருவாக்குகின்றது. பல உயிர்களையும் பலி எடுக்கின்றது என்பது நாம் கண்ட வரலாறு. அதாவது கருத்துமுதல் வாதிகள், பொருள் முதல் வாதிகள் முதல் ....பாஸிஸ நாஸிஸ வாதிகளுடாக...கம்யூனிஸ சோசலிச வாதிகளிலிலிருந்து ...தேசிய வாதிகளாகி....இன்று பின் நவீனத்துவ வாதிகளாக முரண்பட்டு சண்டையிடுகின்றனர். இவர்களது கையில் இருப்பது எல்லாம் வெறும் சொற்களும் தர்க்கீகமுமே. நாம் என்ன எழுதுகின்றோம் என்ன உரையாடுகின்றோம் என்பதில் எவ்வித பிரக்ஞையும் மற்ற இவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக முகமுடிகளாக அணிந்து மல்லுக்கு நிற்கின்னர். இவர்களிடம் தீர்வுகள் மற்றும் செயற்பாடுகள் மட்டும் கிடையாது. ஆனால் கடந்த கால வரலாற்றை அக்குவேறு ஆணிவேராக விளக்குவர் விமர்சிப்பர். மீண்டும் மீண்டும் இதையே இவர்கள் செய்வர். இன்று நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு இவர்களிம் பதில் இருக்காது. ஏனனில் இவர்களின் கோட்பாட்டில் தத்துவத்தில் இதற்குப் பதில் இருக்கர்து. இவர்களும் இந்த கோட்பாட்டு தத்துவார்த்த அடையாளங்களை முகமுடிகளை கடந்து களைந்து "மனிதர்களாக இருக்க, விளங்க" வரவேண்டியவர்களே. மனிதர்கள் தாம் வாழும் சமூகமும் அது சார்ந்த சாதி மதம் மொழி இனம் என்ற அடையாளங்களுடனும் அதன் பழக்கவழக்கங்கள் சடங்குகள் என்பவற்றுடனும் ஒன்று கலந்து வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைத்தும் மனிதர்களின் சுய தெரிவின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அதாவது சுமத்தப்பட்ட அவசியமற்ற ஒரு சுமை. ஆனாலும் வாழ்வின் மீதான காதலினாலும் வாழவேண்டி இருப்பதனாலும் இவற்றை சகித்துக் கொண்டனர். ஆல்லது எந்த விதமான கேள்விகளும் விமர்சனமும் இல்லாது சரியானது என ஏற்றுக் கொண்டனர். அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப்ட்டனர். ஏனனில் பிறந்த குழந்தைகள், குடும்பத்திடமும் சமூகத்திடமும் தனது வாழ்க்கைத் தேவைகளுக்கான தங்கியிருப்பதுவும் அவர்களது இயலாமையும் அவர்களை பாரம்பரிய பண்பாட்டு வழிக்குப் பயிற்றுவித்து பயன்படுத்த அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வசதியானதாக இருக்கின்றது. அவர்களது சுயத்தை சுதந்திரத்தை உரிமையை சமூகமோ குடும்பமோ மதிப்பதோ அங்கிகரிப்பதோ இல்லை. இதையும் மீறி கேள்வி கேட்டவர்கள் விமர்சித்தவர்கள் அடக்கப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆணாதிக்க பாலின சாதி மத மொழி அடையாளங்களும் கருத்தாக்கங்களும் ஆதிக்கம் செய்வதும் அவற்றை மீள் உறுதி செய்வதுமே மனிதர்களின் கலாசாரங்களும் பண்பாடுகளும் என்றால் மிகையல்ல. இவ்வாறு உருவானது தான், இன்றைய நமது கலாசாரம் பண்பாடு. இதை நாம் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அதற்காக உயிரையும் இராணுவமாக போராளிகளாக பலி கொடுக்கின்றோம். அதாவது நமது கலாசாரம் பண்பாடு என்பவற்றை பாதுகாப்பதானது, நாம் ஆணாதிக்கத்தை பாலியல் அடக்குமுறையை சாதியத்தை மத வாதத்தை இன வாதத்தை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திப் பாதுகாப்பதையே செய்கின்றோம் என்பதை பிரக்ஞையுடன் உணர,புரிந்து கொள்ள மறுக்கின்றோம். ஒரு புறம் நமது பண்பாடு காலாசாரத்தை பாதுகாக்க போராடும் நாம் மறு புறம் ஆணாதிக்கம் சாதியம் மத வாதம என்பவற்றின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகின்றோம். இது ஒரு முரண்பாடான செயற்பாடாக இருக்கின்றது. ஆக உண்மையான விடுதலை சுதந்திரம் என்பது இன்றைக்கு வரையான கடந்த காலத்தையும் அது நம் மீது திணித்தவற்றையும் தயவு தாட்சணியமின்றி கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டும். மேலும் பிரக்ஞையுடன் இவற்றை அணுகுவதுடன் இவற்றிலிருந்த நம்மை முறித்து அறுத்துக் கொள்ளவேண்டும். இதுவே நமக்கு புதிய பார்வையை பாதையை திறக்கும். இறுதியாக, இன்றைய மனிதர்கள் மனிதர்களாக வாழவில்லை. மறாக தமது அடையாளங்களான சாதி மதம்; மொழி இனம் ...கோட்பாடுகள் என்பவற்iறை சுமந்து கொண்டு அதுவாகவே விளங்குகின்றனர். இவர்களது வாழ்வும் இதைச் சுற்றியே பிண்ணப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த அடையாளங்களை துறப்பதே புதிய ஒரு வாழ்வுக்கு வழிவகுக்கும். மனிதர்கள் யாரக (தமிழராக, சிங்களவராக) இருப்பதல்ல, விளங்குவதல்ல இன்று முக்கியத்துவமானது. மாறாக "மனிதராக இருத்தல்" "மனிதராக விளங்கல்" என்பதே முக்கியமானதும் அவசியமானதுமாகும். இதற்கு நமது செயற்கையான இயல்புகளை முகமுடி அடையாளங்களை அழித்து அகற்றுவதுடன் நம்மை மீளுருவாக்கம் செய்யவும் வேண்டும். அதாவது நாம் மீண்டும் புதிய மனிதர்களாக பிறக்கவேண்டும். இதன்பின்பு ஒருவர் யாராக இருக்க விரும்புகின்றார் என்பதும் எப்படி வாழ விரும்புகின்றார் என்பதும் அவரது சுய தெரிவாக இருக்கவேண்டும். தெரிவுகளற்று இருப்பதும் ஒரு தெரிவே. அதற்கான சகல சந்தர்ப்பங்களும் சுதந்திரமும் உரிமைகளும் ஒருவருக்கு உறுதி செய்யப்படவேண்டும், அங்கீகரிக்கப்படவேண்டும். ஒருவர் தனக்கானதை தெரிவு செய்வதற்கான திறன்களை குழந்தைப் பருவத்திலிருந்து பயிற்றுவிக்க வேண்டும். இது இம் மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் பல வகையான ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுவதுடன் தன்னம்பிக்கையையும் வாழ்வின் மீது மதிப்பையும் நம்பிக்கையையும் வளர்க்கும். இது ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள என்பதை பறைசாற்றும். இதுவே இன்றைய மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் அவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கும் அடித்தளமிடும். ஓவ்வொரு மனிதரும் தனக்குள் நடைபெறும் அடக்குமுறைகளிலிருந்து பிரக்ஞையுடன் வெளிவருவதும் சுதந்திரமான தனித்துவமான மனிதராக வாழ்வதே தனி மனித புரட்சியாகும். இதுவே ஆரோக்கியமான பிற புரட்சிகளுக்கு வழி காட்டும். தனக்குள் புரட்சி செய்யாத மனிதர் வெளிப் புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடுவது பயனற்றதே."மனிதராக இருத்தலையும் மனிதராக விளங்குவதையும்" நோக்கியே இன்றைய நமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.-மீராபாரதிபிற்குறிப்புகள்: மனிதராக இருப்பதற்கான பயணத்தை மேற்கொள்ளும் அதேவேளை நமது சொற்களின் கருத்துக்களின் மட்டுப்படுத்தல்கள் மற்றும் அதன் மூலம் தொடர்பாக நமக்கு பிரக்ஞை இருப்பது இன்றியமையாதது. முதலாவது காரணம் ஆணாதிக்கப் பார்வையிலிருந்து இன்றும் நாம் விடுபடாமலிருப்பது நமது பல கருத்துக்களை ஆணாதிக்கதன்மை உடையனவாக்கின்றன. நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சொற்கள் மற்றும் வசனங்களில் மட்டுமல்ல கவனத்துடன் (ஆனால் பிரக்ஞையின்றி) நாம் எழுதும் அதி சிறந்த கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளில் கூட இவ்வாறன ஆணாதிக்க தன்மைகள் வெளிப்படுவது தவிர்க்கப்பட முடியாமல் இருக்கின்றது. ஆணாதிக்கம் பெண்களுக்கு எதிரான போதும் சாதாரண பெண்கள் மட்;டுமல்ல பெண் விடுதலை மற்றும் பெண்ணியம் பேசும் எழுதும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதிலிருந்து விடுபட்டவர்கள் இல்லை என்பது நாம் காணும் ஒர் உண்மை. ஏனனில் அந்தளவிற்கு நம் உடல் குருதி மனம் என்பவற்றுடன் ஒன்றுகலந்து பிரிக்கமுடியாதவாறு இந்த ஆணாதிக்கதன்மை நம்முடன் வாழ்கின்றது. ஆகவே, ஆணாதிக்க அதிகாரத்திலிருந்து விடுபடுவது என்பதன் ஒரு அங்கம் அதன் கருத்தாதிக்கத்திலிருந்தும் விடுபடவேண்டியதும் ஆகும். இந்த விடுபடலானது உடனடியாக நடைபெறக் கூடிய ஒன்றல்ல. இது பிரக்ஞையுடன் நடைபெறக்கூடிய படிப்படியான வளர்ச்சியாகவே இருக்கும். இந்த வளர்ச்சிப்போக்குக்கு, நாம் பயன்படுத்தும் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்பான பிரக்ஞை இருப்பதும், மற்றும் பிரக்ஞையுடன் வெளிப்படுத்துவதும் முக்கியமான ஒரு படியாகும். மேலும் இது தொடர்பான பிறரது விமர்சனங்களை தனிநபர் தாக்குதல்களாக பார்க்காமல் நம் தன்முனைப்புக்கு இழுக்கானது என கருதாமல் ஒரு படிப்பினையாக பிரக்ஞையுடன் உள்வாங்கலாம். இதேவேளை விமர்சிப்பவரும் தனக்கே எல்லாம் தெரியும் என்கின்ற மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து விமர்சிக்காமல் தன்னைப்போல் "மனிதராய் இருப்பதற்கான" பயணத்தில் ஈடுபட்டிருக்கும் சக (பயணியின்) மனிதரின் வளர்ச்சிக்கான முன்னேற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருத்தலே மேலானது. ஏனனில் நாளை சக பயணி, இன்று தன்னை விமர்சித்தவரை விட தன் பயணத்தில் முன்னேறிச் செல்லாம். அப்பொழுது இவர் மற்றவர் மீது விமர்சனத்தை அல்லது தனது புதிய கண்டறிந்த அல்லது அனுபவ கருத்தை முன்வைக்கலாம். இந்த நிலைமை, இப் பயணத்தில், வாழ்க்கையில் மாறி மாறி நடைபெறும் சாத்தியங்களை கொண்டுள்ளது. இன்று நடைபெறும் விவாதங்களில் இவ்வாறான ஒரு பன்பட்ட பண்பான முதிர்ந்த நிலைமையை விமர்சிப்பவர்களிடமும் கருத்துக்களை முன்வைப்பவர்களிடம் காணமுடிவதில்லை. ஓவ்வொருவரும் பிறர் என்ன கருத்தை முன்வைத்துள்ளார் என்று பார்ப்பதில்லை. மாறாக, "இவர் யார் இந்தக் கருத்தை தெரிவிப்பதற்கு", "இவருக்கு என்ன தகுதி உள்ளது", "இவர் எப்படி என்னில் குற்றம் கண்டுபிடிக்கலாம்", என்பதே மற்றவரின் கருத்து தொடர்பாக நம் மனதில் எழும் முதன்மையான, எண்ணங்களாக இருக்கின்றன. மேலும் நம் தன்முனைப்பை பாதித்தால் விளைவாக வெளிவரும் மாற்றுக் கருத்து மேலும் மோசமானதாக இருக்கின்றது. அதாவது பிறரின் கருத்துக்களை முன் மதிப்பீடு செய்து வடிகட்டியே நமக்குள் உள்வாங்குகின்றோம். இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் விவாதங்கள் ஆரோக்கியமற்ற சூழலையே விவாதத்தின் தளத்தில் மட்டுமல்ல மனிதர்களுக்கிடையிலான உறவிலும் உருவாக்குகின்றன. இந்த நிலைமை இப்படியே நீடிக்குமாயின் விவாதங்களின் நோக்கங்கள் அர்த்தமற்றும் பலனெதுவும் அடையாது இழுபடும் அல்லது நின்றுவிடும். மனிதர்களே! நண்பர்களே! நமது நோக்கங்கள் உயர்ந்தவையாக இருந்தபோதும் நாம் உயர்ந்தவர்களாக இல்லாமலிருப்பது கவலைக்கிடமானது. கருத்துக்களின் வளர்ச்சி மட்டுமல்ல நமது வளர்ச்சியும் முக்கியமானதும் கவனத்தில் கொள்ளவேண்டியதுமாகும். இன்னுமொரு முக்கியமான விடயம் யாதெனில் கடந்த கால வரலாற்றிலிருந்து விடயங்களை பெறுவதுடன் அந்த விடயங்களை நாம் அனுகும் முறையும் மற்றும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்படவேண்டியதும் முக்கியமானது. ஏனனில் விஞ்ஞானிகள் ஒரு விடயம் தொடர்பாக ஆராய்ந்து கருத்தை வெளியீடும் பொழுது கடந்த கால முடிவுகளை கருத்துக்களை கவனத்தில் கொள்வதுடன் மேலும் ஆழமான பரந்த ஆய்வுகளை மேற்கொண்டே புதிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். உதாரணமாக பொருள், சக்தி தொடர்பான ஆய்வுகள். இங்கு ஆராய்பவரும் ஆராயப்படும் பொருளும் தனித்தனியாக இருக்கின்றது. மேலும் ஆராயப்படும் பொருளிலிருந்தே தனது இறுதியான முடிவான கருத்தை ஆராய்பவர் முன்வைக்கின்றார். இதற்கும் மேலாக ஆராய்பவர் எந்த ஆதாரமும் இல்லாமல் அப் பொருள் தொடர்பாக தனது கருத்து மேலாதிக்கத்தை திணிக்க முடியாது. மாறாக அது தொடர்பான கேள்விகளை அல்லது தனது ஊகங்களை முன்வைக்கலாம். ஆனால் இந்தவிதமான போக்கு அல்லது நிலைமை தத்துவ சமூக வியல் அறிஞர்களிடம் காண்பது அறிதாக இருக்கும். ஏனனில் இவர்கள் பெரும்பாலும் கடந்தகால கருத்துக்களில் தங்கியிருப்பவர்கள். இக் கருத்துக்கள் கூட கடந்த கால ஆய்வாளர்களின் ஊகங்களாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சார்பான கருத்துக்களாக முன்வைத்திருக்கலாம். இக் கருத்துக்களின் மீது இன்று ஆராய்பவர்கள் தமது கருத்தாதிக்கத்தை பிரக்ஞையற்று ஏற்படுத்தலாம். உதராணமாக தத்துவ சமய சாதிய அரசியல் ஆணாதிக்க வரலாற்று குறிப்புகளும் ஆய்வுகளும் சார்புத்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஆய்வாளரின் பிரக்ஞையற்ற பாதிப்பும் அக் கருத்தின் மீது இருக்கலாம். ஏனனில் இங்கு ஆராய்பவரும் ஆய்வு செய்யப்படும் பொருளும் (மனமும் கருத்துக்களும்) ஒன்றுடன் ஒன்று இனைந்தும் இணையாமலும் காணப்படுகின்றது. அதாவது ஆராய்பவரும் ஆராப்படும் பொருளின் (மனதின் எண்ணங்கள்) ஒரு அங்கமாக இருக்கின்றார். அதாவது மனதிலிருந்தே நமது கருத்துக்களுக்கான எண்ணங்கள் பிறக்கின்றன. ஆனால் இந்த மனம் உள்ளெடுக்கும் பல விடயங்களை தனது கட்டுப்பாடான சிந்தனையுடாக வடிகட்டியே உள்வாங்குகின்றது. தூரதிர்ஸ்டவசமாக இது தொடர்பான பிரக்ஞை ஆராய்பவரிடம் பெரும்பாலும் இருக்காது. ஏனனில் மனிதர்கள் பெரும்பாலும் பிரக்ஞையற்றே வாழ்கின்றனர். மேலும் இது போன்ற ஆய்வுகள் சொற்களுடன் தொடர்புடையது என்பதானால் தர்க்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டு வரையறைக்கு உட்படுகின்றது. அதாவது இந்த ஆய்வுகள் சொற்காளால் நிறைந்த நம் மனதுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வாகவே இருக்கின்றது. ஆனால் நமது வாழ்வும் இந்த இயற்கையும் நம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. சொற்களால் கருத்துக்களால் விளக்கவோ விளங்கவே முடியாதது. ஆகவே, நம் மன வரையறைகளுக்குள் சுருக்க முடியாததாக இருக்கின்றது. இதனாhல்தான் இவ்வாறன கருத்துக்கள் மீதான விவாதங்கள் முடிவின்றி தொடர்வது மட்டுமல்ல தம் கருத்தை நிலைநாட்ட மனிதர்களும் குழுக்களும் வன்முறையையும் நாடிச் செல்கின்றனர். இவ்வாறன ஆய்வுகளை நாம் முன்வைக்கும் முன்பு சோக்கிரட்டிஸ் கூறிய "உன்னை அறி" என்பதை நாம் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதுவே முன்றாவது வகை ஆய்வுக்கு நம்மைக் கொண்டு செல்லலாம். இதில் ஆராய்பவர் தன்னையும் தான் ஆரயாயும் கருத்தையும் மற்றும் சமூகத்தையும் இணைத்தே ஆராய்வார். இங்கும் ஆராய்பவரும் ஆராயப்படுவதும் ஒன்றாக இருந்த போதும் ஆராய்பவர் தன் மீதான பிரக்ஞை உடையவராக இருப்பார். அதாவது ஆராய்பவர் முன்றாம் நிலையில் இருந்து ஆராய்வார். இதானல், தான் முன்வைக்கும் கருத்தில் தனது பாதிப்பை சார்புத்தன்மையைக் குறைப்பதற்கு முயற்சிப்பது மட்டுமல்ல உண்மையையும் நோக்கியும் அவரது பார்வை நெருங்கலாம். இவ்வாறான ஒரு பார்வையே மேற்கில் பைதகரஸ_ம் கிழக்கில் புத்தரும் மேற்கொண்டனர். ஆனால் இருவரும் அன்றைய ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டனர். இன்று பைதகரஸ் வெறும் கணித தேற்றம் ஒன்றுடன் மட்டுப்படுத்தப்பட்;ட கணித மேதையாகவும் புத்தர், பௌத்த மதத்தை உருவாக்கிய கடவுளாகவும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு பொருளை அல்லது கருத்தை பார்க்கும் பொழுதோ அல்லது உள்வாங்கும் பொழுதோ உடனடியாக அது தொடர்பான ஒரு மதிப்பீடு நமக்குள் எழுகின்றது. இதிலிருந்தே அப்பொருள் அல்லது கருத்து தொடர்பான நமது கருத்து மீள வெளிவருகின்றது. ஓசோவின் கூற்றுப்படி ஒரு பொருளை பார்க்கும் ஒருவருக்கும் அப்பொருளுக்கும் இடையில் நiபெறும் உறவை பொருளைப் பார்ப்பவரே முன்றாம் நிலையிலிருந்து (வெளியில்) கவனிக்கும் பொழுது அப் பொருள் தொடர்பானதும் பார்ப்பவர் பற்றியதுமான பார்ப்பவரின் விளக்கம் ஆழமானதாக அழகானதாக இருக்கின்றது. ஏனனில் இங்கு எந்தவிதமான முன் மதிப்பிடும் இருக்காது என்கின்றார்.

தனி நபர் பொறுப்பு -மீராபாரதி– Individual Responsibility

தனி நபர் பொறுப்பு -மீராபாரதி– Individual Responsibility
இக் கட்டுரை இதுவரை நான் எழுதிய, பயணித்த வாழ்வின் ஒரு முடிவுரையாக இருக்கலாம். அல்லது ஒரு புதிய பயணத்திற்கான ஆரம்பவுரையாக இருக்கலாம். எதுவாக இருக்கும் என்பதை, நிகழ்காலம் உருவாக்கும் நிகழ்வுகளினதும் அதன் விளைவுகளினதும் அடிப்படையிலே எதிர்காலமே பதில் கூறக் கூடியது. ஆகவே முடிவை காலத்திடம் கைவிட்டு என் பொறுப்பை (responsiblity) நிறைவேற்றிக்கொண்டு, இப் பயணத்தை தொடர்கின்றேன்.
ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள் (unique) . சுதந்திரமானவர்கள்(independents). அதேவேளை ஒருவரில் ஒருவரும் மற்றும் முக்கியமாக இயற்கையிலும் தங்கியிருப்பவர்கள் (interdependent). இந்தடிப்படையில் இன்று இந்த உலகமும் மனித சமூகமும் வந்தடைந்துள்ள நிலைக்கும் இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும்; ஒவ்வொரு மனிதர்களும் பொறுப்பானவர்கள். இச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்பு இல்லாதிருப்பினும் மறைமுகமான தொடர்புடையவர்கள். ஏனனில் இச் சம்பவங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றமை தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாக அமைகின்றது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள் (response) மட்டுமல்ல அவற்றுக்கு பொறுப்புடன் பதிலளிக்க (responsiblity) வேண்டியவர்களுமாகின்றனர். நமது பொறுப்புணர்வை (responsiblity) உணர்ந்து மதித்து நடக்கும் பொழுது தான் நமக்கான சுதந்திரமும் கிடைக்கின்றது. சுதந்திரம் என்பதே நமது முடிவுகளுக்கு ஏற்ப பொறுப்புணர்வுடன் செயற்படுவதே. ஆனால் பொதுவான மனித வாழ்க்கை மந்தைக் கூட்டங்களின் வாழ்க்கையாகவே அமைந்துவிடுகின்றது. மனிதர்கள் தமது கடிவாளங்களை சிலரிடம் கொடுத்துவிட்டு பொறுப்பற்று திரிகின்றனர். சுhதாரண வாழ்க்கையில் மட்டுமல்ல விடுதலைக்காக சுதந்திரத்திற்காகப் போராடுகின்றன மனிதர்களும் தமது கடிவாளங்களை தலைமைகளிடம் கையளித்துவிட்டு மந்தைக்கூட்டங்களாக கேள்விகள் ஏதுவுமின்றி பின்தொடர்கின்றனர். பெரும்மான்மையான மனிதர்களுக்கு பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கு விருப்பமில்லை. ஏனனில் அது ஆபத்தானது. ஆனால் சுதந்திரம் மட்டும் வேண்டும். தூரதிர்ஸ்டவசமாக சுதந்திரமும் பொறுப்புணர்வும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. இக் கருத்தை பின்புலமாக கொண்டு பார்க்குமிடத்து இலங்கையின் இன்றைய நிலைமைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார, இன பிரச்சனைகளுக்கும் அவர்களது விடுதலைப்போராட்டம் இன்று வந்தடைந்துள்ள இன்றைய நிலைமைக்கும் இலங்கையில் வாழ்ந்த வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியமலோ ஏதோ ஒருவகையில் பொறுப்பானவர்கள் (responsible). என்பது ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேணடிய கசப்பான ஒரு உண்மை.
பொதுவான வரலாற்றில்,சுமூகம் பெண்களை அடக்கி அடிமைகளாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்ற ஆரம்;ப காலத்திலிருந்து இன்றைய காலம்வரை, அதன் சாதகத்தன்மைகள் தம் அதிகார வாழ்வுக்குப் பயன்படுத்திய ஆண்களும், பிழை என புரிந்திருந்தும் பேசாதிருந்த அறிவுஜீவிகளும், மேலும் பெண்ணடிமைத்தனம் சரியானது என நம்பிய ஆண்களும், அடக்குமறைகளுக்கு எதிராக போராட முடிந்தும் செயலற்றிருந்த அதிகாரமையங்களிலிருந்த பெண்களும், பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட பெண்களும் ஆணாதிக்க கருத்தியலினடிப்படையிலமைந்த ஆயத விடுதலைப் போராட்டத்தில் பெண்களை பயன்படுத்(திய)துகின்ற போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்காதிருக்கின்ற மற்றும் ஆதரிக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் பெண் அடக்குமுறை தொடர்வதற்குப் பொறுப்பானவர்களே (responsible).
சாதிய அடக்குமறைகளை சமூகத்தில் நடைமுறைப்படுத்திய சாதி அதிகார படிமுறையில் மேலடுக்குகளிலிருந்த ஒவ்வொரு மனிதரும் மற்றும் தமது குடும்பங்களில் சாதிய கருத்துக்களை உட்புகுத்தி ஆக்கிரமித்தவர்களும் இவற்றை அறிந்தும் அறியாதது போல இருந்தவர்களும் கண்டும் காணாததுபோல்; இருந்தவர்களும் சாதிய அடக்குமுறை அடையாளங்களை தலித்தியம் என்ற பெயரில் தொடர்ந்தும் காவித்திரிபவர்களும் இச் சாதிய அடக்குமுறை தொடர்வதற்குப் பொருப்பானவர்களே (responsible).
மத அடிப்படையில், ஒவ்வொரு மனிதர்களின் வளர்ச்சிகளையும் முடக்கி மனிதர்களை மந்தைகளாக்கி தம் மதங்களை பின்பற்ற வலியுறுத்திய ஒவ்வொரு மதமும் அதன் தலைவர்களும் மற்றும் மதங்களை கேள்விகள் ஏதுவுமின்றி பின்பற்றும் மனிதர்களும் இன்றைய மத முரண்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களே (responsible). குழந்தைப் போராளிகள் என்பது எந்தளவிற்கு பிழையானதோ, எந்தளவிற்கு தனி மனித சுதந்திரத்தை உரிமையை மறுப்பதோ அதேயளவு சிறுவயதிலையே மதத் தூறவிகளாக குழந்தைகளை மாற்றி அவர்களை காயடிப்பதும் மனித உரிமை மீறல்களே. குழந்தைப் போராளிகள் தொடர்பாக கேள்வி எழுப்புகின்றவர்கள் இது தொடர்பாக மூச்சும் வீடாமலிருப்பது மதங்கள் எந்தளவிற்கு மனிதர்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்கின்றது என்பதற்கு சிறந்த சான்று. இது தொடர்பாக எதிர்ப்புக் குரல் கொடுக்காது செயற்படாது இருப்பவர்களும் மத முரண்பாடுகள் மட்டுமல்ல குழந்தைப் போராளிகள் உருவாவதற்கும் காரணமாகவும் பொருப்பானவர்களுமாக (responsible). இருக்கின்றனர்.
பொருளாதார சுரண்டல்களை பால் சாதி இன மதங்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறைப்படுத்தி ஏழைகளை உருவாக்கிய அனைத்து இன மத சாதியைச் சேர்ந்த பணக்காரர்களும், தாம் ஏன் ஏழைகளாகவே இருக்கின்றோம் என அறிந்தும் செயலற்றிருக்கும் அணைத்துப்பிரிவினர்களும், இதைப் பற்றி அறியாது ஏற்றுக் கொண்டு வாழும் ஏழைகளும் இச் சுரண்டல்கள் தொடர்வதற்கு பொருப்பானவர்களே (responsible).

இன அடிப்படையிலான அடக்குமறைகளையும் அழிவு நடைவடிக்கைகளையும் தமது சுய இலாபங்களுக்காகவும் நமது பிற்போக்கான நம்பிக்கைகளுக்காகவும் முன்னெடுத்த பெரும்பான்மை இனத் தலைமைகளும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களும் மற்றும் இன அடிப்படையில் அடக்குமுறைக்குள்ளான மக்களும் அதன் தலைமைகளும் சரியான வழியில் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் வெறும் உணர்ச்சிபூர்வமாகவும் பிற்போக்குத்தனமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் அதற்கு ஆதரவளித்தவர்களும் இன்றைய இன முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் அதற்கான தீர்வின்மைக்கும் பொறுப்பானவர்களே (responsible).

தேசிய விடுதலைக்காக ஆயத விடுதலைப் போராட்டத்தை பெரும்பான்மை அரசுக்கு எதிராக முன்னெடுத்தபோதும் பெரும்பான்மை இன மக்களை மனிதநேயமின்றி கொலை செய்தபோதும் இயக்கங்களுக்குள் சகோதரப் படுகொலைகள் நடைபெற்றபோதும் இயக்கங்கங்களுக்கு இடையில் மோதல்கள் நடைபெற்றபோதும் இயக்கங்களை தடை செய்து அழித்தபோதும் பேசாதிருந்த செயற்படாது இருந்த மனித உரிமைவாதிகளும் மக்களும் இன்றைய தமிழ் மக்களினதும் விடுதலைப்போராட்டத்தினதும் நிலைமைகளுக்கும் பொறுப்பானவர்களே (responsible).

மேலும் இவற்றை எல்லாம் அறிந்து ஆய்வுகள் மட்டும் செய்வதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொண்டு நடைமுறையில் மக்களுடன் இணைந்து செயற்பாடாது பொது மக்களுக்கு வழிகாட்டாது இருந்த இருக்கின்ற கல்விமான்கள் புத்திஜீவிகள் என அழைக்கப்படுவபர்களும் இன்றைய சமூகம் நாடு உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மோசமான நிலைமைகளுக்கும் பொறுப்பானவர்களே (responsible). மேற்குறிப்பிட்ட பொதுவான மனிதர்களின் வரலாற்று பொறுப்பின்மைகளினாhல் மட்டுமல்ல தனிநபர்களினது இயல்புகளும் இன்றைய நிலைமைகள உருவாவதற்கு காரணங்களாக இருக்கின்றன. எனது சிறுவயதில் எனது தகப்பனார் இருந்த கம்யூனிஸ் கட்சியின் அங்கத்தவர்களின் செயற்பாடுகளை கண்டபோதும் பதினாராம் வயதில் சூழ் நிலையால் கழக இயக்கத்தில் இணைந்து உணர்ச்சிபூர்வமாக செயற்பட்டபோதும் பின் சுய அறிவில் ஈரோஸில் இணைந்து உணர்வுபூர்வமாக செயற்பட்டபோதும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற ஊந்துதளினால் நவ சமசமாஜ கட்சியில் ஒருவருடம் இணைந்திருந்தபோதும் இறுதியாக உயிர்ப்பு சஞ்சிகையின் பின்னணியில் உருவான தமிழீழ மக்கள் கட்சியில் பணியாற்றியபோதும் மேலும் இவற்றைவிட நாடகக்குழக்களில் நடிகராகவும் சரிநிகர் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் செயற்பட்ட காலங்களில் மட்டுமல்ல இன்று சுய மாற்றத்திற்கான தேடலிலும் செயற்பாட்டிலும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் பொழுதும் அறிந்த கண்ட உணர்ந்த அனுபவித்த ஒரு உண்மை இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமும் அடிப்படையும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளே என்பது வெள்ளிப்படையானது. இத் தனிநபர் பிரச்சனை என்னையும் உட்படுத்தியதே என்பதை புரிந்துகொள்வீர்கள். ஏனனில் ஒவ்வொரு தனிநபரும் மிகக் குழைந்தைத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் பக்குவமின்றி முதிர்ச்சியின்றி குறிப்பாக பிரக்ஞை இல்லாது செயற்பட்டதை செயற்படுவதை கடந்தகால அனுபவங்களின் மூலம் அறிய அனுபவிக்க புரிந்து உணரக் கூடியதாக இருந்தது என்றால் மிகையானதல்ல.

இதற்குச் சான்றாக வரலாற்று நிகழ்வுகளே ஆதராங்களாக இருக்கின்றன. ஊதாரணமாக இரஸிய புரட்சியின் பின்னான ஸ்டாலினின் பாத்திரமும் பின்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐனநாயக வழி பாதையிலும் அதன் தலைவர்கள் வகிக்கின்ற பாத்திரங்களும் சோவியத்தின் சோசலிஸ கம்யூனிஸ மக்கள் இன்று இன மதம் சார்ந்த பிரதேச (இரஸிய...) மக்கள்களாக மீண்டும் புரட்சிக்குப் முந்திய நிலைக்கு பின்நோக்கிச் சென்றுள்ளமையும் இதுபோன்று மேலும் சீனா, கீயுபா, கம்போடியா போன்ற கம்யூனிஸ நாடுகள் என்பனவும் நமக்கு புதிய பாடங்களை கற்பிக்கின்றன. இந் நாடுகளின் மக்கள்கள் கம்யூனிஸம் என்ற தங்கக் கூட்டுக்குள் அடைக்கப்பட்டு எந்த விதமான உரிமைகளும் அற்று வாழ்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இவ்வாறான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக அழிக்கப்பட்டவையும் இழக்கப்பட்டவையும் பலி கொடுக்கப்பட்டவையும் அதிகமானNது. ஏனனில் விளைவு எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர்மாறானதாகவே இருக்கின்றது. சமூக மாற்றங்களில் அக்கறை உள்ள புத்திஜீவீகள் ஆய்வாளர்கள் இங்கு நடந்தவற்றை நடப்பவற்றை ஆய்வு செய்யலாம். இது அவர்கள் பொறுப்பு (responsiblility). இதிலிருந்து பாடங்களை கற்கவேண்டியது மனிதர்களுக்கான சிறந்த வாழ்வை ஏற்படுத்த தொடர்ந்தும் செயற்படுபவர்களின் பொறுப்பு (responsiblility).

இன்று தமிழ் பேசும் மனிதர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஒரு சாரார் புலிகள் சார்பாகவும் இன்னுமொரு பிரிவினர் புலி எதிர்ப்பாளர்களாகவும் வேறு பிரிவினர் அரசாங்கம் மற்றும் புலி சார்பு அல்லது எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர். இது தொடர்பாக சுவிஸ் ரவி அவர்கள் தேசம் வலைச் சஞ்சிகையிலும் வைகறை பத்திரிகையிலும ;எழுதிய கட்டுரை முக்கியமானது. அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு கட்டுரை. பல எழுத்தாளர்கள் தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்துக்களும் பக்கச் சார்பாக மட்டுமல்லாமல் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றது. உதாரணமாக அ.இரவி;, சோபா சக்தி, நட்சத்திரன் செவ்விந்தியன்......மற்றும் பலர், சிறந்த எழுத்தாற்றல்கள் உள்ளவர்கள். இவர்களது சிறந்த எழுத்துக்களின் மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தாம் சார்ந்த அரசியலுக்காக சக மனிதர்கள் மீது சேரு வாரியிறைப்பதும் மூன்றாம் தரபாணியில் எழுதுவதும் அழகானதல்ல.இப்படி பலர் எழுதும் எழுத்துக்கள் மூன்றாம் தர எழுத்துக்களாகவே இருக்கின்றன. இவ்வாறான எழுத்தாளர்கள் இன்று பலர் இருக்கின்றனர். இந்த எழுத்தாளர்கள் தாம் எதிர்நோக்கும் விமர்சனங்களுக்கு பொறுப்பான பதிலளிப்பதற்குப் (response) மாறக எதிர்வினையாகவே (reaction) எழுதுகின்றனர். இது இருக்கின்ற பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வழிகாண்பதற்குப் பதிலாக மேலும் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் அதிகரிக்கவே வழிசெய்கின்றனர். இதிலிருந்து இவர்களது நோக்கங்கள் என்ன என்று புரிகின்றன. இவர்கள் உண்மையிலையே பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என விரும்புவர்களாயின் பொறுப்புடன் (responsiblity) தமது எழுத்தாழுமைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஏனது தகப்பனார் கரவை.ஏ.சி.கந்தசாமி அவர்கள் எனது பிறந்த நாளான மார்கழி 31ம் திகதி 94ம் ஆண்டு எனது அம்மா மற்றும் தங்கைகளின் முன்னிலையில் ஆயதபாணிகளால் கொல்லப்பட்டார். “யார் அப்பாவை சுட்டது” எனக் கேட்ட தங்கையின் மீது குண்டு ஒன்றையும் வீசியும் சென்றார் அந்த நபர். இக் கொலையை புலிகள் செய்தனர் என ஒரு சாரரும், வேறு சிலரோ இது உட்வீட்டுப் பிரச்சனை ஆகவே புளெட்டினரே செய்திருக்கவேண்டும் எனவும், இன்னும் சிலரோ “கரவை தனது தகப்பனார் போன்றவர்” எனக் கூறும் ஈபிடிபி டக்கிளசே செய்திருக்கவேண்டும் எனவும், ஒரு சிலர் இது அரசாங்கத்தின் வேலை என பல சாத்தியக் கூறுகளை முன்வைத்தனர். வைக்கின்றனர். தங்கையின் மீது குண்டு வீசியதால் அவருக்கு தெரிந்த நபராகவும் இருக்கலாம். எனது கேள்வி என்னவெனில் யார் செய்திருந்தாலும் இக் கொலை தொடர்பாக யாரிடம் புகார் செய்வது. யாரை யாருக்கு காட்டிக்கொடுப்பது. இது தொடர்பாக எது செய்தாலும் அது முரண்பாடாக அல்லவா இருக்கும். ஆகவே நமது பொறுப்பு (responsibility) இனிமேலும் இதுபோன்ற மனித படுகொலைகள் நடைபெறாது தடுப்பதற்கு செயற்படுவதே தவிற கொலை செய்தவர் மீது குற்றம கண்டுபிடிப்பதல்ல. ஆனால ;ஒரு கொலை நடைபெற்ற பின் யார் கொலை செய்தவர் எனத் தெரியாதபோதும் தம் அரசியல் சார்ந்து எதிர் அரசியலாளர்களை குற்றம் சாட்டி அவர்கள் மீது பழிபோடுவதோ அல்லது குறிப்பிட்ட அமைப்பை குழவை இயக்கத்தை அழிப்பதாக இலட்சியவேள்வி கொண்டு எழுவதோ நமது வழமையான அரசியல் நாடகமாக இருக்கின்றது. இது எந்தவகையிலும் இன்னுமொரு கொலையை நிறுத்தவோ அல்லது குறிப்பிட்ட இயக்கங்களை குழக்களை இல்லாது ஒழிக்கவோ உதவப்போவதில்லை. ஒரு கொலையை செய்தவருக்கு எப்படி தூக்குத் தண்டனை அழிப்பத தவறானதோ அதுபோன்றதே இப்பொழுது நடைபெறும் கொலைகள் தொடர்பாகவும நாம் நோக்கவேண்டும். ஆகவே, இவ்வாறன சந்தர்ப்பங்களில் மிகவும் பொறுப்புடன் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது.

இறுதியாக இன்று காணப்படும் சமூக அரசியல் நிலைமையை மாற்றுவது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு (responsiblity). இதை நிறைவேற்றுவதற்கு நாம் ஒன்றினைவதே இருக்கின்ற ஒரே வழி. இதற்கு நமது எழுத்துக்கள் விமர்சனங்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் பிரக்ஞையுடனும் எழுதப்படவேண்டியது மிக மிக அவசியமானது. குறிப்பாக நாம் அரசாங்கத்தை, அரசாங்க ஆதரவாளர்களை, புலிகளை, புலி எதிர்ப்பாளர்களை விமர்சிக்கும் பொழுது பொதுவான தளத்திலிருந்தே விமர்சிக்கின்றோம். இது அந்தந்த அமைப்புகளில் இருக்கும் சாதாரண அங்;கத்தவர்கைளப் பாதிப்பதுடன் தம் அமைப்புகளுடன் மேலும் ஆழமாக அவர்களை ஒன்றினைக்கவே வழிவகுக்கும். ஒவ்வொரு அமைப்பிலும் இணைந்து செயற்படுவதற்கு அவர்களுக்கான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணங்கள் இருக்கும். ஆகவே நாம் மேற்குறிப்பிட்ட குழக்களை இயக்கங்களை அமைப்புகளை விமர்சிக்கும் பொழுது அதன் தலைமைகள் விமர்சிப்பதே சிறந்தது. ஏனனில் தலைமைகளே தவறான பாதையில் செல்வது மட்டுமல்லாமல் தம் அங்கத்தவர்களையும் தவறாக வழி நடத்துகின்றனர். இவ்வாறான பக்குவமான நடைமுறைகள் அவ்வவ் அமைப்புகளுடன் இணைந்திருக்கும் சாதாரண அங்கத்தவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்கும் பொதுவான ஒரு வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கும் உதவலாம். ஏனனில் இவர்கள்; மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த இயக்கங்களுடன் குழக்கழுடன் இணைந்திருக்கலாம். ஆகவே, இன்றைய நமது அவசியமான தேவை, இலங்கை அரசு முன்னெடுக்கும் இந்த போரையும், புலிகளின் தலைமை வழிநாடாத்தும் ஆரொக்கியமற்ற ஆயத வழி விடுதலைப்போராட்டத்தையும், பிற தமிழ் சிங்கள ஆயதக்குழக்களின் செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கும் இலங்கையில அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கும் ஒவ்வவொருவரும் உழைப்பதே. இதுவே மேற்கொண்டு நமது பிரச்சனைகளை முரண்பாடுகளை ஆரொக்கியமான வழிகளில் தீர்ப்பதற்கான வழிகளைக் காண உதவும்.

ஓரு விடயத்தை எனது கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டி உள்ளது. சுமூகம் என்ற ஒன்று இல்லை அல்லது இது கற்பனையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இருப்பினும் ஒரு சமூகம் எனக் கூறும் பொழுது தனி மனிதர்களின் சேர்ந்து உருhவன ஒரு குழு அடையாளமே பதிலாக கிடைக்கின்றது. ஆகவே சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் மாற்றம் (transform) மூலமே சாத்தியமானது. இத் தனிமனிதர்கள் மாறாது (transform) சமூகம் என்றழைக்கப்படுவது மாறுவதற்கு சாத்தியமே இல்லை. ஆகவே இன்றைய தேவை மனித மாற்றமும் (transform) வளர்ச்சியுமே (evolution through consciousness). ஏனனில் புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கவேண்டிய பொறுப்பு பக்குவப்பட்ட முதிர்ச்சியடைந்த பிரக்ஞையுடன் (conscious) வளர்கின்ற மாற்றத்தை (transforming) நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு தனி மனிதருடையதும் பொறுப்பு என்றால் மிகையல்ல. மாறாக மந்தைக் கூட்டங்களின் பொறுப்பல்ல...

தனி மனித மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியமானதே. தியானம் என்ற விஞ்ஞான பயிற்சி முறைகளினாலான அனுபவத்தினால் ஆதி கால மனிதர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக மெருகூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதர்களும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இப் பயிற்சிகளினுடாக ஒவ்வொரு மனிதரும் தமது பிரக்ஞையை மேலும் மேலும் வளர்க்கலாம். ஏனனில் இன்றைய கால மனிதர்கள் தமது பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்க்கமுடியாது இருப்பதற்கு தடையாக இருப்பது அவர்களது பிரக்ஞையின்மையே (unawareness). பிரக்ஞையை (conscious) வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தியான முறைகளை ஒவ்வொரு மதங்களும் உள்வாங்கி அவற்றை மனித வளர்ச்சிக்கு அல்லாது ஆன்மீக பாதைக்கு மட்டுமே உரியது என மட்டுப்படுத்தி மதம் சார்ந்த பயிற்சியாக மாற்றிவந்துள்ளனர். அதுவும் மனிதர்களின் இறுதிக்காலங்களில் மட்டுமே இவற்றை பயிற்சி செய்ய வேண்டும் எனவும் மட்டுப்படுத்தியுள்ளனர். இந்த கருத்தாதிக்கம் மனிதர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது. அகவே தியானம் தொடர்பாக இன்று எழுதி உரையாடுவது என்பது ஆன்மீகம் சார்ந்து மதம் சார்ந்தே தவறாகப் பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி இன்று பல்வேறு மதவாதிகளும் சாமியார்களும் மீண்டும் தியானத்தை தம் மதங்கள் சார்ந்து முன்னெடுத்து அதன் தார்ப்பரியத்தை சிதறடிக்கின்றனர். ஆகவே இக் கருத்தாதிக்கங்களிலிருந்து தம்மை முறித்துக்கொண்டு ஒவ்வnhரு மனிதரும் தாம் மாறுவதற்கும் (transform) பிரக்ஞையில் வளர்ச்சியடைவதற்கும் (evolution through consciousness). மதம் சாராத தியான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும். இதுவே நாம் எதிர்நோக்கும் சமூக மனித பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் எதிர்வினையாற்றாது (reaction) பொறுப்பான (response) முறையில் செயற்பட (act) வழியமைக்கும்.

நான் சிறந்த எழுத்தாளரோ அல்லது பேச்சளரோ இல்லை. ஆகவே என்னால் அழகு தமிழில் எழுதி உணர்ச்சித் தமிழில் உரக்க அழகாக பேசி மனிதர்களை நான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கவோ ஒன்றினைக்கவோ என்னால் முடியாது என்பது நான் அறிந்தது. இருப்பினும் எனது தனி நபர் பொறுப்பு (responsiblity) என்பது எனக்கும் உள்ளது என்பதனை பிரக்ஞைபூர்வமாக அறிந்து உணர்ந்தனால் என்னால் முடிந்தளவு எனது ஆற்றல்களுக்கு உட்பட்டு எழுதியும் செயற்பட்டும் வருகின்றேன். எனது எழுத்துக்களை அறிந்த நீங்கள் எனது செயற்பாடுகளை அறி வாய்ப்பு இருக்காது. ஏனனில் புகழ்பெற்றவர்களின் செயற்பாடுகளையும் குறிப்பிட்ட பல மனிதர்கள் குழவாக இணைந்து பங்கு கொள்ளும் நிகழ்வுகளையுமே ஊடகங்கள் முக்கியப்படுத்தி பிரசுரிக்கின்றன. தனிநபர்களின் சில செயற்பாடுகள் தனி நபர்; திருப்தியுடன் மட்டும் நிறைவு பெறுகின்றது என்பதே நாம் பொதுவாக அறிந்தது. ஆனால் தனிநபர் ஆரோக்கியமாகவும் பிரக்ஞையுடனும் முன்னெடுக்கும் செயற்பாடானது அதன் சக்தியானது அலைவடிவங்களாக மனிதர்கள் அறியாமலே ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது மெய்ஃவிஞ்ஞானிகளின் அனுபவம். இதில் நம்பிக்கை கொண்டு கடந்த மே மாதம் 20ம் 22ம் 25ம் திகதிகளின் டொரொன்டோவில் உள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பும் ஒன்டாறியோ பாராளுமன்றத்திற்கு முன்பும் உலகத் தமிழர் காரியாலயத்திற்கு முன்பும் சில மணித்தியாலங்கள் அடையாள உண்ணாவிரதத்தையும் தியானத்தையும் மேற்கொண்டேன். மேலும் இதை பல மனிதர்களுடன் சேர்ந்து பின்வரும் இடங்களான கனடா ஒட்டோவாவிலுள்ள இலங்கை தூதவராலயத்திற்கு முன்னாலும் கனடிய பாராளுமன்றத்திற்கு முன்னாலும் இபோன்று பிற நாடுகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது இலங்கையில் இன்று நடைபெறும் போரை நிறுத்தி அமைதியையும் சமாதானத்தையும் உருhவக்கி சமூக இன முரண்பாடுகளுக்கு தீர்வைக் காண ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிக்கலாம்; என நம்புகின்றேன்.
இதைத் தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதே குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகக்குறைந்தது ஒவ்வவொரு வார இறுதி நாட்டிகளிலும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் நாம் இப் பயணத்தை முன்னெடுக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் பலர் வீடுகளில் ஒன்றும் செய்யர்து இருப்பவர்களும் வேலையற்று இருப்பவர்களும் மற்றும் அமைதியிலும் சமாதானத்திலும் அக்கறை உள்ளவர்களும் இவ்வாறான செயற்பாட்டுப் பயணங்களில் பொறுப்புணர்வுடன் பங்கு கொள்ளலாம். இது குழக்கள் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிநபர் சுதந்திரமும் பொறுப்புணர்வும் சார்ந்த விடயம்.

ஒவ்வொரு மனிரும் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் (responsibility) பிரக்ஞையுடனும் (awareness) செயற்படுமிடத்து ஒவ்வொரு பிற மனிதருடைய சுய நிர்ணைய உரிமையும் அங்கிகரிப்பதும் மதிப்பளிப்பதும் சாதாரண வாழ்;வு முறையாக மாறும். இவ்வாறான ஒரு நிலைப்பாடு பக்குவத்தன்மை முதிர்ச்சி கொண்ட மனிதர்களே பிற மனித குழக்களின் சமூகங்களின் தேசங்களின் நாடுகளின் சுயநிர்ணைய உரிமையையும் அங்கிகரிப்பதற்கும் அங்கிகரிக்கப்படுவதற்கும் மதிப்பதற்கும் மதிக்கப்படுவதங்கும் தகுதியுடையவர்கள் ஆகுகின்றனர்.
நன்றிதொடர்புகளுக்கு awareness@rogers.comawakeningawareness.org

Monday, June 9, 2008

பிரக்ஞை

பிரக்ஞையாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்பிரக்ஞை (awareness) யாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்பிரக்ஞையாக இரு என்பது தான் ஓசோவின் பிரதான கற்பித்தல். அதாவது காலை எழுதலிலிருந்து இரவு நித்திரைக்குச் செல்லும் வரை மட்டுமல்ல நித்திரை கொள்ளும் பொழுதும்பிரக்ஞையாக இரு.இது நமக்கு பல வழிகளில் உதவிபுரிகின்றது எனக் கூறுகின்றார்.
நமது செயற்பாடுகள், சிந்தனைகள், எண்ணங்கள், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள் என்பவை தொடர்பாக நாம் பிரக்ஞையாக இருப்போமானால் அவற்றினால் உருவாகும் பாதிப்புகளிலிருந்து ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது இவரது அனுபவம். இது இவரது மட்டுமல்லஇப் பாதையில் பயணித்த பலரது அனுபவம்.
நம் பிரக்ஞையற்ற செயற்பாடுகளின்விளைவுகளையே விதி எனவும், முற்பிறவியின் பயன் எனவும் கூறுகின்றோம்.
பிரக்ஞையற்ற செயற்பாடுகள் ஒரு எதிர் செயற்பாடக (reaction) இருக்கின்றன.இவ்வகையான எதிர் செயற்பாடுகள் முடிவற்ற தொடர்ச்சியைக் கொண்டிருக்கும். இதனால் தான் நேற்று அல்லது கடந்த வருடம் அல்லது கடந்த பிறவியில்(?) நாம் முன்னெடுத்த பிரக்ஞையற்ற செயற்பாடுகளின் விளைவுகளை இன்றும் நாம் எதிர்கொள்கின்றோம். இன்றைய பிரக்ஞையற்ற செயற்பாடுகளின் எதிர் விளைவுகளை அடுத்த நிமிடம் அல்லது நாளை அல்லது அடுத்த வருடம் நாம் எதிர்நோக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பிரக்ஞையான செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது?
இதற்கு முதலில், நாம் பிரக்ஞையற்று எவ்வாறு வாழ்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நாம் ஒரு இயந்திரமாக வாழ்கின்றோம் என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. நம் நாளாந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இயந்திரத்தனமானவை. நம் உடலின் பகுதிகள் வேவ்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அதேவேளை மனம் இன்னுமொரு செயற்பாட்டைக் மேற்கொள்ளும். உதாரணமாக உணவை உட்கொள்ளும் பொழுது ஒரு கை உணவை எடுக்கும். மறு கை உடலைச் சோறியும். கால்கள் ஆடும். மனம் வேலை தொடர்பாக அல்லது காதலன் அல்லது காதலி தொடர்பாக சிந்திக்கும். இதயம் வேறு ஒரு பாதிப்பினாலோ அல்லது சந்தோசத்தினாலோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும்.
இவ்வாறு நம் உடல், மனம், ஆன்மா அனைத்தும் பிரிந்து (split) ஒரு நேரத்தில் பல வேலைகளில் பல முனைகள் நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் இணைந்த ஒருங்கினைந்த முழுமையான (total) செயற்பாட்டை நாம் முன்னெடுப்பது மிகவும் அரிது.
கலைஞர்களின் படைப்புக்கள் சிறப்பாக இருப்பதற்கு இவர்களது ஒருமித்த முழுமையான பிரக்ஞையான செயற்பாடே காரணம்.
மிகச் சில அரிதான நேரங்களில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். புதிய வேலைகளை செய்யும் பொழுது இந்த முழுமையான ஈடுபாடு உருவாகும். உதாரணமாக முதன் முதலாக கார் பழகும் பொழுது நம் ஒவ்வொரு அசைவுகள் தொடர்பாகவும் பிரக்ஞையாக இருப்போம். கை என்ன செய்கின்றது, கால் என்ன செய்கின்றது, நம் பார்வை என ஒவ்வொரு சிறிய விடயங்களிலும் நமது அவதானம் இருக்கும்.
பிரக்ஞை இருக்கும்.
ஆனால் கார் நன்றாக பழகிய பின் எந்தவிதமான அவதானமோ பிரக்ஞையோ இன்றி இவ் ஒவ்வொரு செயற்பாடுகளையும் இயந்திரத்தனமாக முன்னெடுப்போம். பழக்கப்பட்ட வீட்டு மாடுகள் போல்.
மனிதருக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வேறுபாடுதான்
இந்த பிரக்ஞை.
பிரக்ஞையான செயற்பாட்டிற்கு பிரதானமான எதிரி பிரக்ஞையற்ற மனம். மிருக நிலை என்பது நூறு வீதம் பிரக்ஞையற்ற (unconscious) செயற்பாடு.
நாம் இன்று மிருக நிலையிலிருந்து ஒரு வீதமே மனித நிலையை அடைந்திருக்கின்றோம்.சாதாரணமாக மனிதர்கள்ஒரு வீதம்;. பிரக்ஞையாகவும் (conscious) தொன்னூற்றி ஒன்பது வீதம் பிரக்ஞையற்றும் (unconscious) செயற்படுகின்றனர்.
தியானம் மூலம் படிப்படியாக இதிலிருந்து முன்னேறி நூறு வீதம் பிரக்ஞையாக (conscious) செயற்படும்போதே மனித பரிணாமவளர்ச்சி நடைபெறுகின்றது என்கின்றனர். மனிதரின் பரிணாமவளர்ச்சி தற்பொழுது முடங்கிப்போய்யுள்ளது எனக் கூறினால் மிகையாகாது. நூறுவீதம் பிரக்ஞையாக (conscious) செயற்படும் பொழுதே
அடுத்த நிலையான பிரக்ஞை (awareness) நிலைக்கு மானுடம் செல்லமுடியும்.இவர்களையே ஞானிகள் எனக் கூறுகின்றோம்.
பிரக்ஞை எனும் சாவியைக் கொண்டு நம்மை அறிந்து கொள்வதை மட்டுமல்ல இவ்வுலக பிரபஞ்ச உண்மையை அறிந்த கொள்ளவும் திறக்க முடியும் என ஓசோ மட்டுமல்ல அக்காலத்திலிருந்து பைதகரஸ், புத்தர், சோக்கிரட்டிஸ், லாவுஸ், சரசுத்ரா, இயேசு, நபி என இன்றுவரை உண்மையைக் கண்டறிந்த பலர் கூறுகின்றனர்.
இது மனிதரால் முடியாத கடினமான காரியமல்ல.
எல்லா விடயங்களும் முதல்; அடி எடுத்து வைப்பதன் மூலமே ஆரம்பமாகின்றது. தியான வழி முறைகள் நம் பிரக்ஞையான செயற்பாட்டிற்கு நம்மை தயார் செய்கின்றன. நம் உடலை, மனதை, ஆன்மாவை சுத்தம் செய்வது பிரக்ஞையான செயற்பாட்டுக்கு வழிவகுக்கின்றது.
பிரக்ஞையான (awareness) செயற்பாடு என்பது எப்பொழுதும் முழுமையானதாகவும் (totalness) பொறுப்பான செயற்பாடாகவும் (response, action) விழிப்பானதாகவும் (alert) இருக்கும். இவ்வாறான செயற்பாடுகள், இக் கனமே முழுமை பெற்றுவிடும்.இதனால் எதிர்காலத்ததில் விதியின் பயனை அனுபவிப்பதிலிருந்து விடுலை பெறலாம்.
இதற்கு இக் கணத்திலிருந்தே பிரக்ஞையாக செயற்பட வேண்டியது அவசியமல்லவா.?
நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அடிப்படை நம் கடந்தகால செயற்பாடுகள். ஆகவேபிரக்ஞையான செயற்பாடுகள் (actions) அவசியம்.
நம் செயற்பாடுகளுக்கு அடிப்படைநம் சிந்தனைகள் எண்ணங்கள். ஆகவேபிரக்ஞையான எண்ணங்கள் (thoughts) அவசியம்நம் எண்ணங்களுக்கு அடிப்படைநம் உணர்வுகள். ஆகவேபிரக்ஞையான உணர்வுகள் (feelings) அவசியம்நம் உணர்வுகளுக்கு அடிப்படைநம் சக்திகள். ஆகவேசக்திகள்; (energy) தொடர்பான பிரக்ஞை அவசியம்நமக்கு சக்திகள் வழங்குவதுநம் மூச்சு. ஆகவேமூச்சு (breathing) தொடர்பான பிரக்ஞை அவசியம்.
பிரக்ஞை நம் வாழ்வின் அடிப்படை.
இதனை பயன்படுத்தாததால் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்பதையும், நம் நாளாந்த வாழ்க்கையில் எவ்வாறு இதனைப் பயன்படுத்;தி நம் வாழ்வை ஆனந்தமயப்படுத்துவது என இனிப் பார்ப்போம்…
பிரங்க்ஞை தொடர்பாக மேலதிகமாக அறிவதற்கு ஓசோவின் புத்தகங்களை வாசியுங்கள். அத்துடன் நின்றுவிடாதீர்கள் தியானம் செய்யுங்கள் அனுபவத்தில் அறிவதற்கு.

ஏன் இந்த மலர்?

“எனக்கு ஒன்றுமே தெரியாது.என்பது மட்டும் எனக்குத் தெரியும்”
இது சோக்கிரட்டிஸ் இரண்டாயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு கூறியது.ஆனால் இன்றும் பொருந்துகின்றது.
உண்மையைத் தேடி அலைபவர்களுக்கு…
கூறியது? கேட்டது? அறிந்தது? எல்லாம் சொற்களால் அழங்கரிக்கப்பட்ட வெறும் வார்த்தை வர்ணங்கள். இந்த வர்ணங்களில் சிக்குண்டு கட்டுண்டு வெளியேற முடியாது தவிக்கின்றோம.;
எவ்வாறு வெளியே வருவது?எனத் தேடியபோது…
ஓசோ! என்ற சமுத்திரத்தைக் கண்டேன்குதித்தேன். முழ்கினேன்.
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றேன்.
சுவைத்ததோ ஒரு துளி…அது தந்த நிறைவில்தங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகின்றேன்.
நாம் பலதும் பேசுகின்றோம்;, ஆனாலும் பேசாதுவிடும் விடயங்கள் பலசக்தி! …பிரங்க்ஞை!காமம்! …காதல்! உறவு?…குழந்தைகள்!மனம்?…பண்பாடு?…கலை?… கலாசாரம்?பெண்!..பெண்மை!…ஆண்!…ஆண்மை!விடுதலை?…சுதந்திரம்?…..தியானம்!இப்படிப் பல….
ஓசோவின் வழிகாட்டலில்புதிய பார்வையில்… பாதையில்…இவற்றைப் பேச ஆரம்பித்துவைக்கின்றதுபிரங்க்ஞை எனும் இந்த மலர்;.
இவ் விடயங்;கள் தொடர்பான உங்கள் ஆய்வுகள் கருத்துக்கள்பிறரிடமிருந்து பெற்றவைசொந்த அனுபவத்தில் பெற்றவைதர்க்கத்தின் அடிப்படையில் பெற்றவை ..அனைத்தையும் எழுதுங்கள்.
பிரங்க்ஞையின் ஒளியில்ஒவ்வொருவரும் அவரவர் பாதைகளில் பயணிப்போம்விடியல் நோக்கி.. ..
புதிய பாதையில் தவழும் குழந்தை நான்.
நம்பிக்கையுடன் நடை பயில முயற்சிக்கின்றேன்ஏழு ஆண்டுகள் தவழ்ந்து வந்த பாதை இது.இந்த உடலுக்கோ நீண்ட தூரம்…இயற்கைக்கோ இரண்டடி கூட இல்லை இது.இச் சிறு தூரத்தில் நறுமணம் தந்த மலர்கள் பல…
இத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே இந்த மலர்உங்களுக்கு நம்பிக்கையும் சிறு ஓளிக் கீற்றும் தெரிந்தால்நன்றி கூறுங்கள்
ஓசோ என்ற ஞானிக்கு..
புரியவுமில்லை ஓளியுமில்லை எனில்தவறு என்னுடையதுஎன் புரிதலில் ஆழம் காணாது..மீண்டும் முயற்சிக்கின்றேன் ஆழமாகச் சென்று அறிந்து..மீண்டும் வருகின்றேன்…புதிய புர்pதலுடன்….
இந்த மலர்!
ஒரு சுட்டுவிரல் மட்டுமே…நிலவைக் காண்பது அவரவர் பொறுப்பு.
சொந்த அனுபவம் பெற முயற்சித்துப் பாருங்கள்இப் பயணத்தைபுதிய பார்வையில்…பாதையில்…அனைவரையும் மதிக்கும்ஆனந்தமயமான பாதை….ஆழகான பாதை…
இது ஒரு புதிய பாதையல்ல…
நாம் மறந்துபோன பாதை… மீண்டும் பயணிப்போம்….
vks osho மீராபாரதி

பிரக்ஞை...உள்நோக்கி ஒரு பயணம்….

அன்புடன்!இது ஒரு பயணம்!உள்நோக்கி ஒரு பயணம்….இருளிலிருந்து ஒளி நோக்கி...ஒரு நீர்த்தூளி…சமுத்திரமாக…முகிழ் இல்லா…வானவெளியை நோக்கி…இதுவரை நாம் சென்றதும்,…இன்று சென்றுகொண்டிருப்பதும்…பிரங்க்ஞையற்றஇயத்திரத்தனமானவெளி நோக்கிய பயணம்.நாம் அறிவோம் அனைத்தும்…நமக்கு வெளியே…ஒரு கையளவு என்பதை அறியாது…மனிதர்கள், பொருட்கள், விஞ்ஞானம்,அரசியல், இனவாதம், கம்ய+னிஸம்…அனைத்தும்; அறிவோம். புதிதாக அறிவதற்கு என்ன உள்ளது?அழிவிற்கான அணைத்தும் அறிவோம். கண்டுபிடிக்கின்றோம்உலகை ஏழுதரம் அழிக்கவல்லஅணு ஆயுதம் வரை…நமக்குள்ளே நாம் அறிவோமா?நான் யார்?எனக்கும் இந்த பிரபஞ்ஞத்திற்கும் என்ன தொடர்பு..எனக்கும் பிற மனிதர்களுக்கும் என்ன உறவு..பல விளக்கங்கள் அளிப்போம்பல வியாக்கியானங்கள் வழங்குவோம்.மேலும் பல தத்துவங்கள் பேசுவோம்அனைத்தும் பிற நூல்களில் வாசித்தவை..பிறரிடமிருந்து கேட்டவை..சொந்த அனுபவம்…?சொந்த அறிவு….?நம்மை அறிதல்நம்மை மாற்றும்உள் மாற்றம்வெளி மாற்றங்களுக்குகானமுதற்படி..இதுவே ஓசோ காண்பிக்கும் புது வழி.பிரங்க்ஞை!என் ஒளி!என்னையே எனக்கு அடையாளம் காட்ட…நான் யார்? என்பதை புரியவைக்க…இருளிலிருந்து வெளியே வர…ஆழந்த தூக்கத்திலிருந்து விழித்தெழ…எனது சகல செயற்பாடுகளையும்பொறுப்பானதாக மாற்ற…ஆக்கபூர்வமாக படைக்க...என் பிரங்க்ஞை வழிநடத்துகின்றது பிரங்க்ஞையான வாழ்வுமானுடத்தின் பரிணாம வளர்ச்சிக்கான வழி…பிரங்க்ஞையான பயணமேஆனந்தமான வாழ்விற்கும்விடியலுக்குமான பாதைஇது கண்டவர்கள் அனுபவித்தவர்கள் கூறியது.பிரங்க்ஞை எனும் இச் சஞ்சிகை…புதிதாய் பூக்கும் ஒரு பூ...கருவிலிருந்து பிறந்து மொட்டாகி பூவாகி…நறுமணம் பரப்ப வருகின்றது..மணந்து இன்பூறுங்கள்...இன்னுமொரு மலர் நம் “பிரங்க்ஞை” இலிருந்து மலரும் வரை…